இன்று எனக்கு பிறந்த நாளாம்...!

இன்று எனது பிறந்த நாளாம்.. நான் மட்டுமா பிறந்தேன். ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒவ்வொரு தாயும் இறந்தே பிறக்கிறாள்.அந்தவகையில் என் தாய்க்கும் இனறு பிறந்தநாள்தான் ஆதலால் அன்னையே உன்னை போற்றுகிறேன்..


தாயே
பத்து மாதங்கள் சுமந்தாய்
கருவினிலே..
பல காலங்கள் சுமந்தாய்
நெஞ்சினிலே..
உன் உயிரை
என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை
என் உடலாக்கினாய்...! 

துடி துடித்துப்போனாய்
துயரங்கள் கண்டாய்
தூக்கம் தொலைத்தாய்
என்னை ஈன்றெடுத்தாய்..
சில நிமிடங்கள்
நீயும் இற்ந்தே பிறந்தாய்
வார்த்தைகளினால்
வரைந்திட முடியா
வேதனைகளினால்...!




உலகை கண்டேன்
உன் கண்களினால்
உனர்வுகள் கொண்டேன்
உன் ஸ்பரிசங்களால்..
பாசங்களால்
பரவசம் கொடுத்தாய்.
மழலைச்சிரிப்பால்
மனம் மகிழ்ந்தாய்...!

தாயே
உன் பார்வைகளால்
பசியாருகிறேன்..
உன் வார்த்தைகளால்
கவலை மறக்கிறேன்..
உன் அன்பினால்
நானும் அழகாகிறேன்..

தாயே
உன் பாதங்களுக்கடியில்
சொர்க்கமாம்
சொல்கின்றனர்..
நான் சொல்கிறேன்
உன் மடியில்
புரண்டு விளையாடிய
காலம்தான்
சொர்க்கத்தில் வாழ்ந்த
பொற்காலம்..
   
 ஆகாயம் நோக்கி
பறந்த பறவை
இரை தேடி
பூமிக்கு வருவது போல
நான்
உலகின் எங்கு சென்றாலும்
என் ஞாபங்கள்
மட்டும்
உன்னிடம் வந்து சேரும்..!

12 comments:

S Maharajan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரியாஸ்.
எப்பவும் சந்தோஷமா இருங்க !

ஹேமா said...

கவிதையும் நெகிழ்வாய் நிறைவாய் இருக்கு ரியாஸ்.அம்மா பார்த்தா சந்தோஷப்படுவாங்க !

ஹுஸைனம்மா said...

நிஜம்தான் ரியாஸ். ஒவ்வொரு பிரசவமும் தாய்க்கு ஒரு பிறப்புதான்!! நல்ல எண்ணம்; எண்ணம்போல் வாழ வாழ்த்துகள்!!

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உண்மையான வரிகள்.கவிதை அருமை.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

yasar said...

Happy Birth day to you

தூயவனின் அடிமை said...

ஒன்பது மாதம் பத்து நாட்கள் தான். தாய் ஆம் தாய்க்கு நிகராக எதுவும் இல்லை. அந்த தாய் தன் குழந்தைக்காக படும் ஒவ்வொரு கஷ்டத்தையும் சொல்லால் முடிக்க இயலாது. ரியாஸ் அருமையாக கூறியுள்ளிர்கள்.

Philosophy Prabhakaran said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா...

Chitra said...

HAPPY BIRTHDAY!!! :-)

'பரிவை' சே.குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

goma said...

many more happy returns
வாழ்த்துக்கள் .வளம் பெற ஆசிகள்

செல்வா said...

அடடா ரொம்ப தாமதமா வந்திட்டேன் போலேயே .
சரி பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...