ஓர் அதிசயம் உள்ள வந்து பாருங்க...!

அப்பிடியே வரிசையா உள்ள போங்க காட்சி முற்றிலும் இலவசம்

...
உள்ள் வந்தாச்சா,,,,,,,


நீங்க தாய் மீது அதிக அன்புள்ளவரா இதப்பாருங்க
தாயே

நீங்க சினிமா ரசிகரா இதப்பாருங்க
என்னைக்கவர்ந்த திரைப்படம்


நீங்க கவிதை ரசிகரா இதப்பாருங்க
ஓர் மழைக்காலம்
மனசு
மழைத்துளி
சிரிக்காதே
யுத்தம்
வாழ்க்கைநீங்கள் மொக்கை ரசிகரா இதப்பாருங்க
கொலம்பஸ்


நீங்க புகைப்பட ரசிகரா இதப்பாருங்க
இங்க பாருங்க
பேசும் படங்கள்..


நீங்க சமூக ஆர்வலரா இதப்பாருங்க
மழை தருமோ இந்த மேகம்

நீங்க நல்ல கருத்துக்கொண்ட பதிவு தேடுபவரா
எண்ணங்களே வாழ்க்கையாக

எதுவுமே பிடிக்கல்லயா குறைகளையாவது சுட்டிக்காட்டுங்க.. உங்க நேரத்தை வீனாக்கிட்டேனா ரெண்டு வார்த்த திட்டிட்டாவது போங்கப்பா..
அப்பாடா கூட்டத்த சேர்க்கிறதுக்கு எப்பிடியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஓட்டு முக்கியம்

பேஸ்புக் (facebook) தேவைதானா...?

இன்றைய நவீன உலகில் மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றுக்கு மேலதிகமாக இணையமும் ஒன்றாகிவிட்டது. அவ்வளவு தூரம் மக்களை இந்த இணையம் கவர்ந்திருக்கிறது அடிமைப்படுத்தியிருக்கிறது. இணையத்தினூடே பல உபயோகங்கள், நன்மைகள் இருந்தாலும் பல தீமைகளும் கெட்ட விளைவுகளும் இருப்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இன்றைய காலகட்டத்தில் பலரின் பணம் சம்பாதிக்கும் ஊடகமாகவும் இணையம் பயன்படுகிறது.

தொழிநுட்ப வளர்ச்சிகள் கண்டுபிடிப்புகள் என்பது மனிதனுக்கு நன்மை பயக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மூலம் தீமையான விடயங்களும் நிகழாமல் இல்லை.. இன்றைய நாட்களில் இணையம் மூலம் அதி வேகமாக கோடிக்கணக்கானோரை ஆக்கிரமித்திருக்கும் இணையத்தளம் என்றால் அது பேஸ்புக் தான். அடியேனும் அதைப்பயன்படுத்துபவர்களின் ஒருவந்தான் ஆனாலும் அதுவே கதி என இருந்ததில்லை.

பேஸ்புக் உருவாக்கப்பட்டதன் நோக்கமே நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் அவர்களுக்குள் நட்பை பேனிக்கொள்ளவும், நல்ல கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் வேறு சில நல்ல உபயோகங்களுக்காகவுமே. ஆனால், இன்று பாடசாலை செல்லும் மாணவர்கள் அதிகமான நேரத்தை அதிலேயே செலவிடுகிறார்கள் அவர்களுக்கு அதிலென்ன அவ்வளவு தேவையிருக்கிறது, அதன் மூலம் அவர்களுக்கென்ன லாபம். இல்லவேயில்லை இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என சொல்லப்படுவோர் பேஸ்புக்கிக்குள் தனது பொண்ணான நேரத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பாடசாலை மற்றும் காலேஜ் செல்லும் பெண்கள். ஆண் பிள்ளைகள் வெளியில் சுற்றிதிரிவதால் அவர்களின் ஈடுபாடு இதில் கொஞ்சமே.. பெண் பிள்ளைகள் அவ்வாறில்லை வீட்டிலேயே அதிக நேரத்தை கழிப்பதால் அவர்களே இதன்பால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். வீன் அரட்டை, புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்தல் போன்றவற்றிலேயே அதிகம் ஈடுப்டுகிறார்கள். வீட்டிலே இணைய வசதி இல்லாவிட்டாலும் நெட்கபே சென்று பேஸ்புக் பயண்படுத்துபவர்களும் நம் சமூகத்தில் அதிகமதிகம். முன்பெல்லாம் பொழுது போக்கிற்கு விளையாடுவது, புத்தகம் வாசிப்பது போன்றவை. ஆனால் இன்று computer game, chatting போன்றவை காலமாற்றத்தின் விளைவுகள்

இப்போது அதிகமாக பரவிவரும் ஒரு விடயம் ஆபாசம்,செக்ஸ், செக்ஸ் அரட்டை. இது அதிகமாக பெண்களை குறி வைத்தே பதியப்படுகிறது. எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் போட்டு பெண் பிள்ளைகளை வளர்த்தாலும் அவர்கள் ஆண்களின் வசீகர, அரட்டை பேச்சுகளில் இலகுவில் மயங்கிவிடுவார்கள் மயங்க வைக்க முடியும். இப்போது பேஸ்புக்கில் பல ஆண்கள் பெண் பெயரில் உலவுகிறார்கள் இந்த லிங்க கிளிக் செய்து பாருங்கள் இதில் பெண்களின் படத்துடன் பெயருடன் இருப்பவர்கள் உண்மையில் ஆண்கள்.
https://www.facebook.com/home.php#!/profile.php?id=100001466955158
https://www.facebook.com/?ref=home#!/profile.php?id=100002491752131

இவர்கள் குறி வைப்பது இளம் வயது பெண்களை ஆரம்பத்தில் நல்ல முறையில் chat செய்து பின் செல்ல செல்ல கொஞ்சமாக கொஞ்சமாக ஆபாசத்தையும் வார்த்தைகளில் வக்கிரத்தையும் கலந்து பெண்களை ஏமாற்றுகிறார்கள். பெண் பிள்ளைகளும் இவர்களும் பெண் பிள்ளைகள்தானே என்று வெட்கமின்றி சகல அந்தரங்க தகவல்களையும் சொல்லிவிடுகிறார்கள். இவர்களின் chat. பதியப்பட்டு youtube போன்ற தளங்களுக்கு வீடியோவாக ஏற்றப்படுவதும் இவர்களின் புகைப்படங்களும் வெளிப்படுத்தப்படுவதும் பலருக்கு தெரியாத உண்மை.

பெண்களுக்கு பேஸ்புக் தவிர்க்கமுடியாது என்று கருதினால் குறைந்தபட்சம் தனது புகைப்படம், முகவரி, குடும்பத்தினரின் புகைப்படம், மேலும் தனிப்பட்ட விசயங்களை அதில் பகிராமல் இருப்பதே மிகச்சிறந்தது. ஆங்கிலேயர்கள் எதனையாவது கண்டுபிடிப்பது இலாபம் ஈட்டும் நோக்கில். ஆனால் அதனை பயன்படுத்துவதால் சீரழிவது நம் சமூகம்தான். செல்போன் களுக்கும் இதே நிலைமைதான். பேசுவதற்கென்று கண்டுபிடித்தவை இன்று பலான பலான விஷயங்களுக்கெல்லாம் பயன்படுகிறது. நம் பொண்ணான நேரத்தை வெறுமனே பேஸ்புக் அரட்டைகளில் செலவழிக்காமல் நம் வாழ்க்கைக்கு தேவையான பயனளிக்கக்கூடிய தேடல்களின் பக்கம் இன்றைய இளைஞர் யுவதிகளின் கவனம் திரும்ப வேண்டும். இதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்...
காமம்...!நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள

இலங்கை வானொலியும் நானும்..!

.சிறிய வயதிலிருந்தே வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்கள் கேட்டாலும் பொழுதை போக்குவதற்கு பல பல விளையாட்டுக்களும் நண்பர்களும் இருந்ததனால் வானொலியின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கவில்லை. சாதாரனதர பரிட்சையின் பின்னர் ஒரு மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் இருக்கவேண்டி ஏற்பட்டதால் அப்பொழுதே வானொலி நிகழ்ச்சிகள்/பாடல்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. எனக்குளிருந்த தேடல் ஆர்வம், வாசிப்பு ஆர்வம், இலக்கிய ஆர்வம் போன்றவை இவற்றுக்கு உந்துதலாக இருந்தது..


ஏனோ எல்லோரும் கேட்கிறார்கள் அதற்காக நாமும் கேட்கிறோம் என்றில்லாமல் பாடல்களை ரசனையோடு அதன் வரிகளை இசையை பாடும் பாடகரை அவதானித்து கேட்கும் பழக்கமுள்ளவன் நான் இன்றுவரை. வானொலி சேவைகளை பொருத்தவரை எல்லாவற்றையும் விரும்பி கேட்பேன். ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவை/தென்றல் நிகழ்ச்சிகள் என்னை வெகுவாக ஈர்த்தன. காலையில் பொங்கும் பூம்புனல் மாலையில் இன்றைய நேயர்/இருவர் அரங்கம் இரவில் இரவின் மடியில். அதில் இன்றைய நேயர் நிகழ்ச்சி இலங்கையின் அதிகமான நேயர்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருந்தது. அரை மணித்தியாலம் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ஒருவரின் விருப்ப தெரிவுகள் நான்கு அல்லது ஐந்து பாடல்களும் அதனை அவர் விரும்புவதற்குரிய காரணங்களும் ஒலிபரப்பாகும். இதற்காகவேண்டி பல பிரதிகளை அனுப்பிவிட்டு வானொலி அருகே காத்திருக்கும் நேயர்கள் பல ஆயிரம். அவை மாதங்கள் தாண்டியோ ஏன் வருடங்கள் தாண்டியும் ஒலிபரப்பாவதுண்டு அப்படி ஒலிபரப்பாகும் போது தன்னுடைய பெயரில் ஒலிபரப்பாகிறதே என்ற மகிழ்ச்சி வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.இதில் எனது பிரதியும் ஒரு முறை ஒலிபரப்பானது. பின் இந்த நிகழ்ச்சி இருவர் அரங்கமாக ஒரு மணித்தியாலமாக மாற்றப்பட்டது. இப்போது இந்நிகழ்ச்சி இருப்பதாக தெரியவில்லை.

இலங்கை வானொலியைப்பொருத்த எல்லா அறிவிப்பாளர்களுமே என்னைக்கவர்ந்தவர்கள்தான். பெண் அறிவிப்பாளர்களில் என்னை மிகவும் கவர்ந்த ஜெயலக்ஷ்மி சந்திரசேகர் தொகுத்து வழங்கிய பாட்டுக்கென்ன பதில் நிகழ்ச்சியும் நான் தொடர்ந்து கேட்டுவந்த நிகழ்ச்சி. ஏனைய வானொலிகளைப்பொருத்தவரை சக்தியில் ரவுஃப் தொகுத்து வழங்கும் இதயராகம் என் தூக்கத்திற்கு தாலாட்டு. இதை கேட்காமல் தூக்கம் வராத நாட்களும் உண்டு. சூரியனில் ஒலிபரப்பாகும் நேற்றைய காற்று இதில் முக்கியமாக யு எல் எம் மப்ரூக் தொகுத்து வழங்கும் புதன் வியாழன் இரவு நிகழ்ச்சிகள் என்னைக்கவர்ந்த அறிவிப்பாளர்களில் இந்த மப்ரூக்கும் ஒருவர். தற்போது அவர் எந்த வானொலியிலும் இல்லையென்றே தெரிகிறது, அவரின் இலக்கிய கவிதைத்திறமை மற்றும் கம்பீர குரல் அழகிய தமிழ் என்னை ஈர்த்தவை. புதன் கிழமை இரவுகளில் மூன்று மணித்தியாலத்திற்கு மூன்று நேயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பத்து பாடல்தெரிவுகள் அவற்றுக்கான கவிதை/விளக்கங்களுடன் ஒலிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் எனது பாடல் தெரிவுகளும் கவிதைகளும் ஐந்து தடவைகளுக்கு மேல் ஒலிபரப்பாகியுள்ளன. இதில் ஒரு தடவை மப்ரூக்கினால் எனது பாடல்தெரிவுகள்/விளக்கங்களை மிக நன்றாக இருப்பதாக அடிக்கடி அவர் மூலம் பாராட்டுப்பெறறது இன்றும் மனதோடு இனிக்கிறது..


கொழும்பில் வேலை செய்த காலப்பகுதியில் சூரியனின் தடைக்குப்பின் வெற்றி எப் எம் உதயமானது. பிறகு அதன் பக்கம் ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம் லோசன், இவரும் என்னைக்கவர்ந்த அறிவிப்பாளர்களில் ஒருவர். அவரின் அறிவிப்புத்திறனும், வேகமும், சகல துறைகளிலுமுள்ள தேடலும் என்னை வியக்க வைத்தன. அவர் தொகுத்து வழங்கும் காலைநேர நிகழ்ச்சியான விடியல் பல்சுவை விருந்து. மற்றும் அவரால் வழங்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் அருமை. நான் ஒரு கிரிக்கெட் வெறியன் என்பதால் உலகில் எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அவற்றை பார்க்கவோ அவை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளவோ ஆவலாக இருப்பேன். அவ்வாறான பொழுதுகளில் இந்நிகழ்ச்சிகளே பசி தீர்த்தன. ஆனால் எங்கள் ஊர்ப்பகுதிக்கு (அனுராதபுரம்) இன்னும் வெற்றி எப் எம் வந்ததாய் தெரியவில்லை.

படிக்கும் காலத்திலிருந்து ஏதாவது இலத்திரனியல் ஊடகத்துறையில் வேலை செய்யவேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும். அது நிறைவேறாத கனவாகப்போய்விட்டது. அதற்காக வேண்டி சக்தி டீவி, இலங்கை வானொலி, ரூபவாகினி ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வுக்கு வரும்படி அழைப்பு வந்தாலும் எனது துரதிஷ்டம் அவற்றில் ஒன்றுக்கும் செல்லமுடியவில்லை. தற்பொழுது ஒன்றரை வருடகாலமாக வெளிநாட்டில் வேலை செய்வதால் எந்த வானொலி சேவையையும் கேட்க முடிவதில்லை. சிலவற்றை இனையத்தில் கேட்க முடிந்தாலும். நேரப்பிரச்சினை காரணமாக அவற்றிலும் ஈடுபாடில்லை.. மீண்டும் கொஞ்சம் பேசுவோம் வேறொன்றைப்பற்றி.

வடைக்கதையும் வைரமுத்துவும்...!

காக்கா வடைக்கதை கவிஞர் வைரமுத்து தன் கவிதை நடையில் சொன்னால் எப்பிடியிருக்கும் ஓர் உல்டா கற்பனை,,, படித்ததில் பிடித்தது..புழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.

எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!

விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!

நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!

“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.

இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...

“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!

கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’

எழுதியவர்- ‘ஹ்யூவேக்’


மறக்காமல் ஓட்டுப்போடவும்,, நன்றி

ஓர் இரவுப்பயணம்...!!


ஓர் நாள் இரவு
ஓர் பயணம்
ஓராயிரம் மைல்கள்
ஓடியிருக்கலாம்...!
அது ஐரோப்பா என
அடையாளம்
கண்டேன்
நாகரீக
வாசனையினால்...!
பல தேசங்கள்
கடந்து
பவனிவரும் போது
மரண ஓலங்கள்
காதில் விழவே
கால் வைத்தேன்
பாரினில்...
அது ஜேர்மனிய தேசம்
அறிந்து கொண்டேன்
உயிரிழந்தவர்கள்
யூதர்கள்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்....!
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
அறியத்தந்தது எனக்கு
அவ்வார்த்தையில் வந்த
ஆணவமும்
அகங்காரமும்....!
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிடலரின் பதில்
இன்னும் ஓர் இரவில்

(மீள்பதிவு)

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics