வழி நெடுகே தொடருங்கள்...!வாழ்க்கை வாழ்வதற்கே......!

பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே.,
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம் 
வழி நெடுகே...!

வழியில் 
இடருகள் வந்தால் 
முட்டிமோதி தள்ளிவிட்டு 
பயணத்தை தொடரும் 
தொடரூந்து போல 
தொடரலாம்
நாம் போகும் 
இடத்தை நோக்கி 
மனதில் உறுதியாய்.....!

கண்னீர் வரலாம் 
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம் 
காலங்கள் உள்ளவரை 
கண்னீரானாலும் 
கவலைகளானாலும் 
நிச்சயம் 
ஓர் நாள் 
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!

இப்பயனம் 
எத்தனை போராட்டமானது 
இவ்வழியால் போனவர்கள் 
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும் 
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே...!

இரவும் பகலும் 
எம்மைத்தொடர்வது போல
இன்பமும் 
துன்பமும் 
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை 
ஒளியை வீசியவாரு 
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!

நிழலுக்காய் ஏங்கும் 
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய் 
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை 
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம் 
நிம்மதியும் வரலாம் 
பாலைவனம் 
பசுமையாகவும் மாறலாம்...!

வெற்றியின் சுவை 
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை 
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை 
வாழ்வதற்கே......!
  
மீள்பதிவாக இங்கே.... 
  
பிடித்திருந்தால் ஏதாவது சொல்லுங்கள்...
Vote Pls

இது எப்பிடியிருக்கு...!

தம்பி எப்பிடி இருக்கே...

எவண்டா நான் போற வழியில கார் நிறுத்தினது..

எப்பிடி நாங்களும் புகை பிடிப்பம்ல...

பார்த்து எவ்வளவு நாளாச்சு..இந்த பதிவுலகத்துக்கு வந்தாலே இந்த நிலைதான்...

நோ கமெண்ட்ஸ்


காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளங்கள் கண்ணீரோடு அலைபாயுமே
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது..

அடங்கொய்யால...

ஐ துப்பாக்கி..

அடி ஆத்திVOTE PLS..

உலகிலேயே அழகிய கிராமம்...!

ஏதாவது மொக்கைய போட்டு நாங்களும் பதிவு போடுவம்ல என்று சமாளிச்சிக்கிட்டிருந்தா.. ஊரைப்பத்தி தொடர்பதிவு எழுதனும்னு கோர்த்துவிட்டுட்டாங்க சகோ ஆமினா.. ரொம்ப நன்றி ஆமினா என்னையும் ஒரு பதிவரா மதித்து அழைத்ததற்கு சரி விஷயத்துக்கு போவோம்..   எங்க ஊருபபத்தி சொல்லனும்னா பெரிசா ஒன்னுமில்லங்க இருந்தாலும் சிறிசா சொல்றன்,, இப்போது வெளிநாட்டில் இருப்பதால் ஊரின் புகைப்படங்கள் இனைக்க முடியவில்லை..

இஹல புளியன் குளம்..
       
இதுதாங்க என் கிராமத்தின் பெயர் 100% இது ஒரு கிராமம்தான். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுர மாவட்டத்தில் கொழும்பு-அநுராதபுரம்/யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மரதங்கடவள டவுன் இருக்கிறது.
அதிலிருந்து 2 கிலோமீற்றர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.. இயற்கை காடுகளால் சூழப்பட்டிருக்கும் ஊரின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. இங்கே படத்தில் உள்ளது போன்றே இருக்கும் குளத்தோடு ஒற்றி ஒரு மலைத்தொடர்..

எனது உம்மா  வாப்பா   இருவரும் பிறந்தது இந்த கிராமத்தில்தான்.. எங்கள் ஊரில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன்ர் யாவரும் தமிழ் பேசுபவர்கள்தான்.. ஆனாலும்
சுற்றிலும் சிங்கள கிராமங்கள்தான். தொழிலாக விவசாயம், வியாபாரம் போன்றவை பிரதானம். அரச தொழில்கள்,  அலுவலக வேலைகளில் ஈடுபடுவோர் மிகக்குறைவு. ஆரம்பக்கல்வியை அனைவரும் ஆர்வத்துடன் தொடர்ந்தாலும் உயர்கல்வி கற்பதற்கு வசதி வாய்ப்புகளோ கல்வி நிலையங்களோ இல்லாததால்.. கல்வியில் கொஞ்சம் பின் தங்கியே கானப்படுகின்றது.  தற்போது இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு அதிகம் இடம்பெயர்கின்றனர்.. அதில் நானும் ஒருவன்.
எங்கள் வீட்டு முற்றத்து பூ மரம் ஒன்று,,,

எங்கள் ஊரைப்பற்றி மேலதிகமாக சொல்லப்போனால்,, வரலாற்று சிறப்புமிக்க
சீகிரிய   குண்று 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது இலங்கையின் சிங்கள் மண்ணனான காசியப்பன் இந்த மலையிலேயே வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.. ஒரு சிங்கம் படுத்திருப்பது போன்ற வடிவில் அமைந்துள்ள இம்மலையின் உச்சியில் மண்ணன் குளிக்க நீர்த்தடாகம் அமைத்திருக்கிறார்கள் அந்தக்காலத்திலேயே,  பெரிய ஆச்சர்யம் இது. கீழே  படத்தில் கானலாம்..
மலையின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் புகழ்பெற்றவை இது இந்தியாவின் அஜெந்தா ஓவியங்களை ஒத்ததாக கருதப்படுகின்றது....................                            

 இலங்கையில் புகழ்பெற்ற கலாவெவ குளம்.. எங்கள் ஊரிலிருந்து 10 KM தொலைவில் தாதுசேன என்ற சிங்கள மன்னனால் கட்டப்பட்டது 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில். இதன் குளக்கட்டு அனையின் நீளம் மட்டும் 7 கிலோமீற்றர்கள். சிங்கள மனனர்கள் நாட்டுக்கு என்ன செய்யாவிட்டாலும் எல்லா பகுதிகளிலும் குளங்களை கட்டிச்சென்றுள்ளனர். அதனால் இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்..   
                              
                                                  கலாவெவ குளத்து வான்.
இவர்களும் எங்கள் சொந்தக்காரர்கள்தான் அவ்வப்போது ஊருக்குள் வந்து நலம் விசாரித்து செல்வார்கள்,,
       
இதுவே போதுமென்று நினைக்கிறேன் எனது கிராமத்தை பற்றிய அநுபவம். இத்தொடர் பதிவை தொடர அழைப்பது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, கவிப்பேரரசு வைரமுத்து , இசைப்புயல் ரஹ்மான், இவங்களல்லாம் அழைக்கலாம்னு பார்த்தா இவங்களுக்கு பிளாக இல்லையாமே.. அதனாலே அந்த ஐடியாவ கைவிட்டு இவங்கள அழைக்கிறேன்..

                     

அப்பாடா கோர்த்துவிட்டாச்சு,, 

                                                                                                                                              

நானும் அழகானவந்தான்.....!


பூ மரங்களில்லா சாலைகளில்
பூவாசம் என்ன அதிசயம்
பூக்கள் நடக்கிறதோ!
பூக்கூடை நடக்கிறதோ!
இல்லை.
பூக்காரி நடக்கிறாள்
பூக்கூடையுடன்...!

இரட்டைக்குழந்தையா நீ
வெட்கமும்
உன்னோடுதான் பிறந்ததா...!

நானும் அழகானவந்தான்
என் மனதை பறிக்கிறாய்
பூக்களுடன் சேர்த்து...!

உன்னைத்தீண்ட முடியாமல்
மண்னில் விழுந்து
மரணித்துப்போகிறது
மழைத்துளிகள்...!

நேற்றைய இரவு அழகானது
இன்று அவளில்லை
அழகில்லை..!

புன்னகை தேசத்திலா
நீ பிறந்தது
நான் பிறந்தது
புன்னகை தொலைந்த தேசத்தில்..!

சொல்லப்பட்டவை யாவும் பொய்
அது கவிதை
நான் கவிஞன்..!

டிஸ்கி: இண்ட்லி ஓட்டுப்பட்டை பெற முடியாமல் உள்ளது..எனக்கு உதவி செய்ய விரும்பினால் இண்ட்லி ஓட்டுப்பட்டை கோடிங்கை copy செய்து எனது கமெண்டில் paste செய்யுங்கள்,,  லிங்க் தரவேண்டாம்,, நன்றி

நோயின்றி வாழ வேண்டுமா நீர் அருந்துங்கள்.

vote pls..

தினமும் சாகிறார்கள்...!


வழிந்தோடுகிறது
நேற்று பெய்த மழை நீர்
வயல் வரப்புகளிலும்
ஏழை விவசாயிகள் முகங்களிலும்
பசுமையாக...
வாழ்க்கையே
வானத்து  மழையோடுதான்
வந்து பொழிந்தால்
வளம்பெறும் அவர்களுலகம்...
வறண்டு போகிறது
வயல்களும்
வயிறுகளும்
வர மறுக்கும் மழையினால்...
இயற்கையோடுதான் பிறப்பும்
இயற்கையோடுதான் வாழ்வும்
இயற்கையோடுதான் சாவும்
தினமும் சாகிறார்கள்
தினமும் வாழ்வதற்காய்....

இது வெறும் கற்பனை அல்ல.. எங்கள் ஊர் பகுதிகளில் வானத்து மழையை மாத்திரம் நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்க்கை....

சும்மா இதையும் கிளிக் பன்னிட்டுப்போங்க,,,, நண்பனின் வலைத்தளம்..
பழம் சாப்பிட ஆசையா
vote pls...

குழந்தைகள் உலகம்...!


என்றுமே
அழகானதுதான்
குழந்தைகள் உலகம்
கவலைகள் கிடையாது
கண்ணீர் கிடையாது..
பூக்களால்
செய்யப்பட்ட மனசு
புன்னைகைகளால்
செய்யப்பட்ட அழகு..
அவ்வப்போதாவதாவது
சென்று வாருங்கள்
அவர்கள் உலகத்திற்கு..
அன்பு பாசம் நிம்மதி
அங்கே இலவசம்...
அவர்களோடு கொஞ்சுங்கள்
பேசுங்கள்
சிரியுங்கள்
மழலையாகிவிடுங்கள்
மறந்துவிடுங்கள்
உங்களை...
பிஞ்சு மழலை மொழியை
அனுபவியுங்கள்
உலகின்
அனைவருக்கும் புரியும்
அழகிய மொழியது...
புன்னகை இனிப்புகள்
கொடுங்கள்
இனிக்கும் அவர்கள் மனசு...
பூக்களாய் நேசியுங்கள்
பரிசாய் பெறுங்கள்
புன்னகைகளை...

VOTE PLS..

நீ...!

எழுத நினைக்கும்
கவிதை நான்....
வர மறுக்கும்
வார்த்தை நீ....

இறந்துபோகிறேன் நான்...!

பிறந்துவிட்டேன்
மனிதனாய்
வாழத்துடிக்கிறேன்
மனிதனாய்
இறந்துவிட நினைக்கிறேன்
மனிதனாய்...
மனிதனாகவே இல்லை நான்
சில நேரங்களில்.
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
அடிமையாகிப்போகிறேன் நான்
காமத்திற்கும்
மோக்த்திற்குமிடையில்
மண்டியிட்டு...
இறந்துபோகிறேன் நான்
மீண்டும் எழுகிறேன்
இன்னும் வரவில்லை
மரணம்...!

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics