சந்தோஷத்திற்கு என்ன வழி- The way to happiness.

வெற்றியை தேட எவ்வளவோ வழிகள் இருக்கிறது ஆனால் சந்தோஷத்தை தேட என்னதான் வழி? அது வெளியில் எங்கும் இல்லை வெளியில் தேடினாலும் கிடைக்காது. அது நமக்குள்தான் இருக்கிறது நமக்குள் இருந்துதான் அது மலர வேண்டும். நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஏதேனும் வழிகள் உண்டா? ஆம் இதற்காகவேண்டியே ஒரு புத்தகம் இருக்கிறது, நாமாக சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி என்பதை மிக அழகாக விபரிக்கிறது The way to happiness என்ற புத்தகம். 21 வழிமுறைகளை சொல்லி அவைதான் சந்தோஷத்தின் அடிப்படை வழிகள்,அவற்றை பின்பற்றினால் சந்தோஷம் நிச்சயம் என்கிறது.
இப்புத்தகம் 1980 ம் ஆண்டு Ron Hubbard என்பவரால எழுதப்பட்டது இது உலகம் முழுக்க 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ( இது கிண்ணஸ் சாதனையும் கூட) அப்படி அந்த புத்தகம் கூறும் 21 வழிமுறைகள் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்

1. எப்போதும் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், சுகாதாரமாக உடல் நலத்தை பேனிக்கொள்ளுங்கள். நேரத்து உணவு,தூக்கம்

2. மனதை கட்டுப்படுத்த பழகுங்கள், உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள் பின் விளைவுகளை சிந்தியுங்கள்

3. உங்கள் மனைவிக்கு அல்லது உறவுகளுக்கு, நண்பர்களுக்கு விசுவாசமாகயிருங்கள்

4. கொஞ்சமாவது குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். உங்கள் வயசு எதுவானாலும் சரி

5. பெற்றோரை மதியுங்கள் அவர்களுக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
6. மற்றவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஓர் நல்ல முன்னுதாரணமாய் விளங்குங்கள்.

7. உண்மையே பேசுங்கள், அது எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை
8. யாரையும் கொல்லவோ காயப்படுத்தவோ செய்யாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எந்த இலாபம் வந்தாலும் சரி!

10. சமூகத்திற்கு அரசாங்கத்திற்கு நல்ல விடயங்களை செய்யுங்கள், அல்லது முயற்சியாவது எடுங்கள்.

11. ஒரு செய்யும் நல்ல விடயங்களை தட்டிக்கொடுங்கள் கெடுத்துவிடாதீர்கள்
12. உங்கள் சுற்றுச்சூழலை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்.
13. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள்,திருடாதீர்கள்!

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராகயிருங்கள்.
15. ஒப்பந்தங்களை மீறாதீர்கள்,கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்.
16. சோம்பேறியாக சும்ம இருக்காதீர்கள்,ஏதாவது வேலை செய்யுங்கள்

17. கல்வி என்பது முடிவில்லாதது எப்போதும் கற்றுக்கொண்டேயிருங்கள்.
18. மற்றவர்களின் மத உணர்வுகளை மதியுங்கள் கேலி செய்யாதீர்கள்.
19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று
நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்கு செய்யதீர்கள்

20. அதேபோன்று, அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் அவர்களையும் நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது எதுவுமில்லையென்று கவலைப்படாதீர்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.. ஈத் முபாரக்!

தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!!


நம் சமூகத்தில் பெண்கள் என்பவர்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள். அவர்கள் மனதை புரிந்து நாம் செயற்படுகிறோமா! பெற்ற தாயை மதிக்கிறோம் அவள் நம்மை பத்துமாதம் சுமந்து பெற்றதால், சகோதரிகளை மதிக்கிறோம் நம்முடன் கூடப்பிறந்தவள் என்பதால், மனைவியை மதிக்கிறோம் நம்முடனே கூடவே வாழ்பவள் என்பதால். மற்ற பெண்கள் விடயத்தில் நம் பார்வை எவ்வாறிருக்கிறது.

பெண்களை காமப்பொருளாகவே பார்க்காதீர்கள், அதையும் தாண்டி அவர்களிடம் ஓர் புனிதம் இருக்கிறது! அதுதான் தாய்மை. அதை மதிக்காவிட்டாலும் கலங்கம் செய்யாமல் இருக்கலாமே. பெண்களின்றி இவ்வுலகில் இன்பமேது, அழகேது, நாமேது. அவர்களையும் சாதாரணமானவர்களாகவே பாருங்கள். ஆண்களை போலவே அவர்களுக்குள்ளும் உணர்வுகள் உண்டு, ஆசைகள் உண்டு குடும்பத்தை வழிநடத்தும் காப்பாற்றும் கடமையும் உண்டு. அதை மதியுங்கள் போற்றுங்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள். ஆண்களிடத்தில் வேறொன்றும் அவர்கள் பெரிதாய் எதிர்பார்ப்பதில்லை!

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களுடனே ஒன்றித்து வாழ்கிறோம். பிறந்ததும் தாய் மடி வளர்கையில் சகோதரிகள் அரவனைப்பு. வளர்ந்து மணந்தபின் மனைவியின் பாசம், வயதானவுடன் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் அன்பு. பெண் தொடர்பில்லாமல் நம் வாழ்கை நினைத்தும் பார்க்க முடியாதது.. எல்லோரையும் தாயாக சகோதரியாக பார்க்க வேண்டுமென்பதில்லை. அது சாத்தியமுமில்லை.. ஒரு சக மனிதராக மனுசியாக மதித்தாலே போதும்..!
அன்மையில் நான் பேஸ்புக்கில் வாசித்த வசனகவிதையொன்று இங்கே.  . புல்லட் பாண்டி என்பவருக்கு சொந்தமானது.

மதிலை தாண்டி
அழகாய் பெரிதாய் வளர்ந்திருக்கும்
செம்பருத்தம் பூவின் செடி.
கிணற்றடில் இருந்து நீர் இறைத்து
இரு கையிலும் குடம் பிடித்து
எல்லா செடிகளுக்கும் நீர் இறைப்பது
எனது காலை வேலை.
இன்றும் செம்பருத்தம் பூக்கள்
அழகாய் அதிகமாய் பூத்திருக்கின்றன
வழக்கம் போல் நீர் ஊற்றும்
வேலையில் நான் இருந்தேன்.
"மாமி ........." .....ம் வந்துவிட்டாள் எதிர்வீடு ராட்சசி
"என்னம்மா........ ."
"பூ வேணும் மாமி...... "
" பறிச்சிகோ.........ஏலே...பாண்டி ...பறிச்சிகுடு "
"எத்தனை வேணும் ......".......இது நான்
"எல்லாம் பறிச்சி குடுடா ....".......அம்மா.
வெறுப்புடன் எல்லாம் பறித்து நீட்ட
அவள் தாவணியில் ஏந்தி கொண்டாள்
கோபமும் வெறுப்புமாய் இருந்தது
அப்பொழுது எனக்கு தெரியாது
" செம்பருத்தி பூ ........மாதவிலக்கிற்கு
சிறந்த மருந்து என்றோ.....அல்லது
பல மண பொடியுடன் செம்பருத்தியும்
கருவேப்பிலையும் தேங்காய் எண்ணெயில்
.சேர்த்து காய்த்து தலைக்கு தடவினால்
நன்கு முடிவளரும் என்றோ ..........."
காலம் தான் சில விசயத்திற்கு
பதில் தருகிறது..!


டிஸ்கி- இப்போது உங்கள் வசதிகருது தமிழ்மன ஓட்டுப்படடை இரு இடங்களில் கீழேயும் மேலேயும். நிறையப்பேரு தமிழ்மனத்த கானல்லன்னு சொல்லிட்டு எஸ்கேப்பாகிட்றாங்க. அதுக்குத்தான் இது. தமிழ்மன ஒட்டுப்பட்டை கீழே கொண்டு வர உதவிய அண்ணன்பன்னிக்குட்டி  ராமசாமிக்கு மனமார்ந்த நன்றிகள்.
குஸ்கி- நம்ம பதிவுலக நண்பர்கள் ரொம்பப்ப்ப்ப் நல்லவர்கள் என்ன உதவி கேட்டாலும் செய்றாங்க.. அதற்காகவேண்டி கடன் எல்லாம் கேட்கப்படாது!
முஸ்கி- எல்லாம் படிச்சாச்சா பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க பிடிக்கல்லன்னாலும் ஓட்டுப்போடுங்க.

நிர்வாணமாய் நிலவு..!!


நிர்வாணமாய் நிலவு
நாணம் வரவே நகர்கிறாள்
மேகப்போர்வைக்குள்..
வானவெளியெங்கும்
உல்லாசமாய் அலையும்
அழகியவள்..
இரவுக்காதலனோடு
இன்பம் கானவந்த
காதலியவள்....
அவள் காதல் பார்வைகளே
ஒளியாக
காதல் பேச்சில்
தெறிக்கும் எச்சில்களே
பனித்துளிகளாக
உருமாறி வருகிறது
உலகத்திற்கு....
சூரிய ராட்சசனுக்கு பயந்த
இரவின் காவலாளி
இருள் ஓடிவிட
இரவுடனிருந்தவள்
உறவு கலைத்து
விடைபெறுகிறாள்
விடியலுக்கு முன்....
இன்னுமொரு உறவை
இன்னுமொரு இரவை
எதிர்பார்த்து....
எனக்கும் பிடிக்கிறது
அவளைப்போலவே
அந்த இரவை..!!VOTE PLS Tamilmanam and Indli

ஈழப் போராட்டமும் இனப்படுகொலைகளும்.!


இலங்கை எனும் அழகான சின்னத்தீவீல் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்த ஒரு கொடூர யுத்தம் இன்றும் பலரது மனங்களில் மாறாத வடுக்களாக வேதனை முற்களாக இன்னும் குத்திக்கொண்டே இருக்கிறது.
ஈழப்போராட்டத்தை பற்றி பல முறை எழுத முறபட்ட போதிலும் உலகமே வியந்து பார்த்த ஒரு போராட்டத்தை பற்றி எழுது எனக்கு என்ன தகுதியிருக்கிறது எனகென்ன அறிவிக்கிறது என்று சிந்தித்து அப்படியே விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில தயக்கங்களுடன் எழுத விளைகிறேன். ஓர் இலங்கையன் என்ற அடிப்படையில் யுத்தம் நடந்த காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பக்கச்சார்பற்றே பார்க்க விரும்புகிறேன்.இதில் பிழைகள் இருக்கலாம், உங்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம், உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். இது என் மனதில் இருந்த கருத்துக்கள் மட்டுமே..


நான் ஒரு கொலை செய்திட்டேன்..!!


மனிதனாக பிறந்ததே மேல் என்கிறார்கள்.. உண்மைதான் அந்த ஒரு விடயம் மட்டும்தான் எனக்குள்ள சாதனை. 'நான் மனிதன்' என்ற கர்வம், இருந்தும் பயன்படுத்த மறக்கும் மறுக்கும் ஆறாம் அறிவு. வேகமாக வீசும் நாகரீக காற்றில் அடித்துச்செல்லப்படும் தூசு நான். விரும்பியோ விரும்பாமலோ காற்று செல்லும் திசையில் நகரத்தானே வேண்டும்..

சந்தோஷம்,துக்கம்,கோபம்,காதல்,காமம்,சோம்பல் எல்லாவிதமான குணங்களும் என்னிலும் உண்டு.. என்னைப்பார்த்து யாராவது நீ நல்லவன் என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.. யாராவது நீ நல்லவனில்லை என்றால் இருக்கலாம் என்பேன். நல்லவன் என்பதற்கு எதுதான் அளவீடு இதுவரை எனக்கு புரியவில்லை.

நானும் கொலை செய்திருக்கிறேன்.. பயப்படாதீர்கள் மனிதனை அல்ல, ஏன் மனிதனை கொன்றால் மட்டும்தான் கொலையா ஏனைய உயிர்களைக்கொன்றால் அதற்கென்ன பெயர். ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை தலைகீழ் மிருகங்களுக்கு அன்பு காட்டுகிறார்கள் மனிதனை கொல்கிறார்கள். என்ன உலகமடா.. சின்ன வயதில் நடந்த கொலை சம்பவமொண்றை சொல்கிறேன். எங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்கறி நடப்பட்டிருந்தது முக்கியமாக பயற்றங்காய்.இதன் மரம் சிறியதாக இருப்பதனால் அதன் காய்கள் கீழே தொங்கும் பூமி மட்டத்துக்கு. அவ்வாறனவற்றை இந்த ஆமைகள் வந்து தின்றுவிடும் எதையும் மிச்சம் வைக்காது தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் காய்கறி பயிர்செய்கையில் பெரும் நஷ்டம். பூச்சி புழுக்களுக்கு மருந்தடிக்கலாம், ஆடு மாடுகளுக்கு வேலி கட்டலாம் ஆமைக்கு என்ன செயவது..?
எங்கள் ஊர்ப்பகுதியில் முன்பிருந்த ஓர் பழக்கம் சிறு பிள்ளைகளை ஒரு விடயத்திற்காக திட்டும்போது இன்னுமொரு பிள்ளையோடு ஒப்பிட்டு (அவனின் திறமையோடு அவனின் செய்கையோடு) திட்டுவது.. இது உண்மையில் களையப்படவேண்டிய விஷயம்.. குறித்த பிள்ளையின் மனதை பாதிக்கக்கூடியது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமை இருப்பதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல். இவ்வாறான செய்கைகளால் நிறையவே பாதிக்கப்பட்டவன் நான் அவ்வாறான வலிகள் இன்னும் என் மனதோடு ஓர் ஓரமாக

எனக்கு சிறிய வயதில் படிப்பில் ஆர்வமேயில்லை. பாடசாலை செல்வதென்றாலே தூக்குமேடைக்கு போவது போல் இழுத்துக்கொண்டுதான் செல்வார்கள் ஆனால் படிப்பைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம் முக்கியமாக விளையாட்டுகளில். இப்போதைய சிறிசுகளின் விளையாட்டிக்கும் அப்போதைய எங்களின் கிராமப்புற விளையாட்டுக்கும் நிறையவே வித்தியாசம்.

இப்போது பொழுதுபோக்கு எவ்வாறு கணினிக்குள் முடக்கப்பட்டிருக்கிறதோ.. அதேபோல்தான் சிறுவர்களின் விளையாட்டுக்களும் கண்னி கேம், டீவி கேம் என முடக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வரும் என அறிந்துதான் பாரதி அன்றே "ஓடி விளையாடு பாப்பா" என பாடினானோ.. ஆனால் நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் வித்தியாசமானவன். மனலினால் வீடுகள்.கட்டடங்கள்,பாலங்கள், ஊர்கள், அமைக்க ஆசை அதுபோலவே அமைத்தும் விடுவேன். இன்னும் இலங்கையில் சுரங்கப்பாதைகள் இல்லை ஆனால் நான் ஐந்து வயதிலேயே மனலைத்தோன்றி சுரங்கப்பாதைகள் அமைத்து காட்டியிருக்கிறேன்.. ஊரில் இதைப்பார்ப்பவர்கள் என்னை ஒரு பொறியியலாளர் என்றே கூறுவதுண்டு. பின்னாட்களில் அத்துறையில் படிக்க ஆசையிருந்தும் தகுதியிருந்தும் தற்செயலாக வர்த்தகதுறைக்கு மாறியது வேறு கதை. சிறிய வயதில் படிப்பில் ஆர்வமில்லையென்றாலும் போகப்போக நானாகவே என்னை வளர்த்துக்கொண்டேன் எட்டாம் ஒன்பதாம் வகுப்பு பரிட்சைகளில் முதலாமிடம் எனக்குத்தான் என்றால் பாருங்களேன்.. அந்த வகையில் சிறிய வயதில் படிப்பில் ஆர்வமில்லாமல் வேறு திசைகளில் கவனம் செலுத்தும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை நம் கண் முன் கச்சிதமக கொண்டு வந்த அமீர்கானின் தாரே சமீன் பர் என்ற ஹிந்தி திரைப்படம் என் மனதோடு ரொம்பவே ஒட்டிக்கொண்டது. படத்தில் வரும் அந்தச்சிறுவனை நானாகவே உணர்ந்தேன், ரசித்தேன், அழுதேன் அதன் விளைவாகவே இந்தப்பதிவும்..

காமம் போலவே என் கதையும் எங்கோ தொடங்கி எங்கோ செல்கிறது முடிவில்லாமல். ஆம் ஆமை பயற்றங்காயை தின்பதில் விட்டேன்.. மீண்டும் தொடர்கிறேன்.. இவ்வாறு போய்கொண்டிருக்கும் போது ஒரு நாள் உம்மா என்னைப்பார்த்து.. "பாருடா பக்கத்து வீட்டு அவன் எவ்வளவு உஷாரா உறுசுறுப்பா இருக்கான் உனக்கென்னண்டா தோட்டத்துக்கு வர்ற ஒரு ஆமையைக்கூட துரத்த உஷாரில்லையே.." என்று சொன்னதும். தூங்கிக்கிட்டிருந்த கோபம்,ரோஷம் எல்லாம் துள்ளி எழுந்தது.. எல்லாம் அந்த ஆமையால் வந்தது என்றென்னிக்கொண்டு உடனே தோட்டத்துக்கு சென்றேன். அந்த நேரம் பார்த்து பெரிய ஆமையொன்று காய்களை தின்றுகொண்டிருந்தது. என்னைப்பார்த்ததும் கால்களையும் தலையையும் உள்ளிழுத்துக்கொண்டது. என்னை கோர்த்துவிட்டு நீ இன்றைக்கும் திங்கிறதுக்கு வந்துட்டியா என்று மனசுக்குள் சொல்லிவிட்டு. உம்மாவிடம் திட்டுவாங்கிய ரோஷமும் ஆமையைக்கண்ட கோபமும் ஒன்று சேர்ந்து வர இதை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் பக்கத்திலிருந்த பெரிய கல்லைத்தூக்கி அதன் ஓட்டில்மேல் போட்டுவிட்டேன்.. ஓடுடைந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.அப்படியே இரத்தம் வழிய வழிய நகர்ந்து சென்றுவிட்டது.

அடுத்தநாள் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது வேலி அருகே அந்த ஆமை இறந்துகிடந்தது.. அநியாயமாக ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என்று அப்போது மனசை உறுத்தியது. நம்முடைய கெட்ட கோபம் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதே என்று நானே என்னைத்திட்டிக்கொண்டேன். பின்னாட்களில் ஆமை பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை என்ற செய்தியை படித்தவுடன் மிகவும் வருந்தினேன்... இவ்வாறாக என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பதிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க..  வரும் நண்பர்கள் ஓட்டு போட்டுட்டு எப்பிடியிருக்குன்னு சொல்லிட்டுப்போங்க..நன்றி
(இது ஒரு மீள்பதிவு)
vote..

நீ படிச்சி பெரியவனாகி என்ன பண்ணப்போற..!!


படிக்கும் காலங்களில் நீ படிச்சி பெரியவனாகி என்ன பண்ணபோறாய்ன்னு கேட்டா நாங்க டாக்டர் ஆகப்போறோம் இஞ்சினியர் ஆகப்போறோம் அதுவா இதுவா ஆகப்போறோம் ஏன் ஜனாதிபதியா ஆகப்போறோம்னு கூட சொல்லியிருப்போம்..
இங்க ஒருத்தர் என்ன சொல்றாருன்னு பாருங்க..
டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்

டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.

டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.

டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.

டீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாருங்க?
பையன்: பேர குழந்தைகள்!!!
இதைவிடவுமா ஒருத்தரால ஆக முடியும் நீங்களே சொல்லுங்க..!!

சந்தேகம்# சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சின்னு சொல்லி எல்லா டீவிலயும் சினிமா நிகழ்ச்சிதானே போட்டாங்க சுதந்திரம் இந்தியாவுக்கா,? சினிமாவுக்கா..?

"ஈழப்போராட்டமும் இனப்படுகொலைகளும்" விரைவில்....!!!!
VOTE..

அரேபியாவிலும் அகதிகள்...!

நாட்டைத்துறந்து
வீட்டைத்துறந்து
வந்தவர்கள்தான் அகதிகளா..
நாங்களும் அகதிகள்தான்
பாலைவன தேசம் நோக்கிய்
அகதிகள்
வேலைக்காகவேண்டி
வயிற்றுப்பிழைப்புக்காக
அகதியானவர்கள்..
உடல்கள் மடடுமே இங்கே
உணர்வுகள் அங்கே
வறுமை போக்க
வழி தேடி வந்தவர்கள்
வாழ்க்கை பயணத்துக்கு
வழி தேடி வந்தவர்கள்..
பணம்
உடம்பின் வலி நீக்கினாலும்
உணர்வின் வலி
நீக்குவதில்லை..
ஆயிரமாயிரம்
திர்ஹம்கள் தினார்கள்
ரியாள்கள்
உழைத்தாலும்
ஒரு ரூபாய்க்கான
அன்பையும் அரவனைப்பையும்
வாங்க முடிவதில்லை
இங்கே...
கணினிகளும்
கைத்தொலைபேசிகளும்தான்
எங்கள் உறவினர்கள்...
பிள்ளைகளை பிரிந்த தகப்பன்..
பெற்றோரை பிரிந்த பிள்ளை..
மனைவியை பிரிந்த கனவன்..
ஐம்பதை தொடும் டிகிரி உஷ்னத்தில்
உருகவேண்டிய நிலை..
வெளியில் வேலை
செய்பவர்கள் நிலை
நினைத்தாலே மனசு சுடுகிறது
உடம்பு வேர்க்கிறது.
இருக்கிப்பிடிக்கவேண்டியிருக்கிறது
இதயத்தை மட்டுமல்ல
உணர்வுகளையும்தான்..
நினைவுகளை உசுப்பிவிடும்
இரவுகளில்
இருள் மட்டுமே துனை..
திருமனமான நண்பனொருவன்
தினமும்
முத்தம் கொடுக்கிறான்
தன்
கைத்தொலைபேசிக்கு!!!!

 VOTE PLS..

பகலில் ஓர் நிலவு..!

எந்த அறிவியலும் சொன்னதில்லை
பகலில் நிலவு வந்ததாய்
என் வீட்டு சாலையில் மட்டும்
ஓர் அதிசயமாய் அவள்...

ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது
நானும்தான்
நியுற்றனுக்கு ஆப்பில்
எனக்கு அவள்...

உன் சினுங்கlலைத்தான்
கற்றுக்கொண்டதோ
வளையல்களும்
கொலுசுகளும்...

வசந்த காலம்தான்
வறண்ட பாலைவனமெங்கும்
உன் ஞாபகங்களும்
என்னோடு அலைவதால்...

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics