சந்தோஷத்திற்கு என்ன வழி- The way to happiness.

வெற்றியை தேட எவ்வளவோ வழிகள் இருக்கிறது ஆனால் சந்தோஷத்தை தேட என்னதான் வழி? அது வெளியில் எங்கும் இல்லை வெளியில் தேடினாலும் கிடைக்காது. அது நமக்குள்தான் இருக்கிறது நமக்குள் இருந்துதான் அது மலர வேண்டும். நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஏதேனும் வழிகள் உண்டா? ஆம் இதற்காகவேண்டியே ஒரு புத்தகம் இருக்கிறது, நாமாக சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி என்பதை மிக அழகாக விபரிக்கிறது The way to happiness என்ற புத்தகம். 21 வழிமுறைகளை சொல்லி அவைதான் சந்தோஷத்தின் அடிப்படை வழிகள்,அவற்றை பின்பற்றினால் சந்தோஷம் நிச்சயம் என்கிறது.
இப்புத்தகம் 1980 ம் ஆண்டு Ron Hubbard என்பவரால எழுதப்பட்டது இது உலகம் முழுக்க 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ( இது கிண்ணஸ் சாதனையும் கூட) அப்படி அந்த புத்தகம் கூறும் 21 வழிமுறைகள் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்

1. எப்போதும் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், சுகாதாரமாக உடல் நலத்தை பேனிக்கொள்ளுங்கள். நேரத்து உணவு,தூக்கம்

2. மனதை கட்டுப்படுத்த பழகுங்கள், உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள் பின் விளைவுகளை சிந்தியுங்கள்

3. உங்கள் மனைவிக்கு அல்லது உறவுகளுக்கு, நண்பர்களுக்கு விசுவாசமாகயிருங்கள்

4. கொஞ்சமாவது குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். உங்கள் வயசு எதுவானாலும் சரி

5. பெற்றோரை மதியுங்கள் அவர்களுக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
6. மற்றவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஓர் நல்ல முன்னுதாரணமாய் விளங்குங்கள்.

7. உண்மையே பேசுங்கள், அது எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை
8. யாரையும் கொல்லவோ காயப்படுத்தவோ செய்யாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எந்த இலாபம் வந்தாலும் சரி!

10. சமூகத்திற்கு அரசாங்கத்திற்கு நல்ல விடயங்களை செய்யுங்கள், அல்லது முயற்சியாவது எடுங்கள்.

11. ஒரு செய்யும் நல்ல விடயங்களை தட்டிக்கொடுங்கள் கெடுத்துவிடாதீர்கள்
12. உங்கள் சுற்றுச்சூழலை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்.
13. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள்,திருடாதீர்கள்!

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராகயிருங்கள்.
15. ஒப்பந்தங்களை மீறாதீர்கள்,கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்.
16. சோம்பேறியாக சும்ம இருக்காதீர்கள்,ஏதாவது வேலை செய்யுங்கள்

17. கல்வி என்பது முடிவில்லாதது எப்போதும் கற்றுக்கொண்டேயிருங்கள்.
18. மற்றவர்களின் மத உணர்வுகளை மதியுங்கள் கேலி செய்யாதீர்கள்.
19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று
நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்கு செய்யதீர்கள்

20. அதேபோன்று, அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் அவர்களையும் நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது எதுவுமில்லையென்று கவலைப்படாதீர்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.. ஈத் முபாரக்!

36 comments:

கோவை நேரம் said...

சந்தோசமா இருப்போம்

M.R said...

நல்ல கருத்துள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

வோட்டு போட்டாச்சு நண்பரே

Yaathoramani.blogspot.com said...

ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல பதிவைக் கொடுத்து
அனைவரும் சந்தோஷமாக இருக்க வழிசொன்ன
உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
த.ம 4

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்க்கைக்குத் தேவையான பதிவு நண்பா.

அருமை.

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கு மிகவும் பிடித்தது.

கல்வி என்பது முடிவில்லாதது எப்போதும் கற்றுக்கொண்டேயிருங்கள்.

(கல்வி என்பது கல்விச்சாலையில் கிடைப்பது மட்டுமல்ல!)

முனைவர் இரா.குணசீலன் said...

இன்று என் வலையில்..

இதை நான் எதிர்பார்க்கல?

(வாழ்வியல் கேள்வி பதில்)

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_30.html

பதிவைக் காண அன்புடன் அழைக்கிறேன்

Riyas said...

//கோவை நேரம் said...
சந்தோசமா இருப்போம்//

முதல் வருகைக்கு சந்தோஷம்.

Riyas said...

// M.R said...
நல்ல கருத்துள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி நண்பரே//


//வோட்டு போட்டாச்சு நண்பரே//

வருகைக்கும், கருத்திற்கும், ஓட்டுக்கும் ரொம்ப நன்றி

Riyas said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
வாழ்க்கைக்குத் தேவையான பதிவு நண்பா.//

ரொம்ப நன்றி சார்,, உங்களைப்போன்றவர்களின் வருகையும் வாழ்த்தும் என்னைப்பூரிப்படைய செய்கிறது!

Riyas said...

// Ramani said...
ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல பதிவைக் கொடுத்து
அனைவரும் சந்தோஷமாக இருக்க வழிசொன்ன
உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்//

வாங்க ரமனி சார் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

Chitra said...

Good messages. Thank you for sharing. Eid Mubarak!

'பரிவை' சே.குமார் said...

நல்ல கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி.

கோவி said...

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

நல்லதொரு பதிவு.. பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

நல்ல தகவல்கள் நண்பா

arasan said...

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

தாங்கள் என்னை (அவசியம்) தொடர்பு கொள்ள முடியுமா? எனது வலைத்தளத்தில் மெயில் முகவரி உள்ளது.

சுதா SJ said...

பயன் உள்ள கருத்துக்கள் எல்லாமே பாஸ்,
பகிர்வுக்கு நன்றி பாஸ்

மாய உலகம் said...

அனைத்தும் பயனுள்ள விசயங்கள் இதை பின்பற்றினாலே வாழ்வில் மேண்மை அடையலாம்...நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே

மாய உலகம் said...

தமிழ் மணம் 8 & all voted

MHM Nimzath said...

Eid Mubarak

K said...

அடடே, ஹேப்பியா இருக்க இத்தனை வழிகளா?சூப்பருங்க!

Anonymous said...

நல்ல கருத்துள்ள பதிவு...
பகிர்வுக்கு நன்றி நண்பரே...

athira said...

ரியாஸ்ஸ்.... நல்லநாள் முடிவதுக்குள் உங்கள் பக்கம் வந்துவிட்டேன்.

நல்ல கருத்துக்களைச் சொல்லிட்டீங்க.

சந்தோஷம் எங்கேயும் இல்லை நமக்குள்தான்... அழகாக சொல்லிட்டீங்க.

athira said...

//. மனதை கட்டுப்படுத்த பழகுங்கள், உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள் பின் விளைவுகளை சிந்தியுங்கள்//

//உண்மையே பேசுங்கள், அது எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை//

இவை இரண்டும் அதிகம் பிடித்திருக்கு.

athira said...

//13. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள்,திருடாதீர்கள்!
//

ஆசை வந்திட்டால் என்ன செய்யிறதாம், கேட்டால் அவர்கள் தரோணும்:)), தராதுவிட்டால்.. திருடித்தானே எடுக்கோணும் ..அவ்வ்வ்வ்வ்:)).. கடவுளே மீ... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

athira said...

எங்கட பேப்பிள்ஸ்ஸ்ஸ்:) சே..சே.. பீப்பிள்ஸ்ஸ்ஸ்ஸ், பதிவைப் படிப்பதைக் காட்டிலும், வோட் பண்ணுவதிலயே குறியா இருக்கினம்.. ஹையோ..ஹையோ..:))).

ப.மதியழகன் said...

அனைவரும் தேடுவது சந்தோஷத்தைத் தானே, அதற்கு வழி சொல்லும் புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com

அம்பலத்தார் said...

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய கருத்துக்கள் நல்லதொரு பதிவிற்கு நன்றிகள் ரியாஸ்.எது எப்படியோ சந்தொசமாக இருப்பது எப்படி புத்தகம் எழுதினவன் புத்தகத்தை விற்று நல்லாப் பணம்பண்ணிட்டுச் சந்தோசமாக இருப்பான்

The Tamil Language said...

happy ramzan

Anonymous said...

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்... ரியாஸ்.

நிரூபன் said...

உங்களுக்கு, உங்களின் குடும்பத்தினருக்கும் பிந்திய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...

சந்தோசம் பற்றிய சந்தோசமான பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

nazar said...

நல்ல தகவல்

உங்களின் தளம் சிறப்பாக உள்ளது

நாசர்

chinnu said...

நல்ல முத்தான கருத்துக்கள், "ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...