127 Hours - உலக சினிமா..!

இயற்கையின் பொக்கிஷங்களான மலை, காடு, கடல், நீர்வீழ்ச்சிகள் இன்னும் பல.. இவற்றை ரசிப்பதென்பது எல்லோருக்கும் அமையப்பெறாத ஒன்று. அதை ரசிப்பதற்கும் ஒரு தனி மனசு வேண்டும். சிலர் இதை தனிமையில் ரசிக்க விரும்புவர் சிலர் கூட்டமாக சென்று ரசிக்க விரும்புவர்.

அப்படியான இயற்கையை ரசிக்க நாம் ஒரு தனிமையான இடத்துக்கு தனிமையில் பயணம் மேற்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏதாவதொரு சிக்கலில் சிக்கிக்கொண்டால் நம்மனநிலை எப்பிடியிர்க்கும். மனித சஞ்சாரமேயில்லாதே ஒரு பகுதி மனிதர்கள் வந்தாலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இடம் இப்படியான நிலை வந்தால் நாம் என்ன செய்வோம் சிலர் பயத்திலேயே இறந்து விடுவோம், சிலர் என்னசெயவதென்று அறியாத பதற்றத்திலேயே முயற்சி செய்ய மறந்திடுவோம்.

இப்படியானதொரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட இளைஞனின் கதைதான் இந்த 127 hours படம்.. இப்படத்திற்கு இசை நம்ம இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இயக்கம் slumdog millionaire திரைப்படத்தை இயக்கிய Danny Boyle. Aron ralston ஆக பிரதான பாத்திரம் ஏற்று நடித்தவர்.James Franco. இது Aron ralston என்ற மலை ஏறுபவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தனது வார இறுதி நாட்களை சந்தோஷமாக களிபபதற்காக aron தனக்கு தேவையான பொருட்களை கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர் உட்பட எடுத்துக்கொண்டு கிளம்புகிறான கொஞ்சம் தூரம் பயண்ம செய்து தனது வண்டியை நிறுத்திவிட்டு தனது மலையேறும் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஒரு மலைத்தொடர் நோக்கி பயணிக்கிறான்.. அவனின் பயணத்தோடு சேர்த்து கேமராவும் பயணிக்கிறது அது ஒரு மிகவும் அழகான பிரதேசம் அதை காட்டிய விதம் கொள்ளை அழகு.. ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் மிக முக்கியமாக கூறப்படவேண்டிய ஒன்று வேறு எந்த படத்திலும் இயற்கையை நான் இவ்வளவு ரசித்ததில்லை.. அவ்வளவு அழகான காட்சிகள் அது.

இந்த பயணத்தில் நடுவே இரண்டு பெண்களையும் சந்திக்கிறான். அவர்களோடு சேர்ந்து மலை இடுக்கில் உள்ள ஒரு நீர் தடாகத்தில் விழுந்து குளித்து குதூகலித்துவிட்டு கிளம்புகிறான். போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பாறை இடுக்கில் கால் தவறி விழுந்து விடுகிறான். விழும்போது அவனுடன் சேர்ந்து ஒரு பாராங்கல்லும் உருண்டு வந்து அவன் ஒரு கையை மலை இடுக்கோடு சேர்த்து மாட்டிவிடுகிறது கல்லுக்குல் மாட்டிக்கொண்ட கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான் முடியாமல் போகிறது.. உதவி செய்யவும் யாருமில்லை எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் வெளியில் கேட்க வாய்ப்பில்லை.தன்னிடமுள்ள எல்லா பொருட்களையும் கொட்டி அவற்றினால் ஏதாவது பலன் கிடைக்குமா என சிந்திக்கிறான். அவனிடமுள்ள சிறிய கத்தியொன்றை பயன்படுத்தி கல்லை செதுக்கி கையை எடுக்கப்பார்க்கிறான் அதுவும் பலனில்லாமல் போகிறது.

இப்படியான தொடர் போராட்ட்ம ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து நாட்கள் தொடர்கிறது. கொண்டுவந்த நீரும் உணவும் ஏற்கனவே தீர்ந்துவிட்டது தாகம் தொண்டையை வரட்டவே தன்னுடை சிறுநீரை பருகவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறான்.. ஒரு நாளைக்கு காலையில் 15 நிமிடம்  மட்டுமே சூரிய ஒளியை பார்க்கிறான்.. மற்ற நேரன்ங்களில் அந்த இடத்துக்கு சூரிய ஒளி படுவதில்லை. இதற்கிடையில் சீனப்பொருட்களுக்கு கிண்டலடிக்கிறான். தனது கையில் உள்ள கத்தி, சீனாவில் தயாரிக்கப்பட்டதென்றும் அதனால் இப்போது எந்த பலனும் இல்லை. ஆகவே சீனப்பொருட்களை வாங்கி ஏமாறாதீர்க்ள் என்கிறான்.

தனது எல்லா நடவடிக்கைகளையும் தனது ரெகோடிங்க கேமராவில் பதிந்து வைக்கிறான்.. இதனூடே அவனுக்கு பல பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகிறது.. தனது தாய், நண்பர்கள் எல்லோரையும் நினைவு கூறுகிறான். அவர்களை இனி பார்க்க முடியாமல் போய்விடுமோ என ஏங்குகிறான்,.

அவர்களுக்கு சொல்ல ஆசைப்படுவதையும் பேசி பதிந்து வைக்கிறான். இறுதியில் எதுவும் கைகூடாதநிலையில், பாறையிடுக்கில் மாட்டிக்கொண்ட தனது கையை வெட்டிவிட்டுத்தான் அந்த இடத்திலிருந்து விடைபெற முடியும் என்பதை உணர்கிறான்.. கையை வெட்டினானா.. அவன் என்னவானான் என்பதே மீதிக்கதை..

22 comments:

Kumaran said...

இப்பொழுதுதான் இந்த படத்தை பார்க்கலாம் என்று எண்ணிருந்தேன்..அதற்குள் ஒரு அருமையான விமர்சனம்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

ஹுஸைனம்மா said...

இன்னிக்குத்தான் இந்தப் படம் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதாவது, தற்கொலை பண்ணிக்கிறவங்க, மணிக்கட்டு நரம்பை அறுத்துகிடுவாங்க இல்லியா? ரத்த இழப்பினாலேயே உயிர் போயிடுமே, அதுக்காக. அதுபோல, இந்தப் படத்து (நிஜ) ஹீரோ, உயிர் தப்பறதுக்கு மணிக்கட்டைத்தானே அறுத்தார், எப்படி பிழைச்சார்னு ஒரே யோசனை!! :-))))

ஹேமா said...

ரியாஸ்...படம் பார்க்க ஆசையாயிருக்கு.யூட்யூப்ல தேடிட்டேன்.கிடைக்கவில்லை !

Philosophy Prabhakaran said...

நல்ல படமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்... இன்னும் பார்க்கவில்லை...

Riyas said...

@Kumaran

உங்க முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி,

Riyas said...

@ஹுஸைனம்மா

வாங்க,

//இந்தப் படத்து (நிஜ) ஹீரோ, உயிர் தப்பறதுக்கு மணிக்கட்டைத்தானே அறுத்தார், எப்படி பிழைச்சார்னு ஒரே யோசனை!!//

மணிக்கட்டுக்கு கொஞ்சம் மேலே அறுப்பதாகவே படத்தில் காட்டப்படுகிறது அப்பிடி அறுத்து பிழைச்சிட்டுட்டாரோ.. அவர் இன்னும் உயிரோடதான் இருக்கார் அவருகிட்டயே கேட்றலாம் விடுங்க,,

மற்றும், கையை அறுத்தவுடன். இரத்தம் அதிகம் வெளியேறாதவாறு பார்த்துக்கொண்டாலும் இல்லை அவசர சிகிச்சை பெற்றாலோ தப்பலாம் அல்லவா :)))

Riyas said...

@ஹேமா

வாங்க அக்கா, நானும் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் லிங்க் தருகிறேன்

Riyas said...

@Philosophy Prabhakaran

வாங்க பிரபா,, நல்ல படம்தான் பார்க்கலாம்..

வருகைக்கு நன்றி.

சுதா SJ said...

ஹும்.... படம் பார்க்கலாம் போல் தான் இருக்கு.... லிங்க் கிடைத்தால் ஹேமா அக்காசிக்கு அனுப்பும் போது எனக்கும் அனுப்புங்கோ ரியாஸ் ப்ளீஸ்

K.s.s.Rajh said...

விமர்சனம் அருமை பாஸ் படம் பார்க்கலாம் போல இருக்க்கு பார்த்திட்டால் போச்சி

நிரூபன் said...

வணக்கம் நண்பா
மிக அருமையான விமர்சனம்,
நன்றாக அனுபவித்தி, படம் பற்றி எழுதியிருக்கிறீங்க.
வாசகர்கள் அனைவரும் விமர்சனம் படித்த மாத்திரத்தில் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் கொள்ளும் வண்ணம் உங்கள் எழுத்து நடை அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள்!

பாலா said...

மிக அருமையான படமென்றும் சொல்லி விட முடியாது, மொக்கையான படம் என்று ஒதுக்கி விட முடியாது. படத்தில் பல சுவாரசியங்களால் இயக்குனர் நம்மை கட்டிப்போடுவார். உதாரணமாக, சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்கும் நாயகன், கடைசியில் அழுக்கு தண்ணீரை அள்ளி குடிப்பானே அது போல.

Jana said...

வணக்கம் ரியாஸ்.. சுகங்கள் எல்லாம் எப்படி?
பார்த்த திரைப்படம்தான் தங்கள் விமர்சிப்பு இரசனை.

Riyas said...

@துஷ்யந்தன்

வாங்க பாஸ்! லிங்க கிடைத்தால் நிச்சயம் அனுப்புறேன்.
நன்றி.

@K.s.s.Rajh

வருகைக்கு நன்றி பாஸ்.

Riyas said...

@நிரூபன்.

வாங்க பாஸ்!

மிக்க நன்றி பாராட்டுக்கு.

Riyas said...

@பாலா

வாங்க பாலா! ரொம்ப நாளைக்குப்பிறகு, நீங்கள் சொல்வது சரி இப்படத்தில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் நிறையவே இருக்கு.

Riyas said...

@Jana
வாங்க ஜனா அண்ணா..

நீண்டநாளைக்குப்பிறகு உங்கள் வருகை கண்டதில் மகிழ்ச்சி. நான் நலமே

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

ASSALAMU ALAIKUM,

சகோதரா இந்த சினிமா விமர்சனம் தேவையா?நம்மையும்,நாம் சார்ந்துள்ள இஸ்லாத்தையும் தாக்கி எத்தனையோ வலைதங்கள் தன்னுடைய கொச்சை கருத்தை ஒன்றும் அறியாதவர்கள் மீது திணிகிரார்கள் அதற்கு பதில் சொல்ல நம்மை போன்ற வலைதளகாரர்களுக்கு நேரமில்லையா அல்லது பிடிக்கவில்லையா?நம் தாய் தந்தையரை சமந்தமில்லாமல் யாராவது கேவலமாக பேசினால் நாம் இப்படிதான் வேறு விசயங்களை பற்றி பேசிக்கொண்டு இருப்போமா...அவர்களுக்கு பதில் தர வேண்டாமா ஏன் சகோதரா..ஊரெல்லாம் நம்மை தீவிரவாதிகள் போலவும்,மூன்றாம் தர மக்கள் போலவும் நினைக்கும் இவ்வேளையில் ஒரு படத்திற்கு விமர்சனம் தேவையா.இஸ்லாத்திற்கு எதிரான தளங்களுக்கு உங்களால் பதில் தர முடியாவிட்டாலும் பிரதளங்களில் இருந்து எடுத்தாவது(இன்னாரின் தளத்திலிருந்து எடுத்தது என்ற செய்தியோடு) போடலாமே சகோதரா.குர்ஆனையும்,நபி மொழியையும் அறியாத மக்களுக்கு மேற் சொன்ன வழிமுறையிலாவது உதவலாமே.இது போன்ற சினிமா விமர்சனங்கள்,உலக நகைச்சுவை நடப்புகளை நீங்கள் வெளியிடுவதின் மூலம் உங்களுக்கு நிறைய HITS கிடைக்குமே தவிர வேறு வகையில் ஏதேனும் பயனுண்டா.மக்களிடத்திலே இஸ்லாத்தை பற்றிய நல்ல புரிதலை
வளர்க நாம் கடமை பட்டுள்ள இந்நேரத்தில் நாம் கடக்க வேண்டிய பாதையோ வெகு தொலைவில் இருக்க,உங்கள் பொன்னான நேரத்தை இது போன்று வீணடிக்கலாமா....

இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு எவனாவது பதில் தந்து போகட்டும்,நமக்கு நம் தளத்தின் பிரபலம்,வாசகர் எண்ணிக்கை,கருத்துரை எண்ணிக்கை இதுவே போதும் என்ற மனநிலை மாற வேண்டும்.....இங்கு நான் யார் மனதையும் புண்படுத்த வரவில்லை.உண்மையை சொல்லவே வந்தேன்.....இஸ்லாமிய பதிவர்களே இது உங்களுக்கும் தான்.....

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல...

Saravanan MASS said...

http://www.torrents.net/torrent/1150403/l-127.hours.xvid.avi/

test said...

நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் (முக்கியமா இசைக்காக!) என நினைத்திருந்து..மறந்துபோய் விட்டேன். ஞாபகப்படுத்தி விட்டீர்கள் பாஸ்! பார்த்துவிடுகிறேன்!
நன்றி பாஸ்!

சி.பி.செந்தில்குமார் said...

good review

ஜெய்லானி said...

பார்க்காதவங்களையும் பார்க்க தூண்டும் அழகிய விமர்சனம் ரியாஸ் :-)

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...