எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய் இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்ப் பிழைப்பாள் என் கின்றனர் மருத்துவர்கள், சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.
'தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?' மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன் 'சரி' என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்குப் பின் அருகில் இருந்த தாதியை அழைத்த சிறுவன் கேட்டான். 'நான் எப்போது சாகத் தொடங்குவேன்?'
தாதி அதிர்ச்சியடைந்தார்.
தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்.
இது, இன்று தினகரன்(இலங்கை) பத்திரிகையில் வெளிவந்துள்ள ஓர் அருமையான விவரண கட்டுரையின் முதல் பகுதி.. இன்றைய மனிதநேயமில்லாத சுயநலமான வாழ்க்கையோட்டத்துக்கு இவ்வாறான கட்டுரைகளின் பங்களிப்பு ரொம்ப அவசியம்.. அதிகமானோரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரையை இங்கே பகிர்கிறேன்..
தொடர்ந்து படிக்க..இங்கே.
நன்றி.http://www.thinakaran.lk
12 comments:
ஸலாம் சகோ.ரியாஸ்,
மனிதநேயம் மகத்துவமிக்கது என்று பறைசாற்றும் பதிவை படித்த மனது பரவசம் அடைந்தது. பகிர்வுக்கு நன்றி.
மனித நேயமிக்க அந்த சிறுவனை என்ன வென்று புகழ்வது என்று தெரியவில்லை
பகிர்வுக்கு நன்றி பாஸ்
அருமை !
சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
//இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்.//
உண்மை.அவன் ஒரு முன்னுதாரணம்.
இது வியட்னாம் யுத்தத்தின் போது நடந்த உண்மை சம்பவம். இதை சுட்டு, கதையை மாற்றி பத்திரிகையில் இட்டிருக்கிறிறார்களென நினைக்கிறேன்..
திரு. அஷ்ரப் சிஹாப்தீனின் ப்லாக்கில் அந்த சம்பவத்தை படிக்கலாம்.
ஆம்...இது தன்னலமற்ற அன்பின் வடிவம்...
வாழ்த்துக்கள் நண்பரே ...
வணக்கம் சகோ,
அருமையான நீதிக் கதையினைக் கொடுத்திருக்கிறீங்க.
தன்னலமற்று பிறர் வாழ வேண்டும் எனும் உதவும் மனப்பான்மையினை சிறப்புற விளக்கும் வண்ணம் இக் கதை அமைந்திருக்கிறது.
பகிர்விற்கு நன்றி.
சிறுவன் தன்னலமற்ற அன்னையின் வடிவமாய்த் திகழ்கிறான்.
நடைமுறையில் நிதர்சனத்தை நினைத்தால்......மனம் ஏனோ கனக்கிறது சகோ.
அருமையான பகிர்வு நன்றி
அருமையான பகிர்வு நன்றி
சுப்ஹானல்லாஹ்
Post a Comment