மழை தருமோ இந்த மேகம்..!!!

மழை தருமோ இந்த மேகம்.... இது சினிமா பாடலல்ல.... வானவீதியில் ஓடும் மேகங்களை அண்ணாந்து பார்த்தபடி பல ஏக்கங்கள், பல கேள்விகள், பல எதிர்பார்ப்புகளை சுமந்தபடி இந்த மேகமாவது மழை தராதா...? இந்த பூமியையும் எங்கள் வாழ்கையையும் செழிப்பாக்காதா....? பயிர்களுக்கு உனவாகாதா...? என்ற ஒரு ஏழை விவசாயியின் சோகம் கலநத ஏக்கம் இது......

மழை நீரை நம்பி விவசாயம் செய்யும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்
என்பதால் மழை நீரின் அருமை பெருமை நன்றாகவே உணர்ந்தவன் நான். வானத்து மழையை நம்பி பயிர் நட்டுவிட்டு இன்றைக்காவது மழை வராதா என்று தினம்தோறும் வானத்தை எட்டிப்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் மழை தேடும் சமூகம் அது... "அறுவடை காலங்களில் மழை அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்படுவது வேறு கதை" ஆனாலும் மழை வேண்டிய காலத்தில் மழையில்லாமல் பயிரோடு சேர்த்து அவர்களின் வாழ்கையும் வறண்டு போவதே இன்றைய கால நிலை..
காலநிலை மாற்றம் வெப்பம் அதிகரிப்பு மழையின்மை இதற்கெல்லாம் காரணம் என்ன... இயற்கையை அழிக்கிறோம் மரங்களை வெட்டுகிறோம் காலனிலையை குழப்புகிறோம் மழையை தடுக்கிறோம் இறுதியில் ஏசி அறையிலே தஞ்சமடைகிறோம் வசதியுள்ளவர்கள... மழையை நம்பிய ஏழை விவசாயிகள் என்ன செய்வார்கள் ஒட்டிய வயிரோடும் வற்றாத நம்பிக்கையோடும் தொடர்கிறது அவர்களின் காத்திருபபு காலம் உள்ளவரை...


ஆதி மனிதன் கண்டுபிடித்த ஆதி தொழில் விவசாயம் அல்லவா..... இன்றைய கால கட்டத்தில் அதிகம் வறுமையினால் வாடுபவர்களும் அந்த விவசாயிகள்தானே, ஒரு மருத்துவன் உயிரை காப்பாற்றுகிறான் ஒரு ஆசான் அறிவை வளர்க்கிறான் ஒரு பொறியியலாளன் நாம் வசிக்க கட்டுமானங்களை கட்டுகிறான் ஒரு நிர்வாகி சமூகத்தை நிர்வகிக்கிறான் இவை எல்லாவற்றையும் தொடர உயிர் வாழ வேண்டுமல்லவா உயிர் வாழ உணவு தேவை உணவை உற்பத்தி செய்து தருபவன் யார் விவசாயி அல்லவா அவன் போற்றப்படவேண்டியவந்தானே.... சமூகத்தில் மதிக்கப்படவேண்டியவந்தானே..... அவன் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும்தானே..... 

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கிறது? ஏனைய துறைகளில் உள்ளவர்கள் சிகரத்தை நோக்கி நடைபோடும் இவ்வேளையில் நம் நாட்டு விவசாயிகள் ஆதி மனிதர்கள் போலவே வாழ்ந்து வருகினறனர் அதே வேர்வை, அதே அழுக்குத்துனி, அதே வறுமை வளர்ந்த நாடுகளில் அதி நவீன தொழில்னுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் விவசாயத்துறையும்
விவசாயிகளும் எங்கயோ சென்றுகொண்டிருக்க, நம் நாட்டின் நிலையோ தலைகீழ். நம்மில் பலர் அவர்களை இன்னும் காட்டுவாசிகளை போலவே பார்க்கிறோம்...

எவவளவுதான் வெயில் மழை பாராமல் உழைத்தாலும் கிடைப்பதென்னவோ அன்றைய தேவையை மட்டும் நிறைவேற்ற போதுமான பெறுமதியே...இதில் பலருக்கு மூன்று வேளை உணவுக்கும் கஸ்டமே.. அவர்களின் வலியும் வேதனைகளுமே மிஞ்சும் சேமிப்பு
போஷாக்கின்மை, கல்வி கற்க வசதியின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் எத்தனை.... புத்தகம் தூக்க வேண்டியவர்கள் கூலித்தொழிலாளர்களாய், தாயிப்பாலைத்தவிர வேறு எந்த பாலையும் கானாத குழ்ந்தைகள் எத்தனை எத்தனை....

இவவாறிருக்கையில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்காவது நியாயமான விலை கிடைக்கிறதா? இல்லை. மூண்று மாதம் ஆறு மாதம் வெயில் மழை பாராது அயராது உழைத்து களைத்தவர்களை விட பத்து பதினைந்து நிமிடங்கள் வியாபாரம் பேசும் இடைத்தரகள்,வியாபாரிகள் அல்லவா அதிக லாபம் ஈட்டுகின்றனர், ஏதாவது பேசப்போனால் உங்கள் பொருள் இல்லாவிட்டால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்வோம் என்ற பயமுறுத்தல் வேறு.... பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும், ஏழை தொடர்ந்து ஏழையாகவும் மாறுவதே மிக கவலைக்கிடமான நிலை.


தொடரும் வறட்சியினால் விளைனிலங்கள் பாலைவ்னமானால் உணவுத்தேவைக்கு எங்கே போவது. இன்னும் 40 , 50 வருடங்களில் கைனிறைய காசிருக்கலாம் கணனியிருக்கலாம் மென்பொருள் இருக்கலாம் உணவில்லையென்றால் காசும் கணனியும் மென்பொருள்களும் உணவைத்தேடித்தருமா....? இல்லை மழையைத்தான் பொழிவிக்குமா....? முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்ட மனனனான பராக்கிரமபாகு "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் கடலை சென்றடைய விடமாற்றேன்" என்றான் சொன்னது மட்டுமல்லாம்ல் பல நீர்ப்பாசனத்திட்டங்களை செயற்படுத்தினான் அதன் மூலம் மக்கள் இன்னும் பயன் பெறுகின்றனர்... இப்போதுள்ள ஆட்சியாளர்க்ளோ மழை பெய்தால் அவசரமாக கடலை சென்றடையும் திட்டம் அல்லவா போடுகின்றனர்..

நமக்கெல்லாம் என்னவோ மழை என்பது வெறும் நீர்த்துளிகள்தான் ஆனால் ஏழை விவசாயிகளுக்கு அது வாழ்வின் ஆதாரம் அல்லவா... ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு உணவுப்பருக்கை அல்லவா.......

இயற்கையை காப்போம்
மழையை வரவேற்போம்
ஏழைகள் வாழ்வு வளம் பெற
வழி செய்வோம்......
நாடு செழிக்கட்டும்
நம்மக்கள் வாழட்டும்
வளமுடன்.....................!

உங்களில் யார் கவுண்டமனி...


சுரேஷ்: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நரேஷ்: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....


இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

 'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு
சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'


நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். 
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், 
ஐயா.ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது.... 
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்? 
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான். 
தலைமை ஆசிரியர் : ?!?!

"ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கேத்தபடி சம்பளம் கூட்டிக் கொடுங்க." "அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

"ஏங்க டூ வீலர இவ்ளோ வேகமா ஓட்டிக்கிட்டு வர்றீங்க.. அந்த தெரு திருப்பத்துல உங்க மனைவி விழுந்துட்டாங்க பாருங்க.." "ஓ.. அப்படியா? நான் தான் என் காது செவிடாகி விட்டதுன்னு நெனச்சிக்கிட்டேன்."

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? 
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.

கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் முதல்லேயிருந்தே ஒத்து வரல்லேன்னு எப்படிச் சொல்றீங்க?" "தேனிலவுக்கே ரெண்டு பேரும் தனித்தனியா போனாங்கன்னா பாத்துக்கயேன்."

"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?" "வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க? 
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம். 
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்? 
நர்ஸ்: ???

"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?" "தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"

டிஸ்கி- தலைப்பு ஏன் அப்பிடியிருக்குன்னு கேட்கிறிங்களா..? "உங்களில் யார் பிரபுதேவா" வரும் போது ,இப்பிடி நாங்க உல்டா பண்ணக்கூடாதாக்கும்.. ஆனா என்ன! எப்பிடித்தான் தலைப்பு வெச்சாலும் கூட்டம்தான் வரமாட்டேங்குது.. எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ? 
"உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்"

உணவை வீனாக்காதீர்கள் என அதிகமாய் எழுத நினைத்தாலும், இந்த படங்களைத்தாண்டி எதை எழுதிவிட முடியும் இதுவே ஆயிரம் கதைகள் கண்முன்னால் காட்சிப்படுத்துகிறது..

"உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன் மொழிந்த ஓர் நபி பொழி. எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு பொன்மொழி..

ஆபிரிக்காவில் மட்டும்தான் பட்டினியால் உயிர்கள் வாடுகிறதா? ஏன், நம் பக்கத்து வீட்டிலும் வாடலாம்! நம் தேவைக்கு அதிகமாகி குப்பையில் போடுபவை அவர்களின் தேவையாகலாம், அவர்களின் பசியை போக்கலாம்..

உணவு என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம். அதை நாமும் அனுபவித்து, இல்லாதவர்களுக்கும் பகிரலாம். வீனாக்குவதை தவிர்த்து.


நல்லதாய் சுவாசிக்க
மரம் வளர்ப்போம்
நல்லதாய் வாழ
மனிதம் வளர்ப்போம்..

தொலைத்ததை தேடும் பயனம்..!தூக்கம்
கொள்ளையடிக்கப்பட்ட
இரவொன்றில்.
எனக்குப்பிடித்த
இருளோடும்
தனிமையோடும்
உறவாடிக்கொண்டிருந்தேன்...

எங்கெங்கோ சுற்றி
எதையோயெல்லாம்
எட்டிப்பிடித்த மனசு
திசைமாறிய காற்றாய்
திடீரென
பின்னோக்கி நகர்ந்தது
சில ஆண்டுகள்....

இதயப்பறவை
சிறகு முளைத்து
பறக்க தொடங்கிய காலமது
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...

ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...

காயங்கள் இல்லை
கனவு கண்டதுமில்லை
வெற்றிகளுமில்லை
தோல்விகளும் இல்லை
வலிகள் மட்டும்
நெஞ்சோடு...

தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்..

மேகங்கள் 
கலைந்துபோன பின்னும்
மழை வரும் என
நம்பும் 
விவசாயி போல....
தேடல்கள்
தொடர்கிறது
காலம் கடந்தும்
கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையில்....!

(கற்பனையல்ல கடந்தகால நிஜங்கள்)

வரவேற்பாளினி..

அலங்காரமாய் ஆடையணிந்து
உதட்டுச்சாயமிட்டு
ஒப்பனைகள் கலையாமல்
அலங்கார பதுமையாய்
அமர்ந்திருக்கிறேன்
வரவேற்பாளினியாய்..

உள்ளுக்குள்
பூகம்பம் வெடித்தாலும்
முகத்தில்
பூக்கள் பூக்க வேண்டும்
வந்து போகும்
வாடிக்கையாளர் நலனுக்காய்..

போலியான
புன் சிரிப்புக்கும்
பொங்கியும்
வெளிக்காட்டாத
உணர்வுகளுக்கும்தான்
எனக்குச்சம்பளம்...

உயிரோடு
எரித்து விடுகிறார்கள் சிலர்
என்னை
காமப்பார்வைகளால்.
ரசனையாளர்களாம்
அவர்கள்
அழகை ரசிக்கிறார்களாம்..

உயிரும்
உணர்வுகளும்தான்
வித்தியாசம்
எனக்கும் பொம்மைக்கும்

காலைப்பொழுகளில்
கழட்டி வைக்கும் மனசை
பூட்டிக்கொள்கிறேன்
மாலைப்பொழுகளில்.
அதுவரையிருந்தது
கட்டளைகளால்
அலங்கரிக்கப்பட்ட மனசு...

போலி முகம் கலைந்து
நிஜ முகத்தோடு
நடக்கிறேன்
வீட்டில் எனக்காய்
காத்திருக்கும்
குழந்தை முகம் கான..


ஜோக்ஸ் கணவன் மனைவி..


தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்

ஆனால் நீ இல்லை...
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ....

***********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் "சதம் அடிப்பார்" என் கனவர் "சாதம் வடிப்பார்"!
கமலா: !!!???

***********************
சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க

**********************
சாப்பிடும்போது கூட உன் கனவருக்கு ஆபிஸ் ஞாபகமா?
எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்

***********************
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா

********************
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுது. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றிங்களா, மூடிகிட்டு படுங்க..

**************
புருஷன் : !!!!!!!????
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி

**************

கனவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்

**************

வேலைக்காரியை பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன்
புருஷன், ஏன்?
வேலைக்காரிகிட்டே சிரிச்சுப் பேசாதீங்கன்னு சொன்னேன்,
அதான்!

*************
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குள்க்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!

*************
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

*************
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கனவன்: நடுவுல நீ வந்துட்ட..

யாவும் ஆங்காங்கே படித்ததில் பிடித்தது..

ரசிக்க பழகிவிட்டேன்..!


உன் சிரிப்புகள்
பாலைவனத்தின் மீதுவிழுந்த
பனித்துளிகளாக
என் மனதெங்கும்
ஈரப்பதம் செய்கிறது..

உன்னுடன் பேசிய
பொழுதுகளை
அழைத்துக்கொள்கிறேன்
தனிமையான
என் பயனங்களின் போது...

உன்னை
சீண்டிக்கொண்டேயிருக்கிறேன்
உன் சினுங்கல்களை
ரசிப்பதற்காய்
குழந்தை அழுவதை
ரசிக்கும்
தாய் போல...

கண்கள்
கண்ணீரைத்தந்தாலும்
மேகங்கள்
மழையைத்தந்தாலும்
இரண்டையும்
ரசிக்க பழகிவிட்டேன்
என் கவிதைகளிலுள்ள
எழுத்துப்பிழைகளை
நீ ரசிப்பது போல..


தமிழ்மனத்தில் ஓட்டளிக்க..

The Edge உயிர்காக்கும் போராட்டம் -உலகசினிமா..

கண்களால் பார்க்கும் காட்சிகளை,மனதில் தோன்றும் எண்ணங்களை,அனுபவங்களை எழுத்துகளாக்கி வார்த்தைகளாக கோர்த்து ரசிக்கும் வகையில் படைப்பாக்குவதென்பது மிகக்கடினமான ஒன்று அது எல்லோராலும் முடியாத ஒன்று.. சில படைப்பாளிகளை கண்டு வியந்திருக்கிறேன். தன் எண்ணத்தின் வடிவங்களை காட்சி படிவங்களாக மாற்றி ரசிகர்கள் விழிகளுக்கும் அதனூடே விரியும் எண்ணங்களுக்கு விருந்தாக படைத்திருப்பார்கள். நான் வலைப்பூ ஆரம்பித்ததும் என் எண்ணங்களையும் நான் ரசித்ததையும் என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவே.. ஆனால் அந்த நோக்கம் இன்னும் பத்து வீதமேனும் நிறைவேறவில்லை.. காரணம் அவற்றை எழுத்துகளாகவே கொண்டு வருவதில் உள்ள கடினமே..

அண்மையில் நான் பார்த்த ஒரு ஆங்கில திரைப்படம் பற்றிய என் பார்வையே இது. விமர்சனமோ,அலசலோ இல்லை அந்தளவுக்கு நமக்கு அறிவும் இல்லை. இது சும்மா நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியே.
 The Edge 1997 யில் வெளிவந்த ஓர் ஆங்கிலத்திரைப்படமாகும். இதில் Charles என்ற கோடீஸ்வரர் கதாபாத்த்திரத்தில் Anthony Hopkins யும் Robert Green (Bob) என்ற புகைப்படக்கலைஞர் பாத்திரத்தில் Alec Baldwin யும் நடித்திருக்கிறார்கள் அவர்களின் உதவியாளராக Stephen பாத்திரத்தில் Harold Perrineau யும் நடித்திருக்கிறார்கள்.. இவ்வளவுதான் முக்கிய பாத்திரங்கள் இவர்களுடன் சேர்ந்து ஒரு கரடியும் பிரதான பாத்திரமாக நடித்திருக்கிறது. இப்படத்தை இயக்கியிருப்பவர். Lee Tamahori

நான் மேலே குறிப்பிட்ட மூவரும் ஒரு விமானியும் ஒரு சிறியரக ஜெட் விமானத்தில் குறித்த ஒரு இடத்தைநோக்கி பயணிக்கிறார்கள். அநத விமானம் அந்த கோடீஸ்வரர் சார்ல்ஸுக்கு சொந்தமானது. செல்லும் வழியில் தீடிரெண்டு ஒரு பறவைக்கூட்டத்தில் மோதி விபத்தில் சிக்கி ஒரு நீர் நிறைந்த ஏரியில் விழுந்துவிடுகிறது விமானம். இதனால் அந்த விமானி உயிரிழக்க மற்ற மூவரும் தப்பித்துவிடுகின்றனர். ஏரியிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அது காடுகளும்,மலைகளும் பனியும் சூழ்ந்த ஒரு குளிர் பிரதேசம். அது எந்த பிரதேசம்,நாடு என்றோ அவர்களுக்கு தெரியவில்லை. எந்தவித மனித நடமாட்டமோ கட்டடங்களோ இல்லாத பகுதியாகும். இவ்வாறு அலைந்து கொண்டிருக்கும் போது ஒரு கரடி குறுக்கிட்டு துரத்துகிறது.. அதிலிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். பின் இரவு வேளையில் அதே கரடி மீண்டும் வந்து ஸ்டீபனை தாக்கி கொண்றுவிடுகிறது. அதன் பிறகு இவர்கள் போகுமிடமெல்லாம் கரடி பின் தொடர்ந்து தாக்க முற்படுகிறது.. கரடியிடமிருந்து மீண்டார்களா, இவர்கள் இருவரும் என்னவானார்கள் என்பதே மீதிக்கதை மிக சுவாரஷ்யமாக திரில்லாக நகரும்..

 இவ்வகையான படங்களை ஆங்கிலத்தில் Survival Movies என்றழைப்பார்கள் அதாவது உயிரைக்காப்பாற்ற போராடும் கதைகளை கொண்ட திரைப்படமாகும். அந்த வகையில் இப்படத்திலும் உண்பதற்கு உணவின்றி அலையும் நிலையில் காட்டு மிருகங்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள எப்படி போராடுகிறார்கள் என்பதை இப்படம் அழகாக காட்டுகிறது.. இவ்வாறான இயற்கை காட்சிகளினூடே நகரும் படங்களே என்னை மிகவும் கவர்ந்தவை அவ்வாறான தேடலில் சிக்கியதே இந்தப்படம்.வீட்டிற்குள்ளோ ஹோட்டலிலோ உட்கார்ந்து மணிக்கனக்காக பேசிக்கொண்டிருக்கும் படங்கள் எனக்கு புரிவதுமில்லை பிடிப்பதுமில்லை.

ஒரு கட்டத்தில் கரடியிடமிருந்து தப்பித்து ஓடுவதைவிட கரடியைக்கொன்றால் என்ன, என வயதான கோடீஸ்வரர் சார்ல்ஸ் சொல்ல அது முடியாத காரியம் என bob மறுக்க. அபிரிக்காவில் உள்ளவர்கள் மிருகங்களுடன் சண்டையிட்டு அவட்டை வேட்டையாடுகிறார்கள். ஒருவனால் செய்ய முடிந்ததை இனொருவனாலும் செய்ய முடியும் What one man can do, another can do. What one man can do, another can do. இதை திரும்ப திரும்ப சொல்லி கரடியை கொல்வதற்கு வெறியையும் நம்பிக்கையும் ஊட்டும் காட்சி வெகு சுவாரஷ்யம். அதன் வீடியோ இங்கே..


இவ்வாறான சுவாராஷ்யமான உரையாடல்கள் நிறையவே இருக்கு ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த எனக்கே சுவாராஷ்யமாக தோன்றியது என்றால் உங்களுக்கு இன்னும் சுவாரஷ்யம் தரும் உதாரணத்துக்கு கீழேயுள்ள வசனங்கள்.

Charles Morse: You know, I once read an interesting book which said that, uh, most people lost in the wilds, they, they die of shame.
Stephen: What?
Charles Morse: Yeah, see, they die of shame. "What did I do wrong? How could I have gotten myself into this?" And so they sit there and they... die. Because they didn't do the one thing that would save their lives.
Robert Green: And what is that, Charles?
Charles Morse: Thinking.

ஒரு மனிதனின் உயிருக்கு ஆபத்தோ, அல்லது அதிலிருந்து மீள்வதற்கு எவ்வாரெல்லாம் சிந்திக்கிறான. போராடுகிறான அவ்வாறான நேரங்களில் எப்படி நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதையும்.. சுயநலத்துக்காக நன்றிமறந்து இன்னொருவனை அழிக்க நினைப்பவன்.. தானே அழிந்து போவான் என்பதை இப்படம் அழகாக சித்தரிக்கிறது படத்தில் வரும் இறுதிநேர மாற்றம் நான் எதிர்பார்க்காதது..
படத்தின் ட்ரெயிலர்.


YouTube Link Full Movie.


For Tamilmanam Vote..

இறந்துபோகிறேன் நான்...!பிறந்துவிட்டேன்
மனிதனாய்
வாழத்துடிக்கிறேன்
மனிதனாய்
இறந்துவிட நினைக்கிறேன்
மனிதனாய்...
மனிதனாகவே இல்லை நான்
சில நேரங்களில்.
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
அடிமையாகிப்போகிறேன் நான்
காமத்திற்கும்
மோக்த்திற்குமிடையில்
மண்டியிட்டு...
இறந்துபோகிறேன் நான்
மீண்டும் எழுகிறேன்
இன்னும் வரவில்லை
மரணம்...!

இது ஒரு பரிசோதனை முயற்சிக்கான மீள்பதிவு, இந்திய நண்பர்கள் உங்களால் தமிழ்மனத்தில் ஓட்டுப்போட முடிகிறதா அல்லது முடியவில்லையா என்பதை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

ஜோக்ஸ் டாக்டர்..

ஏன்யா விஷத்தை சாப்பிட்டே?”
வயித்துவலி தாங்கமுடியலே டாக்டர். சாகதான் சாப்பிட்டேன்.”
நீ ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கறே… நாங்க எதுக்கு இருக்கோம். இங்க வந்து அட்மிட் ஆனா நாங்களே அதைப் பார்த்துக்குவோமில்லே!

டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு
மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி
இருக்கு?
நோயாளி…- பரவாயில்லை குணமாயிட்டுது
டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லை
ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு
வந்தடறேன்….

 டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.

ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் ஒரு வாரம் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!
 நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"

உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

நர்ஸை டாவடிக்க ஏதாவது ஒரு நோய் பெயரைச் சொல்லிட்டு இந்தாளு அடிக்கடி வர்றான்!”

“டாக்டர் தான் போலின்னா பேஷண்ட்டுமா?”

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
டாக்டர் : நூறு பர்சன்ட் கரெக்டான நேரத்துக்குத்தான் உங்க தாத்தாவைக் கூட்டி வந்திருக்கீங்க!

அவன் : என்ன டாக்டர், அவ்வளவு மோசமான பண நெருக்கடியா உங்களுக்கு?

”ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'


டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....

காட்டுங்க உங்க பர்ஸை !'

எழுத்தில் சொல்ல முடியா இலக்கியங்கள்..

                                                     இரவு அழகானது
                                   இருள் வந்து மூடிக்கொண்டாலும்
                                              இயற்கை அழகானது
                                   இடையிடையே வந்து சீண்டிச்செண்றாலும்

குழந்தையின் மழலை மொழியும்
                                              இயற்கையின் மௌன மொழியும்
                                                     எழுத்தில் சொல்ல முடியா
                                                               இலக்கியங்கள்..

உலகம் அழகானது
மனிதம் வாழும் வரை

                                                            வானவெளிகளில்
                                                         பறந்து திறிவோம்
                                                  பரவசங்களை சிறகுகளாக்கி..

கனவுகள் பொய் சொல்பவை
காட்சிகளே மெய் சொல்பவை

                                                   கண்களை மூடிக்கொள்ளுங்கள்
                                                  மனதை திறந்துகொள்ளுங்கள்
                                                           ரசிக்க தொடங்குங்கள்..

                                                                      தனிமையான
                                                            உலகம் வேண்டுகிறேன்
                                                            தொலைந்து போவதற்கு
                                                                     தனிமைக்குள்..
                                                        
                                                          
                                                மழை பொழியும் பொழுதுகளில்
                                                         நனைந்தேவிடுகிறது
                                                                    மனதும்
                                                  
                                          வண்ணத்துபூச்சிகளாய் மாறிவிடுகிறேன்
                                                  பூக்களை கானும் போதெல்லாம்
                                                     தேன் திருடுவதற்காய் அல்ல
                                                             ரசிப்பதற்காய்
                                                           திருடும் அழகை..
                                                     இருள் சூழ்ந்த இரவுக்கு
                                                    இலவச மின் தோரணம்
                                                            உன் அழகு..

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics