எழுத்தில் சொல்ல முடியா இலக்கியங்கள்..

                                                     இரவு அழகானது
                                   இருள் வந்து மூடிக்கொண்டாலும்
                                              இயற்கை அழகானது
                                   இடையிடையே வந்து சீண்டிச்செண்றாலும்

குழந்தையின் மழலை மொழியும்
                                              இயற்கையின் மௌன மொழியும்
                                                     எழுத்தில் சொல்ல முடியா
                                                               இலக்கியங்கள்..

உலகம் அழகானது
மனிதம் வாழும் வரை

                                                            வானவெளிகளில்
                                                         பறந்து திறிவோம்
                                                  பரவசங்களை சிறகுகளாக்கி..

கனவுகள் பொய் சொல்பவை
காட்சிகளே மெய் சொல்பவை

                                                   கண்களை மூடிக்கொள்ளுங்கள்
                                                  மனதை திறந்துகொள்ளுங்கள்
                                                           ரசிக்க தொடங்குங்கள்..

                                                                      தனிமையான
                                                            உலகம் வேண்டுகிறேன்
                                                            தொலைந்து போவதற்கு
                                                                     தனிமைக்குள்..
                                                        
                                                          
                                                மழை பொழியும் பொழுதுகளில்
                                                         நனைந்தேவிடுகிறது
                                                                    மனதும்
                                                  
                                          வண்ணத்துபூச்சிகளாய் மாறிவிடுகிறேன்
                                                  பூக்களை கானும் போதெல்லாம்
                                                     தேன் திருடுவதற்காய் அல்ல
                                                             ரசிப்பதற்காய்
                                                           திருடும் அழகை..
                                                     இருள் சூழ்ந்த இரவுக்கு
                                                    இலவச மின் தோரணம்
                                                            உன் அழகு..

16 comments:

Kumaran said...

@@ இரவு அழகானது
இருள் வந்து மூடிக்கொண்டாலும்
இயற்கை அழகானது
இடையிடையே வந்து சீண்டிச்செண்றாலும் @@

என் இனிய இரவு வணக்கங்கள்,
எத்தனை ஆழமான வரிகள்..அத்தனையும் உண்மை..எனக்கு சில நேரங்களில் சில கவிதைகள் நெஞ்சை தொடும்.சில கண்களை மூடும்.இந்த இரவு நேர மழை பொழுதில் தங்கள் கவிதை என் கண்களுக்குள் தூக்கத்தை தொடுகிறது.வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் பணி.

Riyas said...

குமரன்.. உங்கள் முதல் வருகைக்கும் காத்திரமான கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க..

இப்ப ஊர்ல மழையா! மழையென்றாலே மனதுக்கு குதூகலம்தானே..

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் மச்சி,

இயற்கையுடன் ஒன்றித்த கவிஞனின் மன உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்தக் கவிதை.

ரசித்தேன்.

Mohamed Faaique said...

///தனிமையான
உலகம் வேண்டுகிறேன்
தொலைந்து போவதற்கு
தனிமைக்குள்..///

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.. அப்புறம் அது உங்கள் உலகம்தான்....

கவிதைகள் எல்லாம் அருமை... முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கு...

Riyas said...

வாங்க நிரூபன்,

உங்களுக்கும் இரவு வணக்கம், நன்றிங்க

பேருதான் என்னமோ மாதிரி இருக்கு!

Riyas said...

வாங்க பாயிக்,

கண்ணை மூடியாச்சி, விடியும் வரை என் உலகம்தான்.. தூங்கபோரேன்னு சொன்னேன்!

தனிமரம் said...

Nall kavithai .iravu ninaivugal . Athikam.

ஹேமா said...

கண்ணை மூடி மனதைத் திறந்து ரசித்தேன் ரியாஸ்.அத்தனையும் காதலும் இயற்கையும் சேர்ந்த ஒளிவட்டத்துள் அழகாய் !

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா ! படமும் கவிதையும் அருமை சார் !

Unknown said...

பொங்கல் கரும்பே-கவிதை
பூத்திடும் அரும்பே
திங்கள் ஒளியே-நல்
தென்றல் வளியே
உங்கள் பாடல்-இயற்கை
உணர்வின் தேடல்
மங்காத் தமிழில்-மேலும்
மணந்திட எழலில்

என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

மிக அழகான கவிதை பெரிதும் ரசித்தேன் பாஸ்

arasan said...

மென்மையான படைப்பு .. வாழ்த்துக்கள்

Anonymous said...

படமும் கவிதையும் அருமை...ரசித்தேன்..

Anonymous said...

ellame superaa irukkuthu

vimalanperali said...

அழகான படங்கள்.விரியும் கவிதைகள்.வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

படங்களும் கவிதைகளும் மிக மிக அருமை

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2