The Edge உயிர்காக்கும் போராட்டம் -உலகசினிமா..

கண்களால் பார்க்கும் காட்சிகளை,மனதில் தோன்றும் எண்ணங்களை,அனுபவங்களை எழுத்துகளாக்கி வார்த்தைகளாக கோர்த்து ரசிக்கும் வகையில் படைப்பாக்குவதென்பது மிகக்கடினமான ஒன்று அது எல்லோராலும் முடியாத ஒன்று.. சில படைப்பாளிகளை கண்டு வியந்திருக்கிறேன். தன் எண்ணத்தின் வடிவங்களை காட்சி படிவங்களாக மாற்றி ரசிகர்கள் விழிகளுக்கும் அதனூடே விரியும் எண்ணங்களுக்கு விருந்தாக படைத்திருப்பார்கள். நான் வலைப்பூ ஆரம்பித்ததும் என் எண்ணங்களையும் நான் ரசித்ததையும் என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவே.. ஆனால் அந்த நோக்கம் இன்னும் பத்து வீதமேனும் நிறைவேறவில்லை.. காரணம் அவற்றை எழுத்துகளாகவே கொண்டு வருவதில் உள்ள கடினமே..

அண்மையில் நான் பார்த்த ஒரு ஆங்கில திரைப்படம் பற்றிய என் பார்வையே இது. விமர்சனமோ,அலசலோ இல்லை அந்தளவுக்கு நமக்கு அறிவும் இல்லை. இது சும்மா நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியே.
 The Edge 1997 யில் வெளிவந்த ஓர் ஆங்கிலத்திரைப்படமாகும். இதில் Charles என்ற கோடீஸ்வரர் கதாபாத்த்திரத்தில் Anthony Hopkins யும் Robert Green (Bob) என்ற புகைப்படக்கலைஞர் பாத்திரத்தில் Alec Baldwin யும் நடித்திருக்கிறார்கள் அவர்களின் உதவியாளராக Stephen பாத்திரத்தில் Harold Perrineau யும் நடித்திருக்கிறார்கள்.. இவ்வளவுதான் முக்கிய பாத்திரங்கள் இவர்களுடன் சேர்ந்து ஒரு கரடியும் பிரதான பாத்திரமாக நடித்திருக்கிறது. இப்படத்தை இயக்கியிருப்பவர். Lee Tamahori

நான் மேலே குறிப்பிட்ட மூவரும் ஒரு விமானியும் ஒரு சிறியரக ஜெட் விமானத்தில் குறித்த ஒரு இடத்தைநோக்கி பயணிக்கிறார்கள். அநத விமானம் அந்த கோடீஸ்வரர் சார்ல்ஸுக்கு சொந்தமானது. செல்லும் வழியில் தீடிரெண்டு ஒரு பறவைக்கூட்டத்தில் மோதி விபத்தில் சிக்கி ஒரு நீர் நிறைந்த ஏரியில் விழுந்துவிடுகிறது விமானம். இதனால் அந்த விமானி உயிரிழக்க மற்ற மூவரும் தப்பித்துவிடுகின்றனர். ஏரியிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அது காடுகளும்,மலைகளும் பனியும் சூழ்ந்த ஒரு குளிர் பிரதேசம். அது எந்த பிரதேசம்,நாடு என்றோ அவர்களுக்கு தெரியவில்லை. எந்தவித மனித நடமாட்டமோ கட்டடங்களோ இல்லாத பகுதியாகும். இவ்வாறு அலைந்து கொண்டிருக்கும் போது ஒரு கரடி குறுக்கிட்டு துரத்துகிறது.. அதிலிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். பின் இரவு வேளையில் அதே கரடி மீண்டும் வந்து ஸ்டீபனை தாக்கி கொண்றுவிடுகிறது. அதன் பிறகு இவர்கள் போகுமிடமெல்லாம் கரடி பின் தொடர்ந்து தாக்க முற்படுகிறது.. கரடியிடமிருந்து மீண்டார்களா, இவர்கள் இருவரும் என்னவானார்கள் என்பதே மீதிக்கதை மிக சுவாரஷ்யமாக திரில்லாக நகரும்..

 இவ்வகையான படங்களை ஆங்கிலத்தில் Survival Movies என்றழைப்பார்கள் அதாவது உயிரைக்காப்பாற்ற போராடும் கதைகளை கொண்ட திரைப்படமாகும். அந்த வகையில் இப்படத்திலும் உண்பதற்கு உணவின்றி அலையும் நிலையில் காட்டு மிருகங்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள எப்படி போராடுகிறார்கள் என்பதை இப்படம் அழகாக காட்டுகிறது.. இவ்வாறான இயற்கை காட்சிகளினூடே நகரும் படங்களே என்னை மிகவும் கவர்ந்தவை அவ்வாறான தேடலில் சிக்கியதே இந்தப்படம்.வீட்டிற்குள்ளோ ஹோட்டலிலோ உட்கார்ந்து மணிக்கனக்காக பேசிக்கொண்டிருக்கும் படங்கள் எனக்கு புரிவதுமில்லை பிடிப்பதுமில்லை.

ஒரு கட்டத்தில் கரடியிடமிருந்து தப்பித்து ஓடுவதைவிட கரடியைக்கொன்றால் என்ன, என வயதான கோடீஸ்வரர் சார்ல்ஸ் சொல்ல அது முடியாத காரியம் என bob மறுக்க. அபிரிக்காவில் உள்ளவர்கள் மிருகங்களுடன் சண்டையிட்டு அவட்டை வேட்டையாடுகிறார்கள். ஒருவனால் செய்ய முடிந்ததை இனொருவனாலும் செய்ய முடியும் What one man can do, another can do. What one man can do, another can do. இதை திரும்ப திரும்ப சொல்லி கரடியை கொல்வதற்கு வெறியையும் நம்பிக்கையும் ஊட்டும் காட்சி வெகு சுவாரஷ்யம். அதன் வீடியோ இங்கே..


இவ்வாறான சுவாராஷ்யமான உரையாடல்கள் நிறையவே இருக்கு ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த எனக்கே சுவாராஷ்யமாக தோன்றியது என்றால் உங்களுக்கு இன்னும் சுவாரஷ்யம் தரும் உதாரணத்துக்கு கீழேயுள்ள வசனங்கள்.

Charles Morse: You know, I once read an interesting book which said that, uh, most people lost in the wilds, they, they die of shame.
Stephen: What?
Charles Morse: Yeah, see, they die of shame. "What did I do wrong? How could I have gotten myself into this?" And so they sit there and they... die. Because they didn't do the one thing that would save their lives.
Robert Green: And what is that, Charles?
Charles Morse: Thinking.

ஒரு மனிதனின் உயிருக்கு ஆபத்தோ, அல்லது அதிலிருந்து மீள்வதற்கு எவ்வாரெல்லாம் சிந்திக்கிறான. போராடுகிறான அவ்வாறான நேரங்களில் எப்படி நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதையும்.. சுயநலத்துக்காக நன்றிமறந்து இன்னொருவனை அழிக்க நினைப்பவன்.. தானே அழிந்து போவான் என்பதை இப்படம் அழகாக சித்தரிக்கிறது படத்தில் வரும் இறுதிநேர மாற்றம் நான் எதிர்பார்க்காதது..
படத்தின் ட்ரெயிலர்.


YouTube Link Full Movie.


For Tamilmanam Vote..

11 comments:

Admin said...

தோழர்..உங்கள் படைப்பை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.நேரமிருப்பின் சென்று பாருங்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல பார்வை.மிக அழகாக விவரித்து இருக்கீங்க.

Thava said...

இது போன்ற படங்கள் என்றாலே அலாதி பிரியம் எனக்கு உண்டு..விமர்சனம் படித்தாலே தெரிகிறது இது ரொம்ப சுவாரஸ்யங்கள் நிறைந்த படம் என்று..பார்த்துவிடுகிறேன்.நன்றி.

K.s.s.Rajh said...

சுவாரஸ்யம் நிறைந்த படம் போல பார்த்திட்டால் போச்சு

பாலா said...

இந்த படத்தை நிறைய தடவை கண்டு களித்திருக்கிறேன். கரடி வரும் காட்சிகள், குறிப்பாக ஆற்றில் மரக்கட்டையில் நடந்து செல்லும் காட்சி எதார்த்தமாக ஆனால் மிக திரில்லிங்காக இருக்கும். அதே போல கரடியை கொல்லும் காட்சியும் மிகைப்படுத்தாமல் எடுத்திருப்பார்கள்.

Riyas said...

நன்றி மதுமதி அவர்களே..

Riyas said...

நன்றி வருகைக்கு.

Riyas said...

வருகைக்கு நன்றி குமரன்.

Riyas said...

ஓக்கே பாஸ்..

Riyas said...

ஆமாம் நண்பரே நீங்க சொல்வது சரியே,, வருகைக்கு நன்றி

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லதோர் விமர்சனமாக இருக்கிறது,
விமர்சனத்தை சிறப்பாகத் தானே எழுதியிருக்கிறீங்க. அப்புறம் ஏன் இது விமர்சனம் போல இருக்காதென்று ஒரு பில்டப்பு?

நான் டைம் கிடைக்கும் போது படம் பார்க்க முயற்சிக்கிறேன்.

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...