உலகிலுள்ள சிறந்த நூறு தாழ்வு மனப்பாண்மையாளர்களை பட்டியலிட்டால், அந்த பட்டியலில் நானும் இடம்பெறலாம்..அவ்வளவு தாழ்வு மனபபாண்மை என்னுள் இருந்தது. அது ஒரு கொடிய நோய் கொஞ்ச்ம் கொஞ்சமாய் ஆளைக்கொல்லக்கூடியது..இப்போது அதிலிருந்து மீண்டுகொண்டுருக்கிறேன்,சீக்கிரம் மீண்டு விடுவேன்!! எனக்குள் இருந்தது தாழ்வு மனப்பாண்மைதான் என்பதை நீண்ட நாட்களுக்குப்பிறகுதான் புரிந்துகொண்டேன்..அதற்கு காரணம் வாசிப்பும் நல்ல சில சினிமாக்களும்தான்.. வாசிப்பு என்பது ஒரு மனிதனை புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு அற்புதமான ஆயுதம்..
பால்ய கால பள்ளிப்பருவம் எல்லோருக்கும் கொண்டாட்டம் நிறைந்தது.. ஆனால் எனக்கு அது நரகம்!! ஆமாம், அந்தக்காலங்களில் என்னுடன் படித்த சக மாணவிகளுடன் நான் மொத்தமாக பேசிய வார்த்தைகளை ஒரு A4 சைஸ் தாளில் எழுதிவிடலாம் காரணம் எனது தாழ்வு மனப்பாண்மை. எல்லோரைப்போலவும் சிரிக்கனும்,பேசனும்,பழகனும் என்ற ஆசையும்,கற்பனையும் தாராளமாகவே இருக்கும்.. ஆனாலும் பக்கத்தில் சென்று பேச தயக்கம்..காரணம் எனது உடலில் இருந்த ஒரு சிறிய குறைபாடுதான்..(என்னவென்று சொல்லவிரும்பவில்லை) ஆனால் அதெல்லாம் ஒரு விடயமே அல்ல எனபது இப்போதுதான் புரிகிறது எனக்கு. சில விடயங்களை காலம் தாண்டித்தான் புரிய வைக்கிறது இந்த உலகம்!!
அப்படி எனது ஆயிரக்கணக்கான ஆசைகளும், ஆதங்கங்களும், கற்பனைகளும் வெளிவந்ததேயில்லை. எல்லாம் உள்ளேயே இறந்து போய்விட்டன.. நான் நிஜத்தில் வாழ்ந்ததைவிட கற்பனைகளிலேயே அதிகம் வாழ்ந்திருக்கிறேன்..மனதுக்கு பிடித்தவர்களை மனதில் நினைத்துக்கொண்டு அவர்களுடன் பேசுவதாய் கற்பனையிலே பேசியிருக்கிறேன்,சிரித்திருக்கிறேன்.. ஒரு கட்டத்தில் நானே பயந்திருக்கிறேன் எனக்கு மனநோய் பைத்தியம் பிடித்து விடுமோ என..நல்லவேளை அப்பிடி நடக்கவில்லை. காரணம் நான் படித்த சூழலும் அவ்வாறு, வெளியூரில் சென்று படிக்கும் போது நிறைய பேர் விடுதியில் தங்கியே படிப்பார்கள்.. சிலர் மாத்திரம் வீடுகளில் தங்கி படிப்பார்கள். நானும் விடுதியில் தங்க தயங்க ஒரு வீட்டில் சேர்த்து சேர்த்துவிட்டார்கள்.. உயர்தரம்(A/L =P1,P2) படித்த கடைசி இரண்டு வருடங்களும் தனியறையில் தனிமையாக பேசிக்கொள்வதற்கு கூட அந்தவீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை.. எனது நிலையை எண்ணிப்பாருங்கள் புரியும்.தனிமை மிகக்கொடுமை!!
பைத்தியக்காரர்கள் தனிமையில் சிரிப்பார்கள் பேசுவார்கள் ஆனால் தனிமையில் பேசுபவர்கள்,சிரிப்பவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் இல்லை.. ஆனாலும் இந்த பாழாய்போன தாழ்வு மனப்பாண்மையினால்.. மிக மிக கோழையாகவும், முட்டாளாகவும் இருந்திருக்கிறேன்.. துள்ளித்திரிந்திருக்கவேண்டிய என் பள்ளிநாட்களை கோழைத்தனமாக கழித்திருக்கிறேன் என இப்போது நினைக்கும் போது கூட நான் கொண்டிருந்த தாழ்வு மணப்பாண்மை மீது பெரிய வெறுப்பு ஏற்படுகிறது.. இதனால் நான் இழந்ததும் தொலைத்ததும் மிக மிக அதிகம்!! அவை மீளப்பெற முடியாதவை.. பாடசாலைகளினால் நடாத்தப்படும் இல்ல விளையாட்டுப்போட்டிகளிலோ,கல்விச்சுற்றுலாக்களிலோ நான் கலந்து கொண்டதாய் சரித்திரமே இல்லை!
நான் கிறுக்கிய சில காதல் கவிதைகளைப்பார்த்து சிலர் என்னிடம் யாரையாவது காத்லித்தீர்களா? இல்லை காதலில் தோல்வியா? அப்பிடி கேட்டதுண்டு.. இல்லவே இல்லை!! பெண்களுடன் பேசவேயில்லை, என்கிறேன்! எப்படி காதலிப்பது.. இந்த கவிதை சமாச்சாரம் கிறுக்க தொடங்கியதும் இந்த தாழ்வு மனப்பாண்மையின் ஒரு அங்கம்தான்.. அதாவது வெளியில் சகஜமாக சொல்லத்தயங்கிய சொல்லாமல்விட்ட மனதில் பூட்டிக்கிடந்த மௌனங்களை மொழி பெயர்க்கும் முயற்சி..மற்றபடி இலக்கியத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம்.. தமிழ் வார்த்தியாரைக்கண்டாலே பத்தடி தள்ளிப்போற கூட்டம் நாங்க..
நான் இந்த வலைத்தளத்தில் இதற்கு முன் எழுதிய சில வரிகளும் என் தாழ்வு மனப்பாண்மையின் தாக்கத்தை சொல்வதாகவே இருக்கும்.. இதெல்லாம் வெறும் கற்பனை என எண்ணி "அருமை" என பலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.. ஆனால் என் மனதின் வலி எனக்கு மட்டும்தான். அவ்வாறான சில வரிகள் கீழே..
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...
ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...
தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்.
கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..
கொன்றுவிட முயல்கிறேன்
இறந்தகால
தோல்விகளையும்
கோழைத்தனங்களையும்...
இந்த தாழ்வு மனப்பாண்மை விடயத்தில் பெற்றோர்களின் பங்கும் இருக்கிறது.. எனக்கு ஏற்பட்ட அந்த சிறிய உடல் குறைபாட்டை சிறிய வயதிலே சிகிச்சை மூலம் நீக்கியிருக்கலாம்.. ஆனால் அவர்கள் அதை கவனிக்கவில்லை!! இங்கே எனது பெற்றோர்களை குறை சொல்வது நோக்கமில்லையென்றாலும்.. அவர்களின் சிறிய கவலையீனத்தால்.. அதன் மூலம் நான் அடைந்த கொடுமைகள் அதிகம்.. தானாக தெளிவு பெறுவதற்கு அவகாசம் குறைவு.. பள்ளிப்படிப்பை தவிர இப்போது போல் தேடல்களோ பரந்து பட்ட வாசிப்பனுபவங்களோ அப்போது இருந்ததில்லை.. "அவனுக்கு கூச்சசுபாவம் அதிகம்" எனச்சொல்லியே வளர்த்து விட்டார்கள், ஆனால் அந்த கூச்சசுபாவம் ஏற்பட என்ன காரணம் என ஆராய மறந்துவிட்டார்கள்!!
ஆதலால் பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் உடலில் சிறிய ஒரு குறைபாடு என்றாலும் அதை சிறிய வயதிலே அகற்ற முயற்சி செய்யுங்கள்.. இல்லையேல் அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே தொலைத்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது..நானாவது இப்போது தெளிவு பெற்றேன் ஆனால் இந்த தாழ்வு மனப்பாண்மையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.. நண்பர்களே, சகோதரர்களே தாழ்வு மனப்பாண்மை உங்கள் மனதிலும் இருக்கிறதா.. அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய்யுங்கள்..உங்களையும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறது.. கவலையை விடுங்கள்.. என் மனதில் உள்ளதை இங்கே கொட்டியது போன்று உங்கள் மனதில் உள்ளவற்றையும் நெருங்கியவர்களிடமோ பெற்றோர்களிடமோ சொல்லுங்கள்.. நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! இங்கே நான் சொன்னது இது வரை யாரிடமும் சொல்லாதது..
உங்கள் திறமைதான் உங்கள் அடையாளம் உங்கள் உடல் அல்ல!! ஏன்.. நான் கூட கடல்தாண்டி வந்து வேலை செய்வேன் என நினைத்து பார்த்ததேயில்லை.. இப்போது அபுதாபியில் நல்லதொரு வேலையில் இருக்கிறேன்..
எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!
18 comments:
தங்கள் இளமை கால அனுபவத்தை நன்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
நானும் உங்களைப்போலவே சில்வற்றை இளமையில் அனுபவித்துள்ளேன். என்னுடைய “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற பதிவில் கூட இதைப் பற்றி ஓரளவுக்கு எழுதியுள்ளேன்.
முடிந்தால் அந்த 7 தொடர் பகுதிகளையும் படித்துப்பாருங்கள்.
படித்தபின் கருத்தும் கூறுங்கள்.
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/03/1.html
முதல்
http://gopu1949.blogspot.in/2012/03/7.html
வரை 7 பகுதிகள்.
===============================
தாங்கள் இது போன்ற தாழ்வு மனப்பான்மையுள்ள மற்றவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கூறியுள்ள ஆலோசனைகள் மிகவும் பய்னுள்ளவை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
===============================
இந்த தங்களின் பதிவில் ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன:
//நண்பர்களே, சகோதரர்களே தாழ்வுமணப்பாண்மை உங்கள் மனதிலும் இருக்கிறதா//
”தாழ்வு மனப்பான்மை” என்பதே சரி.
எழுத்துப்பிழையை சரி செய்துவிடவும்.
//உங்கள் திறமைதான் உங்கள் அடையாளம் உங்கள் உடல் அள்ள!!//
கடைசியில் உள்ள வார்த்தை “அல்ல” என்று இருக்க வேண்டும். அதையும் சரிசெய்து விடவும்.
அன்புடன் vgk
@வை.கோபாலகிருஷ்ணன்
உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை செலவு செய்து பெரிய்தொரு பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி ஐயா..
உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..
உங்கள் பதிவுகளை படித்துவிட்டு நிச்சயம் கருத்து சொல்கிறேன்..
எழுத்துப்பிழைகள்தான் எனது பெரிய பிரச்சினை இப்போதே திருத்தி விடுகிறேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அட நீங்களும் நம்மள மாதிரி கூச்ச சுபாவ ஆளா? எனக்கும் இதே அனுபங்கள்தான் Riyas
Thank you for sharing your thought not everbody have the guts to openly say what i their mind escpecially mental healh problem.
i wish everying works out for you and lead a life you wanted.
what do you think of "3" movie ?
//ஆமாம், அந்தக்காலங்களில் என்னுடன் படித்த சக மாணவிகளுடன் நான் மொத்தமாக பேசிய வார்த்தைகளை ஒரு A4 சைஸ் தாளில் எழுதிவிடலாம்//
அதே அதே ... பாடசாலை நாட்களில் அனேகமாக இதைப் போலவே என் அனுபவங்களும். அது தாழ்வு மனப்பான்மை அல்ல. ஒரு தயக்கம், வெட்கம். அவ்வளவே.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
தான் பெற்ற துன்பத்தை அப்படியே எடுத்துக் கூறி, பிறர் படக்கூடாது எனும் உங்கள் உயர்ந்த உள்ளம் வாழ்க! சா இராமாநுசம்
நமக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரைதான் பிரச்சனையே. அதை கண்டுபிடித்து விட்டாலே அதை விட்டு வெளிய வர தொடங்கி விட்டோம் என்று அர்த்தம். நீங்கள் மீண்டு வந்ததற்கு நன்று. இந்த உலகில் எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் தாழ்வு மனப்பான்மை உண்டு. ஆனால் அதை வெல்வதிலேயே வாழ்வில் வெற்றி அடங்கி இருக்கிறது. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...
ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடுமிகவும் அருமையான வரிகள் .
பல காரணங்களுக்காய்...//
அருமையான வழி காட்டும் பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நிறைய படியுங்கள். நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள் திரு ரியாஸ்.
சிறப்பான பதிவு !
"இந்த தாழ்வு மனப்பான்மை விசயத்தில் பெற்றோர்களின் பங்கும் இருக்கிறது....." - 100% உண்மை !
பாராட்டுக்கள் !
தன்
சுயத்தை சொல்ல முடியாமல்
உள்ளுக்குள் விதும்பிக் கொண்டிருக்கிறார்கள்
எத்தனயோ கோழைகள்
அன்றைய
நிலையையும் அதில் இருந்து
மீண்டத்தையும் மிக அழகா
சொல்லி இருக்கிறீர்கள் சகோ
நானும் சிலதை கற்றுக்கொண்டேன் சகோ
தாழ்வு மனப்பான்மை முழுவதுமாக தீமை விளைவிக்கிறது என்று கூறிவிட முடியாது. ஒருவிதத்தில் உருவாகும் தாழ்வுமனப்பான்மை நம்முடைய வேறு திறன்களை வெளிப்படுத்தத் தூண்டுகிறது.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் நம்மால் சிறப்பாக செயப்பட முடியாத சூழ் நிலை பல சமயங்களில் நல்ல தமிழ் கவிதைகளை எழுத ஊக்குவிக்கிறது. நல்ல பதிவு.
வாசிப்பு என்பது ஒரு மனிதனை புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு அற்புதமான ஆயுதம்..
மீண்டு வந்ததற்குப் பாராட்டுக்கள்..
ரியாஸ் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... ஆனாலும் நிறைய பேசணும் போலவே இருக்கு :(
ரியாஸ் இந்த தாழ்வு மனப்பாங்கு என்னிடமும் பள்ளி நாட்களில் இருந்து இருக்கு....
பிரான்சில் நான் வந்த புதுசில் என்னை பிரான்ஸ் அரசாங்க பள்ளியில் சேர்த்துவிட்டார்கள் அங்கே இருந்தவர்கள் எல்லாம் இங்கேயே பிறந்த பிள்ளைகள் ஆகவே எனக்கு தெரிந்த பிரஞ்சு அவர்களுக்கு காமெடி தான்.... இதனால் நான் அதிகம் யாருடனும் அப்போ பேச மாட்டேன்.....
பின்பு பிரஞ் நன்றாக தெரிந்த பின்னும் அந்த தாழ்வு மனப்பான்மையில் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பேன்.... இதனால் நான் இழந்தது ரெம்ப அதிகம் :(((
ரியாஸ் நீங்கள் ரியலி கிரேட் ;))
உண்மைதான் நிறைய நல்ல படங்களும் புத்தகங்களும் தான் நமக்கு நிறைய சொல்லி தருது.
வாழ்த்துக்கள் ரியாஸ்... நல்ல பதிவு ஒன்று படித்த உணர்வு எனக்கு
//கொன்றுவிட முயல்கிறேன்
இறந்தகால
தோல்விகளையும்
கோழைத்தனங்களையும்...//
அருமையான பதிவு ரியாஸ்
தாழ்வு மனப்பான்மை அதனுள்
தாழ்ந்துவிடாதே -நம்மை
தாழ்வாக்கிவிடும் பிறருள்.
நல்ல பதிவு பாஸ்!
என்னிடமும் நிறைய இருந்திருக்கிறது! அப்படி இருந்ததன் தாக்கம் இப்போதும் சிலசமயம் தொடர்கிறது!
//T.N.MURALIDHARAN said...
தாழ்வு மனப்பான்மை முழுவதுமாக தீமை விளைவிக்கிறது என்று கூறிவிட முடியாது. ஒருவிதத்தில் உருவாகும் தாழ்வுமனப்பான்மை நம்முடைய வேறு திறன்களை வெளிப்படுத்தத் தூண்டுகிறது.//
ரிப்பீட்டு!!
எல்லாருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாழ்வு மனப்பான்மையால் ஆட்படத்தான் செய்கிறோம். ஆனால், எப்படியாவது வென்று வெளிவந்துவிடுகிறோம்.
//சக மாணவிகளுடன் நான் மொத்தமாக பேசிய வார்த்தைகளை ஒரு A4 சைஸ் தாளில் எழுதிவிடலாம் //
பள்ளிப்பருவத்தில் நான் பையன்களோடு பேசினதை ஒரு பிட்டுப் பேப்பரில்கூட எழுதமுடியாது. ஏன்னா, நான் படிச்சது பெண்கள் பள்ளியில்!! ஹி... ஹி...
அதுவே பின்னாளில் கல்லூரியில் ஆண்களோடு படிக்கும்போது தயங்கித் தயங்கி ஆரம்பித்து, பின் (அளவோடு அவசியத்தின்பேரில்) பேசிக்கொண்டோம்.
பெண்களோடு அப்போது நீங்கள் பேசியிருந்தாலும் அவை பிரயோஜனமற்றவையாகவே இருந்திருக்கும். உங்கள் பிற திறமைகளும் வெளிவராமலேயே போயிருக்கும். எல்லாம் நன்மைக்கே. :-)))))))))
Post a Comment