இம்சைகள் தரும் இரவு நீ..


விடிய மறுக்கும்
இரவும் நீ
விடியற்காலை
அலாரமும் நீ..
தூக்கம் தொலைக்கும்
நினைவுகளும் நீ
தூங்க வைக்கும்
சோம்பலும் நீ...
இதம் தரும்
நிலவும் நீ
இம்சைகள் தரும்
இரவும் நீ..
நனைய வைக்க்கும்
மழையும் நீ
நனைந்த பின் வரும்
காய்ச்சலும் நீ..
அமெரிக்கனின்
ஆணவமும் நீ
ஈராக் தாயின்
கண்ணீரும் நீ..

குடித்து முடித்த
தேநீர் கோப்பையில்
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் வளையல் சினுங்கல்கள்!!!

மழை வந்து போனபின்
தொற்றிக்கொள்ளும் தொற்று நோயாய்
நீ வந்து போனபின்
தொற்றிக்கொள்கிறது வெறுமை!!!


5 comments:

Unknown said...

மழை வந்து போனபின்
தொற்றிக்கொள்ளும் தொற்று நோயாய்
நீ வந்து போனபின்
தொற்றிக்கொள்கிறது வெறுமை!!!

கற்பனை அருமை!கவிஞரே நலமா!

புலவர் சா இராமாநுசம்

ஆத்மா said...

NANBAA soooper kavithai
really good hmmm

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ... நண்பரே ...

சசிகலா said...

குடித்து முடித்த
தேநீர் கோப்பையில்
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் வளையல் சினுங்கல்கள்!!!// ரசனை மிகும் வரிகள் அழகு .

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2