குழந்தைகள் சிறுவர்களுக்கான உலகம் என்பது ஒரு தனி ராச்சியம் தனி சொர்க்கம். அவர்கள் உலகத்தில் சந்தோஷங்கள் மட்டுமல்ல சில வேளை சோகங்களும் உண்டு.. போராட்டங்களும் உண்டு, நாமும் நம் வாழ்க்கையில் அவ்வாறான பல தருணங்களை போராட்டங்களை கடந்து வந்திருப்போம்.. அதிலும் ஏழ்மையான இளமைக்கால வாழ்க்கை என்பது அதிகமான ஏக்கங்களை கொடுக்ககூடியது.. ஒரு பிரிவினர் தேவைக்கு அதிகமான செல்வத்திலும் சுக போகத்திலும் திளைத்திருக்க! இன்னுமொரு பிரிவினர் அன்றாட உணவிற்கே வழியில்லாமல் கஷ்டப்படும் போது.. ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள், என்ன வாழ்க்கைடா இது என சலித்துக்கொள்வதுமுண்டு! இதுதான் விதி என அதன் பாதையிலேயே செல்பவர்களும் உண்டு..
ஈரானிய திரைப்படம் என்றாலே வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சமூகத்தின் நிலைப்பாடுகளையும் அச்சு அசலாக உள்ளதை உள்ளபடியே உருவாக்கப்பட்டிருக்கும். பெரிதாக அலட்டிக்கொள்ளாத எதிர்பாராத கதைக்களங்களை எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருப்பதை பல ஈரானிய திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.. இதிலும் ஒரு பாதனியை அடிப்படையாக வைத்து கதை திரைக்கதை அமைத்திருப்பது வியக்க வைக்கிறது.. இது போல தமிழில், முழுமனே ஒரு மோட்டார் சைக்கிளை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்துக்காக.. ஈரானின் புகழ்பெற்ற இயக்குனர் மஜீத் மஜிதின் இயக்கத்தில் அழகான எல்லோரும் கண்டுகளிக்ககூடிய அற்புதமான சிறுவர்கள் திரைப்படமாகும்..
children of heaven படத்தின் கதையென்ன..
இது ஏழை குடும்பமொன்றில் பிறந்த சாரா, அலி என்ற அண்ணன் தங்கைக்கிடையில் நடைபெறும் கதையாகும்.. சாராவின் பாடசாலைக்கு அனிந்து செல்லும் பாதனி பிய்ந்துவிடவே அதை பழுது பார்க்க அண்ணன்
அலி வெளியே எடுத்துச்செல்கிறான். பழுது பார்த்துவிட்டு வரும்போது வேறு ஒரு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது அந்த பாதனிகள் தொலைந்து போகிறது/தொலைத்து விடுகிறான்.. அதை வீட்டுக்கு தெரியப்படுத்தாமல் அதன் பிறகு அலியின் பாதனிகளையே சாராவும் பாடசாலைக்கு அணிந்து செல்கிறாள். சாரா பாடசாலைவிட்டு வந்தவுடன் அலி அதனை அணிந்துசெல்கிறான் இருவரும் மாறி மாறி ஒன்றையே பயன்படுத்துகிறார்கள்.. இவ்வாரு தொடரும்போது பல்வேறு பிரச்சினைகளை இருவரும் சந்திக்கிறார்கள்..
இருவரும் வெவ்வேறு நேரங்களில் பாடசாலை செல்வதால் முதலில் சாரா சென்று வரும் வரைக்கும் அலி தெரு முனையில் காத்திருக்கிறான்.. சாராவுக்கு பாடசாலை முடிந்ததும் அலிக்கு சரியான நேரத்தில் பாதனியை ஒப்படைக்கும் நோக்கோடு சாரா அளவில் பெரிய பாதனியோடு ஓடியும் நடந்து ம் வருகிறாள், அதன் பிறகு அலி பாதனியை அணிந்து கொண்டு பாடசாலைக்கு ஓட்டமெடுக்கிறான்.. இருந்தும் தாமதமாகியே பாடசாலைக்கு செல்ல முடிகிறது இதனால் தொடர்ந்து ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான்..
ஒரு முறை பாடசாலை விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் வெல்பவர்களுக்கு பாதனி பரிசாக தருவதாக அறிவிக்கிறார்கள்.. எப்படி யும் அதை கைப்பற்றிட வேண்டும் என்ற நோக்கோடு, தங்கையிடம் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்து அலி அந்தப்போட்டியில் பங்குபற்றுகிறான்.. போட்டி முடிவில் அலி முதலாவதாகவும் வருகிறான்.. தனக்குத்தான் பாதனி என நினைத்திருக்க முதலாவதாக வந்தவருக்கு கேடயமும் இரண்டாவதாக வந்தவருக்கே பாதனியும் வழங்கப்படுகிறது இதனால் மிகக்கவலையும் ஏமாற்றமும் அடைகிறான்..
இவ்வாறு பல நெகிழ்வான காட்சிகளுடன் இவர்களுக்கு புதிய பாதனி கிடைத்ததா இல்லையா.. என்பதை மிகவும் சுவாரஷ்யமாகவும் கொஞ்சம் சோகமாகவும் கொடுத்துள்ளார் மஜித் மஜீதி.. குழந்தைகளின் உலகத்தை அப்பிடியே கண்முன்னே கொண்டுவந்த இயக்குனரை எவ்வளவும் பாராட்டலாம்..
இதில் அண்ணன் தங்கையாக இரு சிறுவர்களின் நடிப்பும் அபாரம்.. எப்படி இவ்வளவு அற்புதமாக கதைக்கு ஏற்ற உணர்வுகளையும் முகபாவங்களையும் வெளிப்படுத்துகிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்..
இருவரின் உரையாடல்களிலும் உணர்வுகளிலும் அவ்வளவு யதார்த்தமான முகபாவங்கள்,பொதுவாகவே ஈரான் சினிமாக்கள் மனதின் மெல்லிய உணார்வுகளை தட்டி எழுப்பக்கூடியது.. இந்தப்படமும் பார்ப்பவர்களை அந்த அண்ணன் தங்கை பாத்திரங்களோடு ஒன்ற செய்து விடுகிறது நமக்கும் அந்த பரபரப்பு,சோகம்,ஏக்கம் தொற்றிக்கொள்கிறது..படம் பார்த்து முடிந்து சில நாட்களுக்காவது அந்த உணர்வுகள் நம்மோடு பயணிக்கும்..
9 comments:
அண்மையில் A Separation படம் பார்த்த பின் தான் ஈரானிய சினிமாவில் ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. ஏற்கனவே கேள்விப்பட்ட படம். எடுத்துப் பார்க்கிறேன்.
நண்பரே,
அருமையான படம்...முன்பே பார்த்து இருந்தாலும் உங்கள் விமர்சனம் மறுபடியும் படம் பார்த்த திருப்தியை தந்தது...மிகவும் உணர்வுபூர்வமாக படத்தை எழுதி உள்ளேர்கள்..வாழ்த்துக்கள்..
முன்னமே இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்..
அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!
நல்ல விமர்சனம் !
தரமான படத்துக்கு அருமையான விமர்சனம்.
நான் இன்னும் பார்க்கவில்லை விமர்சனத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினை உணர்ந்தேன்
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
nice film
நீண்ட நாட்களுக்கு முன்பு என் சீட்டாருடன் இப்படம் பார்த்தேன்.எண்மை தான்.அத்தனையும் தத்ருபம்.பகிர்விற்கு நன்றி
Post a Comment