வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே..!!வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே


1994 ம் ஆண்டு இலங்கை அரசியலில் ஒரு பெரிய மாற்றம் அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட கால நீண்ட ஆட்சி முடிவடைந்து, கதிரை சின்னத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றமைதான் அந்த மாற்றம். அதில் இன்னொரு விஷேட அம்சமும் இருக்கிறது. மேல் மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறினார்.. அப்போது அரசாங்க படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் கடும் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியாகும்.. இவர் ஆட்சிக்கு வந்ததும் யுத்தநிறுத்தத்தை அறிவித்து சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்..பின் அது ஒரு உடன்பாடுக்கு வராமல் போனது பெரிய கதை மற்றும் துரதிஷ்டமும்தான்!!

இக்காலப்பகுதியில் நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்க ஆதரவுடன் ரூபவாஹினி தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட சமாதானப்பாடலே இந்த வெண்புறா பாடல்.. அக்கால கட்டத்தில் ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி (ITN) நிகழ்ச்சிகள் பார்த்தவர்கள் மனதில், பிடித்ததோ..இல்லையோ..பலவந்தமாகவேனும் புகுத்தப்பட்ட பாடல் இது! காரணம் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவில் ஏற்படும் சில நிமிட இடைவெளியில் இந்தப்பாடலை ஒளிபரப்புவார்கள்.. இப்போது போல் அப்போது பல அலைவரிசைகள் இல்லை மாற்றி மாற்றி பார்ப்பதற்கு.. அதனால் ஒரு நாளிலேயே பல தடவை பார்த்தும் கேட்டும் மனதில் பதிந்துபோன பாடல்.. மாலை செய்தியறிக்கையின் முன்னும் பின்னும் தவறாமல் ஒளிபரப்புவார்கள் அந்தக்கால சிறுசுகளின் முனுமுனுக்கும் பாடலாகவும் இது இருந்தது.

சமாதான பாடல் என சொல்லிக்கொண்டாலும் இந்தப்பாடலின் காட்சியமைப்புகள் ஒருபக்கம் சார்ந்ததாகவே இருக்கும். அதாவது இலங்கை ராணுவம் பொது மக்களுக்கு உதவுவது போல் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.!! இவற்றை இப்போது பார்க்கும்போது சிலருக்கு கோபம் வரவும் கூடும்!
அப்போது இளம்பாடகியாக இருந்த பிரபல சகோதர மொழி பாடகி நிரோஷா விராஜினி அவரது கொஞ்சும் தமிழால் பாடியிருப்பார். அதனால் இதன் அநேக பாடல் வரிகள் சரியாக புரியாது.. ஆனாலும் சிறந்த குரல்வளம் கொண்ட பாடகி அவர். குத்துமதிப்பாத்தான் வரிகளை புரிஞ்சக்கனும்! அழகான கவிதையாக பாடலை எழுதியவர் எம். எச். எம் ஷம்ஸ்.. இசையமைத்தவர் பிரபல இலங்கை இசையமைப்பாளர் பிரேமசிறி ஹேமதாஸ!

அதன் முழு பாடல் வரிகள் இதோ..


வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே


ஓடையில் இப்போ நீர் வழிகின்ற
ஓசைகள் கேட்பதில்லை
வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்
பாதையில் வீசவில்லை


கோடைக் காட்சிகளால்
கொதிக்கும் உள்ளமெலாம்
கோரம் மாறவில்லை
கொடுமை தீரவில்லை.


மாலையில் தேனாய் காதினில் விழும்
பாடல்கள் கேட்பதில்லை
ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று
ஒன்றையும் காணவில்லை.


மேகம் இயந்திரமாய்
மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை தீரவில்லை

சற்றென்று விழித்துக்கொள்ளுங்கள்..!

உங்கள் சாலையோர
பூக்கா மரங்களில் எல்லாம்
பூக்கள் பார்த்ததுண்டா?
இலைகளே அசையாத நேரத்தில்
தென்றல் காற்று
உங்களை தீண்டியதுண்டா?
சூரியன் நச்சரிக்கும்
நடுப்பகல் வேளையொன்றில்
பனித்துளிகளில் கால் பதிந்ததுண்டா?
மேகங்கள் தொலைந்த கோடையில்
மழைச்சாரலில்
மனசு முழுக்க நனைந்ததுண்டா?
மழலைகள் இல்லா தேசத்திலும்
கொஞ்சும்
மழலைச்சிரிப்பில் மயங்கியதுண்டா?
கொலுசுகள் வளையல்கள்
இளையராஜா
இசைபாடி கேட்டதுண்டா?
சற்றென்று
விழித்துக்கொள்ளுங்கள்
இவ்வழியால்தான்
வந்துகொண்டிருக்கிறாள்!!!
!
!
!
!
!
!
!
!
!
!
!மனதை தொட்டுச்சென்றவர்கள்-1 N!xau (புஷ்மேன்)என் மனதை கவர்ந்தவர்கள், என் ரசனைக்கு விருந்தளித்தவர்கள் சில நிமிடங்களாவது என் மனதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர்கள் என எனக்கு தெரிந்த பிரபலங்கள், சக மனிதர்கள், நம் வரலாற்றில் இடம்பிடித்தவர்கள், இடம்பிடிக்க முயற்சித்து தோற்றுப்போனோர்.. ஏன் நம் சமூகத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருப்போர் என பலரைப்பற்றியும் தொடராக எழுத முயற்சி செய்யப்போகிறேன்! (கவனிக்க-முயற்சி மட்டும்தான்) முன்பு கிரிக்கெட் தொடர் பதிவொன்று எழுத முயற்சித்து அறிமுகப்பதிவோடு விட்டுவிட்டேன்.. இதில் சகல துறையினரும் உள்ளடங்குவார்கள்.. கலை விளையாட்டு அரசியல் உட்பட! நம்ம பதிவர்களில் பிடித்தவர்கள் சிலரும் இதில் இடம்பெறலாம் (உங்க பேரும் இடம்பெறனும்னா என்ன ரகசியமா தொடர்பு கொள்ளுங்க ஹி..ஹி)

இந்த தொடரின் இன்றைய முதல் அறிமுக பிரபலமாக ஒரு வித்தியாச மனிதரை தேர்ந்தெடுத்தேன்.. அவர்தான் புஷ்மேன் (எ)N!xau.. அண்மையில்  The Gods Must be Crazy..  திரைப்பட தொடர் பார்த்த போது பார்த்தவுடன் பிடித்துக்கொண்ட மனதில் பதிந்துவிட்ட மனிதர் இவர்.. கடந்த பதிவின் போதும் இவரைப்பற்றி சிலாகித்திருந்தேன்..

இவரின் நடிப்பு என்பதைவிட இவரிடமுள்ள சூதுவாதற்ற அப்பாவித்தனம், இயல்பான நகைச்சுவையை லாவகமாக வரவைக்கும் முகபாவங்கள்,உடல் அசைவுகள் போன்றவையே இவரை எனக்குப்பிடிக்க காரணம்.. Gods must be crazy திரைப்பட தொடரின் மாபெரும் வெற்றிக்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருக்கலாம்.. இவர் நடித்தது இந்த தொடரில் மட்டும்தான் என நினைக்கிறேன்.
இவர் பிறந்தது நமீபியாவின் பழங்குடி விவசாய கிராமத்தில்..அடிப்படையில் இவர் ஒரு விவசாயியும் கூட! பிறந்த தேதிகூட சரியாக தெரியாத கல்வி வசதிகளில்லாத வெளியுலக தொடர்புகளற்ற சமூகத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்.. மேற்சொன்ன படத்தின் இயக்குனர்தான் இவரை கண்டுபிடித்து அவரின் திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.. அதன் பிறகே அவரின் திறமையும் பிரபலமும் வெளியுலகிற்கு தெரியவந்திருக்கிறது.. அதுவரை வெளியுலகத்தைப்பற்றி பெரிதும் தெரியாதவராகவே இருந்திருக்கிறார்.. இதற்கு உதாரணம் 1980 யில் வெளியான Gods must be crazy முதல் படத்துக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் சிலநூறு டாலர்கள் மாத்திரமே.! காரணம் காசின் தேவையை உணராத பழங்குடியின சமூகம் அது என்பதால்.. ஆனால் அந்தப்படத்தின் வருமானம் பல மில்லியன் டாலர்கள்.. ஆனால் அந்த திரைப்பட தொடரின் இரண்டாம் பாகத்திற்கு பல்லாயிராம் டாலர்களில் சம்பளம் கொடுக்கப்பட்டதாம் அப்படத்தில் அவரின் முக்கியத்துவம் அறிந்து.

இன்றைய நவீன உலகின் போட்டி,பொறாமை, வஞ்சகம், யுத்தம், பழிவாங்கல் போன்றவற்றை நோக்கும்போது சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு, மனிதன் காசுபனத்தின் தேவையில்லா ஆதிவாசிகளாகவே வாழ்ந்திருந்தால் நல்லாயிருந்திருக்குமோ என்ற எண்ணம் எழுவதுமுண்டு.. எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் காசாகத்தானே இருக்க முடியும்! யாரு இந்த  பாழாப்போன காசை கண்டுபுடித்தான்?

Gods must be crazy திரைப்படத்தொடரில் இவரை பிரதான பாத்திரமாக வைத்தே கதை அமைக்கப்பட்டிருக்கும்... திரைப்படம் முழுக்க மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்..பார்ப்பவர்கள் மனதை மிக இலகுவில் கவர்ந்து விடக்கூடிய சுவாரஷ்யமான மனிதர்.. 2003 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு இவர் விடைபெற்றிருக்கிறார்.. இன்னுமொரு பதிவில் வேறு ஒருவரைப்பற்றியோ ஓரே பதிவில் இருவரைப்பற்றியோ பார்க்கலாம்!

The Gods Must Be Crazy சிரிப்பினால் ஒரு உலகசினிமா!!

நம்முடைய சில நகைச்சுவை தமிழ் சினிமாக்களை பார்த்து நாம் வயிறு வலிக்க சிரித்திருப்போம்.. தமிழ்சினிமாவில் முழுநீள நகைச்சுப்படங்கள் மிக அரிதாகவே வந்தாலும் நிறைய படங்களில் நகைச்சுவைக்கென்று தனி நடிகர்களை வைத்து கதைக்கு சம்பந்தமில்லையென்றாலும் நகைச்சுவை காட்சிகளை புகுத்தியிருப்பார்கள்.. இதனை நாம் அதிகம் ரசித்திருப்போம்,சிரித்திருப்போம்!!

உலக சினிமாக்களை பொருத்தவரை நகைச்சுவைக்கென்றே முழுநீள திரைப்படங்கள் நிறைய வருவதுண்டு. ஆனால் எல்லா திரைப்படமும் எல்லா நகைச்சுவையும் நம்மை கவருவதில்லை சிரிக்க வைப்பதில்லை ஆனால் ஒரு சில திரைப்படங்கள் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடும் அப்படி என்னை சிரிக்க வைத்த படம்தான் இந்த The Gods Must Be Crazy
இது தென்னாபிரிக்காவில் 1980 யில் தயாரிக்கப்பட்டது..( இதன் வெற்றியைத்தொடர்ந்து பாகம் 2,3 பின்னர் வெளிவந்தது பொட்ஸ்வானா கலஹாரி பாலைவன காட்டுப்பிரதேசத்திலே படமாக்கப்பட்டுள்ளது.

இயக்கியவர் Jamie Uys இதில் பிரதான பாத்திரமாக நடித்தவர் பழங்குடியினத்தைச்சேர்ந்த N!xau, இவரை இதன் இயக்குனர் நமிபிய பழங்குடியின விவசாய மக்களிடமிருந்துதான் கண்டுபிடித்தாராம்.. (படத்தில் இவரை Bushman என அழைக்கிறார்கள்) பிறந்த தேதிகூட இவருக்கு தெரியாதாம்.. இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் வெறும் 300 டாலர்கள்தானாம் ஆனால் இதனைத்தொடர்ந்து 1989 யில் வெளிவந்த இதன் இரண்டாம் பாகத்திற்கு அவர் வாங்கியது 60,000 டாலர்கள்.. 2003 யில் இவர் இறந்துவிட்டார்.. இறக்கும் வரையிலும் பழங்குடியினத்தவராகவே அந்த சமூகத்துடன் நமீபியா விவசாய கிராமம் ஒன்றிலேயே இருந்தார் என்பது விஷேட தகவல்..

இந்தப்படத்தில் தனது அருமையான நடிப்பின் மூலமும் நகைச்சுவையின் மூலமும் படம் முழுக்க அதகளப்படுத்தியிருப்பார்.. பார்த்தவுடனே  மனதில் பதிவும் பாத்திரப்படைப்பு!! வண்டியை ரிவர்சில் ஓட்டும் காட்சி விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய காட்சி.. இதேகாட்சியை பாகம் மூன்றிலும் வைத்திருப்பார்கள்.. ஆட்டை கொன்று ஆட்டு சொந்தகாரனையே சாப்பிட அழைக்கும் காட்சி.. இவர்களின் வெள்ளந்தி தனத்தையும் கபடமில்லா மனதையும் அழகாக விளக்கும் காட்சி.. ஆட்டை சுட்டதற்காய் சிறையில் அடைக்கப்படும் போது கொஞ்சம் சோகத்தையும் வரவைக்கிறார்.. இவரைப்பற்றி தனிபதிவே போடலாம்,,
                                                         இவருதான் ஹீரோ புஷ்மேன்

இந்த திரைப்படத்தின் கதையையோ நகைச்சுவையோ எழுத்தில் கொண்டு வருவது எப்படி என்பது எனக்குத்தெரியவில்லை.. முடிந்தவரை சொல்கிறேன்! இதில் மூன்று கதைகள் பயணித்து ஒன்றாக சந்திக்கின்றன.. கதை ஒன்று- காமெடியான விஞ்ஞானியுடன் (அவருடைய கோளாருபிடித்த ஜீப் வண்டியில்) ஸ்கூல் டீச்சர் ஒருவரின் கிராமம் ஒன்றிற்கான பயணமும் அதன் சுவாரசியங்களும், கதை இரண்டு-உள்நாட்டு கிளர்ச்சி குழு ஒன்று ஜனாதிபதியை கொல்ல முயற்சி செய்து அது தோல்வியடைய, அரசாங்க படைகள் அவர்களை துரத்துகிறார்கள் அதன் போதான பயணமும் சுவாரசியங்களும்.

கதை மூன்று- bushman எனப்படும் பழங்குடி மனிதன்(படத்தின் நாயகன்) ஒரு வெறும் கொகா கோலா கண்ணாடி பாட்டிலுடன்(Bottle இலங்கையர்களுக்கு- போத்தல், இந்தியர்களுக்கு- பாட்டில் :) அதை கடவுளிடம் திருப்பி ஒப்படைப்பதற்காகவேண்டி, உலகின் முடிவில் கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கையில் உலகின் முடிவிற்கு கால்நடையாகவே பயணிக்கிறார்..

ஏன்,எதற்காக அந்த கொகா கோலா பாட்டிலை கடவுளிடம் ஒப்படைக்க பயணிக்கிறார்?
                                                புதிய ஐயிட்டமா இருக்கே..

பழங்குடியினர் வாழ்ந்த பகுதியினூடாகப்பறந்த ஒரு சிறியரக விமானத்திலிருந்து ஒருவர் கோக்கை அருந்திவிட்டு அந்த பாட்டிலை கீழே போட்டுச்செல்கிறார்.. அந்த பாட்டில் புஷ்மேன் கைக்கு கிடைக்கு கிடைக்கிறது அது மேலேயிருந்து விழுந்ததையும் அவதானித்துவிடுகிறார்! ஆனால், அந்த விமானத்தை அவர் கானவில்லை.. இதற்கு முன்பு அவ்வாறானதொரு வடிவமுடைய  உலோகப்பொருளை அவர்கள் பார்த்ததேயில்லை.. அதை வியப்புடன் எல்லோரும் தொட்டுப்பார்க்கிறார்கள் அவர்களின் எல்லா வேலைகளுக்கும் அந்த பாட்டிலை உபயோகப்படுத்துகிறார்கள்.. அதனால் அவர்களின் அத்தியவசிய பொருளாக அது மாறிவிடுகிறது இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது..
                               இந்த என்ன செய்யலாம் எவ்வாறு கடவுளிடம் ஒப்படைக்கலாம்?

இதைப்பொருத்துக்கொள்ள முடியாத புஷ்மேன் அது கடவுளிடமிருந்து வந்த பொருள் எனவும் அதனால் அவர் குடும்பத்தில் பிரச்சினை எனவும் அதை திருப்பிக்கொடுக்க நினைத்து "இதோ உன் பொருள் இதை நீயே வைத்துக்கொள்" என அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே தூக்கி எறிகிறார். அதாவது,வானத்தை நோக்கி ஆனால் அது மீண்டும் கீழேயே வந்து விழுகிறது.. மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார் அது அங்கிருப்பவர்களின் தலையில் எல்லாம் விழுகிறது.. "ஏன் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய்" என கடவுளை திட்டிவிட்டு அன்றிறவு எல்லோரும் சோகத்துடன் உட்கார்ந்து இதற்கு என்ன செய்யலாம் என தீர்மானிக்கின்றனர்.. உலகத்தின் முடிவில்தான் கடவுள் இருப்பார் என எண்ணி இதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறேன் எனச்சொல்லி பயணத்தை தொடங்குகிறார் புஷ்மேன்.. பயணம் தொடங்குமுன் அங்கிருந்த பெரியவர் ஒருவர் உலகத்தின் முடிவை அடைய குறைந்தது 20 நாட்களாவது நடக்கவேண்டும், அது 40 நாட்களாகவும் ஆகலாம் என சொல்லி வழியனுப்புகிறார்..

நான் மேலே விவரித்த அந்த காட்சியை இந்த வீடியோவை பார்த்து புரிந்துகொள்ளலாம்..இவ்வாறு நடைபயணமாகும் புஷ்மேனின் ஆசை நிறைவேறியதா? அந்த பயணத்தின் போது அவரின் கஷடங்கள்,அனுபவங்கள், சுவாரசியங்கள் மற்ற இரு குழுக்களின் பயணம் என்னவானது இந்த மூன்று பயணமும் எவ்வாறு ஒன்றாக இனைகிறது என்பதை மிக மிக சுவாரசியமாக,நகைச்சுவையாக சொல்லப்பட்டிருப்பதே இப்படத்தின் வெற்றி..

நான் இதன் பாகம் மூன்றையும் பார்த்துவிட்டேன்.. முதலாவது சூப்பர் டூப்பர், இரண்டாவது சூப்பர் பார்க்கலாம், மூன்றாவது பரவாயில்லை பார்க்கலாம் ஆனால் என்னை பெரிதாக கவரவில்லை..

முதல் இரண்டும் தென்னாபிரிக்கா தயாரிப்பு மூன்றாவது ஹாங்காங்க்/சீனத்தயாரிப்பு.. என நினைக்கிறேன்.
                                          இரண்டாம் பாகத்தில் புஷ்மேனின் பிள்ளைகள்.

முதலாம் பாகத்தின் அதே கதையையே கொஞ்சம் மாற்றி இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறார்கள்.. 1யில் கடவுளிடம் பாட்டில் ஒப்படைக்க பயணமாகும் புஷ்மேன் 2யில் தொலைந்துபோன தன் பிள்ளைகளை தேடிச்செல்லும் புஷ்மேன், 1யில் பழைய ஜீப்பில் பயணிக்கும் ஆணும் பெண்ணும் 2 யில் சிறியரக விமானத்தில் பயணிக்கும் ஆணும் பெண்ணும், 1யில் கிளர்ச்சிக்குழுவின் பயணம் 2யில் பெரிய ட்ரக் வண்டியொன்றில் கடத்தல்காரர்களின் பயணம்..  எல்லா பயணமும் எவ்வாறு ஒன்றினைகிறது என்பதுதான் கதை!!!

நான் பார்க்கும் எந்த படத்தையும் பாத்தே தீரவேண்டும் என நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.. ஆனால் இந்தபடம் தவறவிடக்கூடாத உலக சினிமா!!!
மேலதிக தகவல் ஒன்று இதுவரை நாளும் நீரில்லாமல் பலநாட்கள் உயிர்வாழும் உயிரினம் ஒட்டகம் மாட்டும்தான் என நினைத்திருந்தேன்.. ஆனால் பாலைன பிரதேசங்களில் வசிக்கும் இந்த பழங்குடியினர்த்தவர்களும் கோடைகாலங்களில் பலநாள் பல மாதம் நீரில்லாமல் வாழத்தெரிந்தவர்களாம்..

ALARM -சும்மா அதிருதில்ல-அனிமேஷன் குறும்படம்..

கடிகார முற்களோடு போட்டிபோட வேண்டிய இயந்திர வாழ்க்கையாகிப்போன இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வேலையையும் அந்தந்த நேரத்தில் செய்வதுதான் வெற்றிக்கான வழியும் கூட.. இதையே நேர முகாமைத்துவம் என்பார்கள்.. ஏனைய காரியங்கள் சரியாக நடப்பதற்கு இந்த நேர முகாமைதான் முதற்படி! இது பிழைத்துவிட்டால் சங்கிலித்தொடராக மற்ற காரியங்களும் தோல்வியிலேயே முடிவடையும்..

ஒவ்வொரு வேலையே தொடங்குமுன் அதற்கான நேரத்தை வகுத்துக்கொள்வதன் மூலம் அதற்கான இலக்கை சீக்கிரம் அடைய வழி வகை செய்யும்..அது நடக்கிற நேரத்தில் நடக்கட்டும் என விட்டிருந்தால் நமக்கான வெற்றியும் அது வருகிற நேரத்தில்தான் வரும் தேவையான நேரத்தில் வராது..

எந்தவித வேலைகளையும் சரியான நேரத்திற்கு செயவது, சமூகமளிப்பது அல்லது உரிய நேரத்திற்கு கொஞ்சம் முன்னதாகவே தயாராகிக்கொள்வதே தனி மனித ஒழுக்கமாகவும் கருதப்படுகிறது.. இன்றைய நம் சமூகத்தில் வெற்றியடைந்தவர்கள் அல்லது சமூகத்தில் அந்தஸ்துடையவர்கள் என பலரை எடுத்துநோக்கினால் அவர்களுடைய வெற்றிக்கு கடுமையான உழைப்போடு சேர்ந்து நேரம் தவறாமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.. சிம்பிளாக சொல்லப்போனால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இவரின் நேரம் தவறாமை பற்றி பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம்.. இன்று அவர் இருக்கும் உயரமும் நமக்கு தெரியாததல்ல!!

நேர முகாமைத்துவம் தொடங்குவது அதிகாலை கண்விழித்து எழுவதிலிருந்துதான்.. இதற்கு நமக்கு பெரிதும் பயன்படுவது இந்த அலாரம், இன்று பலர் அலாரத்திற்கு பயன்படுத்துவது நம் கைப்பேசிகளைத்தான்.. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இந்த அலாரத்தின் ஒலி பலருக்கு எரிச்சல் தருவதுதான்.. பலர் அலாரத்தை நிறுத்திவிட்டோ அல்லது ரிப்பீட் அலாரம் வைத்துவிட்டோ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி எழலாம என தூங்குபவர்களும் அதிகம்தான்..நானெல்லாம் அந்த வகையறாதான்..இந்த அனிமேஷன் குறும்படத்தை பாருங்கள்.. நம்மைப்போன்ற சோம்பேரி ஒருவரின் காலைப்பொழுதில் இந்த அலாரம் எவ்வளவு டார்ச்சர் கொடுக்கிறதென்று பாருங்கள்! எத்தனை அலாரம் அடிக்கிறதென்றும் எண்ணிப்பாருங்கள்.. மிக அழகான அனிமேஷன் படைப்பு!! நீங்கள் முன்பு பார்த்திருக்கவும் கூடும்!

தேநீர் வேளை கிறுக்கல்கள்!!!


நான் பூக்களின் ரசிகன்
என் வீட்டு ஜன்னல் சொல்கிறது
அதற்கு தெரியாது
பூக்கள் பறிப்பவள் ரசிகனானது!!

தெருவோர கடைகளிலெல்லாம்
உன் பெயர் சொல்கிறார்
இளையராஜா
எனக்குப்பிடித்த பாடல்களாக!!

மழைத்துளிகளுக்கு
மரண தண்டனை வழங்க வேண்டும்
உன் அனுமதியில்லாமல்
உன்னைத்தொட்டு விளையாடுகிறது!!

சற்றென்று பொறுக்கிச்செல்லுங்கள்
நீங்கள் தொலைத்த புன்னகைகளை
இங்கே இலவசமாய்
வீசிச்செல்கிறாள் இவள்!!

உனக்கான பேரூந்தில் நீயும்
எனக்கான பேரூந்தில் நானும்
ஏறிச்சென்று விட்டபின்பும்
காத்திருக்கிறது நம் பார்வைகள் மட்டும்
இன்னுமொரு பேரூந்துக்காய்!!நடுப்பகல் வேளை
நடைபயணங்களையும்
பரவசமாக்கி விடுகிறது
உன் ஒற்றைப்பார்வை!
வெயில் நேர
சாலையோரக்கடை
துரித குளிர்பானங்கள் போல!

அதிகாலை சூரியன்
பௌர்னமி நிலவு
கொடுக்காத வெளிச்சங்களை
அள்ளி வீசுகிறது
உன் ஒற்றை
வெட்க புன்னகை!

சினுங்கிக்கொண்டே
அழைப்பைச் சொல்லும்
அலைபேசி
சிரித்துக்கொண்டே
அழைப்பைச் சொல்கிறது
உன் ஒற்றை வார்த்தை
கேட்டதும்!

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics