மனதை தொட்டுச்சென்றவர்கள்-1 N!xau (புஷ்மேன்)



என் மனதை கவர்ந்தவர்கள், என் ரசனைக்கு விருந்தளித்தவர்கள் சில நிமிடங்களாவது என் மனதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர்கள் என எனக்கு தெரிந்த பிரபலங்கள், சக மனிதர்கள், நம் வரலாற்றில் இடம்பிடித்தவர்கள், இடம்பிடிக்க முயற்சித்து தோற்றுப்போனோர்.. ஏன் நம் சமூகத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருப்போர் என பலரைப்பற்றியும் தொடராக எழுத முயற்சி செய்யப்போகிறேன்! (கவனிக்க-முயற்சி மட்டும்தான்) முன்பு கிரிக்கெட் தொடர் பதிவொன்று எழுத முயற்சித்து அறிமுகப்பதிவோடு விட்டுவிட்டேன்.. இதில் சகல துறையினரும் உள்ளடங்குவார்கள்.. கலை விளையாட்டு அரசியல் உட்பட! நம்ம பதிவர்களில் பிடித்தவர்கள் சிலரும் இதில் இடம்பெறலாம் (உங்க பேரும் இடம்பெறனும்னா என்ன ரகசியமா தொடர்பு கொள்ளுங்க ஹி..ஹி)

இந்த தொடரின் இன்றைய முதல் அறிமுக பிரபலமாக ஒரு வித்தியாச மனிதரை தேர்ந்தெடுத்தேன்.. அவர்தான் புஷ்மேன் (எ)N!xau.. அண்மையில்  The Gods Must be Crazy..  திரைப்பட தொடர் பார்த்த போது பார்த்தவுடன் பிடித்துக்கொண்ட மனதில் பதிந்துவிட்ட மனிதர் இவர்.. கடந்த பதிவின் போதும் இவரைப்பற்றி சிலாகித்திருந்தேன்..

இவரின் நடிப்பு என்பதைவிட இவரிடமுள்ள சூதுவாதற்ற அப்பாவித்தனம், இயல்பான நகைச்சுவையை லாவகமாக வரவைக்கும் முகபாவங்கள்,உடல் அசைவுகள் போன்றவையே இவரை எனக்குப்பிடிக்க காரணம்.. Gods must be crazy திரைப்பட தொடரின் மாபெரும் வெற்றிக்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருக்கலாம்.. இவர் நடித்தது இந்த தொடரில் மட்டும்தான் என நினைக்கிறேன்.
இவர் பிறந்தது நமீபியாவின் பழங்குடி விவசாய கிராமத்தில்..அடிப்படையில் இவர் ஒரு விவசாயியும் கூட! பிறந்த தேதிகூட சரியாக தெரியாத கல்வி வசதிகளில்லாத வெளியுலக தொடர்புகளற்ற சமூகத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்.. மேற்சொன்ன படத்தின் இயக்குனர்தான் இவரை கண்டுபிடித்து அவரின் திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.. அதன் பிறகே அவரின் திறமையும் பிரபலமும் வெளியுலகிற்கு தெரியவந்திருக்கிறது.. அதுவரை வெளியுலகத்தைப்பற்றி பெரிதும் தெரியாதவராகவே இருந்திருக்கிறார்.. இதற்கு உதாரணம் 1980 யில் வெளியான Gods must be crazy முதல் படத்துக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் சிலநூறு டாலர்கள் மாத்திரமே.! காரணம் காசின் தேவையை உணராத பழங்குடியின சமூகம் அது என்பதால்.. ஆனால் அந்தப்படத்தின் வருமானம் பல மில்லியன் டாலர்கள்.. ஆனால் அந்த திரைப்பட தொடரின் இரண்டாம் பாகத்திற்கு பல்லாயிராம் டாலர்களில் சம்பளம் கொடுக்கப்பட்டதாம் அப்படத்தில் அவரின் முக்கியத்துவம் அறிந்து.

இன்றைய நவீன உலகின் போட்டி,பொறாமை, வஞ்சகம், யுத்தம், பழிவாங்கல் போன்றவற்றை நோக்கும்போது சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு, மனிதன் காசுபனத்தின் தேவையில்லா ஆதிவாசிகளாகவே வாழ்ந்திருந்தால் நல்லாயிருந்திருக்குமோ என்ற எண்ணம் எழுவதுமுண்டு.. எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் காசாகத்தானே இருக்க முடியும்! யாரு இந்த  பாழாப்போன காசை கண்டுபுடித்தான்?

Gods must be crazy திரைப்படத்தொடரில் இவரை பிரதான பாத்திரமாக வைத்தே கதை அமைக்கப்பட்டிருக்கும்... திரைப்படம் முழுக்க மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்..பார்ப்பவர்கள் மனதை மிக இலகுவில் கவர்ந்து விடக்கூடிய சுவாரஷ்யமான மனிதர்.. 2003 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு இவர் விடைபெற்றிருக்கிறார்.. இன்னுமொரு பதிவில் வேறு ஒருவரைப்பற்றியோ ஓரே பதிவில் இருவரைப்பற்றியோ பார்க்கலாம்!





5 comments:

ஆத்மா said...

சிறந்ததொரு நடிகரையும் படத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா...:)

ஒரு தலைப்பு சொல்கிறேன் விரைவில்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு.

ரசனைக்குரிய மனிதர்கள் அல்லது
வியக்க வைத்தவர்கள் மனிதர்கள் என்றும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

bandhu said...

மனதில் பதிந்தவர்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு !

இவன் தான் மனிதன் !?

Seeni said...

nalla thakaval!

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2