நவீன உலக வரைபடம்!!!

 உலக வரை படங்கள் காலத்துக்கு காலம் விதவிதமாக வரையப்பட்டு வந்திருக்கிறது.. அது அக்காலத்து அறிஞர்களின் அறிவு,தொழிநுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி உலகம் இப்படியான தோற்றத்தில்தான் இருக்கும் என முடிவு செய்ய்ப்பட்டு வரையப்பட்டது..  பலநூறு ஆண்டுகளுக்கு முன்னமே வரையப்பட்ட உலக வரைபடங்களும் இருக்கிறது.. நவீன தொழினுட்பங்கள் இல்லாத அந்தக்காலத்திலேயே ஓரளவு துள்ளியமாக உலகம் இப்படித்தான் இருக்கும் என வரையறுத்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமே!!

                                       1570 யில் வரையப்பட்ட உலக வரைபடம்
Historical map of the world by Ortelius1570 CE

மிகப்பழமையான உலக வரைபடங்கள் 
Tabula Rogeriana world map byMuhammad al-Idrisi in 1154. Note that north is to the bottom

World map according to Posidonius (150-130 B.C.), drawn in 1628 A.D.


                  200 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலக நாடுகள் இப்பிடித்தான் இருந்திருக்கும் என ஒரு அனுமானம்..
world map showing the continents as of 200 million years ago (Triassic period)


Clickable world map (with climate classification)

                            சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி உலக வரைபடம்
A simple political map of the World as of 2011

 இது மிக அண்மையில் செதுக்கப்பட்ட உலக வரைபடம்.. இதை செய்தவர் பெயர்தான் தெரியல்ல. ஒரு குழந்தையின் செயலாக கூட இருக்கலாம்!! இதுல எது ஆபிரிக்கா அது அமெரிக்கா என உங்களின் தெரிவுகளுக்கே விடப்படுகிறது..

சேர் ஐசக் நியுற்றன் இந்தப்பழத்தாலதான் பெரிய விஞ்ஞானி ஆனார் என இன்றைய வரலாறு பேசுகிறது.. இதே பழத்தால நான் பிரபல பதிவர் ஆனேன் என நாளைய வரலாறு பேசுமா..?

மனைவியின் ஞாபகார்த்தமாக மரங்களால் இதயம் செய்த விவசாயி Winston Howes.!

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே..
                                                                                                          (கவிஞர் வாலி)


தன் மனைவி மும்தாஜ மஹாலின் ஞாபகமாக இன்று வரை காதல் சின்னமாக பலரால் போற்றப்படும் தாஜ்மஹால் எனும் பிரம்மாண்டமான ஒரு மாளிகையை பளிங்கினாலே கட்டி முடித்தான் ஷாஜஹான் என்ற மன்னன்.. இது இந்தியாவின் ஆக்ரா பிரதேசத்தில் உள்ளது.. ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கானப்படுகிறது! இது 1600 களில் நடந்த சம்பவம்.. தற்பொழுது மிக அண்மையில் இறந்து போன தன் அன்பு மனைவியின் ஞாபகார்த்தமாக இங்கிலாந்து விவசாயி ஒருவரின் வித்தியாசமானதும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான முயற்சி இணையமெங்கும் கானக்கிடைக்கிறது!

இங்கிலாந்தின் South Gloucestershire பகுதியில் வசித்து வரும் விவசாயி Winston Howes. இவருக்கு வயது 70, இவர் 1962 யில் Janet என்ற பெண்னை தன் மனவாழ்க்கை துனைவியாக ஆக்கிக்கொண்டுள்ளார்.. தொடர்ந்து, அன்பாக அழகாக தம் வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கும் போது 1995 யில்  தீடிரெண்டு ஏற்பட்ட மாரடைப்பினால் Janet தன் 33 வருடகால ம்னவாழ்க்கையை நிறைவு செய்துகொண்டு Winston Howes யிடமிருந்தும் இவ்வுலகிலிருந்தும் விடைபெற்றிருக்கிறார்..

33 வருடகாலம் ஒன்றாக தன்னுடன் வாழ்ந்த அன்பு மனைவியின் பிரிவு தாங்காமால் அவரின் ஞாபகார்த்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்திருக்கிறது. இதன் விளையாகவே தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், தன் மனைவி சிறுவயதில் வாழ்ந்த வீட்டுடன் சேர்த்து(படத்தில் கானலாம்) இதயம் வடிவிலான இடத்தை வெற்றிடமாக வைத்து சுற்றி வளைத்து oak மரங்கள் நட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் நட்ட மரங்கள் கிட்டத்தட்ட 6000.. ஆச்சரியமல்லவா!!

இதை இவர் மனைவி இறந்தது முதல்17 வருடகாலம் மரங்களை வளர்த்தும் பராமரித்தும் வந்திருக்கிறார்.. ஆனால் இதைப்பற்றி வெளியுலகத்திற்கு அவர் தெரியப்படுத்தவில்லை! வெளியுலகத்தினரும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.. சில தினங்களுக்கு முன் அவ்வழியால் பரசூட்டில் சென்ற ஒருவரின் கண்ணில் இந்த இதய வடிவிலான இயற்கை காட்சி கண்ணில் படவே மிக ஆச்சர்ய்மடைந்த அவர் அவற்றை புகைப்படம் எடுத்து வெளியுலகத்தினருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.. அதன் பிறகே Winston Howes பற்றிய செய்திகள் வெளிவந்து சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது,,
இது பற்றி அவர் கூறியிருப்பது..

"Once it was completed we put seat in the field, overlooking the hill near where she used to live. I sometimes go down there, just to sit and think about things. It is a lovely and lasting tribute to her which will be here for years."

அதன் புகைப்படங்கள்..

இனிவரும் காலங்களில் இதுவுமொரு இயற்கை காதல் சின்னமாக பேசப்படலாம்..  
இதைப்பார்த்ததும் உடனே நம் முண்டாசு கவிஞரும் ஞாபகத்திற்கு வந்தார்..

தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ்
சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம்
மிக உழன்று பிறர் வாட பல செயல்கள்
செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இறையென பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!

வாங்க யானைக்கு பல்லு விளக்கலாம்..!!

எப்பவும் பல்லு விளக்காம சாப்பிட்டே உனக்கு பழகிப்போச்சு.. இன்னைக்க்கி பல்லு விளக்கமாக விடமாட்டேன் வாயைத்தொற..

பாசக்கார பயபுள்ள.. இவன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு..

ஏலே ஸ்பைடர் மேன் வண்டிய நேரா பஞ்சாயத்துக்கு ஓட்டுலே..


தம்பி எட்ட்பிடிடா இருக்கே,,

ரொம்ப நாளா நீச்சல் குளத்துல குளிக்கனும்னு ஆசை.. அப்பாடா இன்னைக்கி குளிச்சாச்சு..

ஏய் நான் போகனும்.. என்ன விடுய்யா என் காதலி அங்கே கோபத்தோட இருக்காங்க..

அப்பப்பா... அடிக்கிற வெயிலுக்கு இப்பிடி குளிக்கிறதுதான் சுகமாயிருக்கு,,

நாங்களும் சேர்ந்து டான்ஸ் ஆடுவம்ல..


நான் ஈ அட.. அடடடடா.. 200 வது பதிவு!


இந்தப்படத்தைப்பற்றி பெரும்பாலான பதிவர்கள் எழுதி புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.. நான் என்ன அதற்கு மேலதிகமாக சொல்லக்கிடக்கு.. ஆனாலும் எனது பங்கிற்கு சில என மனதிலிருந்து, ஒரு சாதாரன வலைப்பதிவு வைத்திருப்பவன் மற்றும் சினிமா ரசிகன் என்றவரையில்!இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இவ்வகை நிறைய fantasy & Graphics படங்களை பார்த்த நமக்கு தமிழில் இவ்வகை படம் ஒன்று வந்திருப்பது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சிதான்.. எல்லோருக்கும் போலவே இப்படம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது.. பொதுவாக fantasy &Graphics ஆங்கில படங்களை நான் ரசிப்பது குறைவு ஆனாலும் இந்தப்படம் என்னை ரசிக்க வைத்தது..

தன்னை கொன்றவனை பழிவாங்குவதற்காகவும், தன் காதலியை அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும் நாயகன் மறுபிறவி எடுப்பதுதான் கதை என்றாலும்.. (இது அப்பா மகளுக்கு சொல்லும் தூங்கவைக்கும் கதையாகவே திரையில் நகர்கிறது.. அதாவது இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு அவரது அப்பா ராஜேந்திர பிரசாத் சின்ன வயசில் சொன்ன கதையாம்) அந்த மறுபிறவி மனிதனாகவோ வேறு உயிரினமாகவோ இல்லாமல் மிகச்சாதாரனமான சில நாட்களே உயிர் வாழும் "ஈ" யை தெரிவு செய்திருப்பதற்காகவே இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை எவ்வளவும் பாராட்டலாம்.. சிறப்பான இயக்க்ம மற்றும் திரைக்கதை.. படத்தில் எந்த இடத்திலும் வேறு எங்கும் கவனம் திரும்பாமல் கண்னிமைக்காமல் உற்றுநோக்க வைத்திருப்பதே அவரின் வெற்றி!!  வில்லனுக்கெதிராய் ஒரு மாஸ் ஹீரோ செய்யும் அத்தனை புத்திசாலித்தனமான ஹீரோயிசங்களையும் ஹீரோவாக மாறிய இந்த ஈ செய்கிறது.. பேசுவது மட்டும் இல்லை! நடனம் கூட பிரபுதேவா மாதிரி ஆடுகிறது.. இவரின் மகதீரா திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் கலை அரங்க அமைப்பு என்பவை இவை உண்மையா பொய்யா என்ற பிரமிப்பை என்னுள் ஏற்படுத்தியது..

ராஜமௌலியின் ஒன்பதாவது தொடர்ச்சியான ஹிட்டாம் இந்த நான் ஈ.. இவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்றாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியிட்டிருக்கிறார் இந்தப்படத்தை!. இந்த வெற்றிகரமான இயக்குனரின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் கஷ்டங்கள் நிறைந்ததாம் இந்த வெற்றிகளுக்கு பின்னால் கடுமையான உழைப்பும் முயற்சியும் நிறையவே இருந்திருக்கிறது.. இவரின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இந்த நான் ஈ வரை சொல்லும் பைத்தியக்காரன் (எ)கே.என்.சிவராமனின் கட்டுரை யுவகிருஷ்னா தளத்தில்

நாயகனாக நானி திரைப்படத்திலும் இதே பெயர்தான் இவரின் பெயருக்கும், திரைப்படத்தின் பெயருக்கும், "ஈ" க்கும் எவ்வளவு பொருத்தம் அட்டா!! இவரும் சமந்தாவும் வரும் காதல் காட்சிகள், வசணங்கள், நடிப்பு எல்லாமே அழகானவை மீண்டும் மீண்டும் பார்க்ககூடியவை.. இரண்டு வருடமாக ஒரு தலையாக காதலிப்பதும் அவளின் பின்னால் அலைவதும்.. தன்னை காதலிப்பாள் என நம்பியிருப்பதும் அவளின் எல்லா நடவடிக்கைகளையும் தனக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்வதும்.. இறக்கும் தருணத்தில் அவளும் தன்னைக்காதலிக்கிறாள் என அறிந்துகொள்வதும் அதன் போதான உணர்வுகள் என கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நின்று விடுகிறார் நானி. பிற்பாதியில் அந்த ஈ யைக்கானும் போதெல்லாம் அவரின் நினைவு வருவது அந்த பாத்திர உருவாக்கத்தின் வெற்றியே..

"பென்சிலை சீவும் பெண் சிலை" சமந்த்தா அழகாகவே இருக்கிறார்.. இவர் நடித்து பார்க்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.. சில நேரங்களில் பேரழகியாகவும் சில நேரங்களில் சாதா அழகியாகவும் தெரிவதே இவரின் இயல்பு.. நடிப்பிலும் குறை சொல்ல முடியாது நன்றாகவே நடித்திருக்கிறார்.. நானியை மனதோடு காதலித்தாலும் வெளியில் அலையவிடும் காட்சிகளிலும் ஈ யோடு பேசும் காட்சிகளிலும் அழகு.. அந்த பிளாங்க மெசேஜ் காட்சியை யோசித்த இயக்குனருக்கோ அல்லது உதவி இயக்குனருக்கோ ஒரு பூங்கொத்து..

இந்தப்படத்தில் வரும் இன்னுமொரு நாயகன் சுதீப்.. இவர் ஒரு கன்னட நடிகர் CCL மெட்சிலும் பார்த்திருப்பீர்கள்! வில்லனாய் அறிமுகமானாலும் ஈ யை தவிர்த்து படம் முழுவதும் வரும் ஹீரோ இவர்தான்.. அட்டகாசமான நடிப்பு ஈ யின் தொல்லை தாங்க முடியாமல் தவிர்க்கும் இடங்களிலும், ஈ யை கொல்ல வித விதமான ஐடியா போடும் இடங்களிலும் கலக்கல்!! மீட்டிங் அறைக்குள் ஹெல்மட்டுடன் நுழைவதும் அதன்பிறகு நடக்கும் காட்சிகளில் மற்றும் இன்னும் நிறைய காட்சிகளில் அவரின் வில்லத்தனத்துடன் கூடிய நகைச்சுவையை ரசிக்கலாம்..

வசனங்கள் கிரேசி மோகன் என டைட்டில் போர்ட் காட்டுகிறது.. இவரின் நகைச்சுவை லொள்ளு வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை இந்தப்படத்திலும் ஓர் இடத்தில் சுதீப் அவரின் உதவியாட்களிடம் "ஒரு மிருகம் மனிதனை நினைவில் வைத்து பழிவாங்குமா?" எனக்கேட்கிறார்.. அதற்கு உதவியாள் ஆமாம், எங்க தாத்தாவையும் நாகப்பாம்புதான் கொன்றதாக சொல்கிறார்.. அதற்கு சுதீப் இல்ல, சின்னதா எதுவும்.. அதற்கு உதவியாள் ஆமாம், சின்னப்பாம்பும் கொல்லும்.. பிறகு சுதீப் இல்லையா.. வேற ஏதாவது, அதற்கு உதவியாள் ஆமாம், வேற பாம்பும் கொல்லும்.. எனச்சொல்கிறார் இப்படியான வசனங்கள் நிச்சயமாக கிரேசி மோகனுடையதான் இருக்கும்..

ஒளிப்பதிவு ராஜமௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளார் செந்தில்குமார்.. மிக அழகாக படம்பிடித்திருக்கிறார்.. இசை மரகதமனி இரண்டு பாடல்கள்தான்.. பின்னனி இசையிலும் குட்டி குட்டியாய் பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார்.. அதிக இரைச்சல் இல்லாத தேவையான அளவாக பின்னனி இசையாக புகுத்தியிருக்கிறார்.. ஈ யை கிராபிக்சாக  பறக்க,நடிக்க, காதலிக்க,பழிவாங்க வைக்க வேலை செய்த அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.. நான் ஈ மொத்ததில் நல்லா கதை சொன்னிங்கப்பா!!!

நேரத்தை விழுங்கும் இலங்கை சாலைகள்..!!

பயணங்களின் போது நம்மை கொண்டு சேர்க்க வாகனங்கள் எவ்வளவு முக்கியமோ.. அதேபோல் சாலைகளும் ரொம்ப முக்கியம்! ஒரு நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகள்தான் அந்நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதார எழுச்சியையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.(நாங்களும் பொருளியல் படிச்சிருக்கம்ல) அந்த வகையில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது..

இன்றைய இயந்திர உலகில் நேரம்/காலம் என்பது ஒரு முக்கியமான வஸ்துவாகும்.வீட்டிலே வேலைவெட்டி இல்லாம சும்மா இருக்கிறவங்கூட ஒரு வேலையை அவசரமாக முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கே விரும்புவான..(வீட்டிற்கு வந்து டீவி சீரியல் பார்க்கனும்ல)  இலங்கையில் இப்பொழுது நிறைய சாலைகள் செப்பனிடப்பட்டும்,புதிய சாலைகள் உருவாக்கப்பட்டும் வந்தாலும் அவைகள் இன்றைய தேவைகளையும் வாகன நெரிசலையும் சமாளிப்பதற்கு போதுமானதாக தெரியவில்லை.. ஒரு சாலை செப்பனிட்டு முடிக்கும் போது இன்னுமொரு சாலை பழுதடைந்து விடுகிறது... இலங்கையில் சில முக்கிய நகர்ப்புறங்கள் தவிர்த்து ஏனைய நகரங்கள்/கிராமங்களின் சாலைகள் நிறையவே குன்றும் குழியுமாத்தான் இருக்கிறது..

ஒரு பயணம் வெளிக்கிளம்பினால்,பாதையில்தான் அதிக நேரத்தை செலவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் இன்றைக்கு அதிக மக்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை! எங்கள் ஊர் உட்பட! ஒரு அவசரத் தேவைக்காக கொழும்புக்கு சென்று வருவோம் என்றால்,அந்த பயணம் ஒரு நாளை தின்றுவிடுகிறது! எங்கள் ஊரிலிருந்து கொழும்புக்கு 200 km அதை கடக்க 5.30-6.00 மணித்தியாலங்கள் எடுக்கிறது.. அதுவும் கொழும்பு- யாழ்ப்பாணம் பிரதானவீதி.. பயணத்தின் முக்கால்வாசி நேரத்தை பஸ் பிரயாணத்தில்தான் கழிக்க வேண்டி வருகிறது.. அதிகாலையில் பயணம் புறப்பட்டால் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்கு திரும்பவேண்டிய நிலை.. இப்பொழுது யாழ்ப்பாணத்திற்கு அதிக வாகணங்கள் அவ்வழியால் பயணிப்பதால் பாதையை பெரிதாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.. அந்த வேலைகள் முடிந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே..

சாலைகளின் குறைபாடுதான் பயணங்களுக்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது என்றாலும்.. இதற்கு இன்னுமொரு காரணம் அதிகமான வாகன நெரிசல்! இப்போதெல்லாம் சாலைகளில் பயணிக்கும் போது இலங்கையும் அபிவிருந்தியடைந்த நாடுதானா? என்ற சந்தேகம் எழுவதுண்டு அவ்வளவு வாகணம்.. காசு இருக்கோ இல்லையோ கடனுக்காவது ஒரு வண்டியை வாங்கி சுத்துகிறார்கள்..  அதுவும் கொழும்பிலிருந்து வரும் போதும் போகும் போதும் புறக்கோட்டை-களனி-கிரிபத்கொட-கடவத்த தாண்டுவதற்குள் "போதும் போதும்" என்றாகிடும்.. 

கொழும்பிலிருந்து வெளியாகும்.. கண்டி,குருனாகல்,தம்புள்ள,பொலன்னறுவை,கெக்கிராவ,அனுராதபுரம்,வவுனியா,ஹொரவப்பொத்தான மற்றும் யாழ்ப்பாணம் இன்னும் நிறைய ஊர்களுக்கான வாகணங்களும் அந்த கொழும்பு-கண்டி பாதையையே பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவ்வழியால் பயணிக்கும் மக்கள் மிகுந்த நேர விரயத்துக்கு உட்படுகின்றனர்..


அரசாங்கம் இதெல்லாம் பார்த்துவிட்டுத்தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் உச்சத்தில் இருப்பதாக பீத்திக்கொள்கிறது!!! பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதுமே இன்றைய இலங்கையின் வளர்ச்சி நிலை.. மத்திய கிழக்கு நாடுகளின் வேலைவாய்ப்பு போல் இல்லாமல் இருந்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இலங்கை பங்களாதேஷை விட ஏழை நாடாகவே இருந்திருக்கும்..!!

என்னதான் நம்மூர் வீதிகளை குறை கூறினாலும் அதைவிட மோசமான வீதிகள் உலகில் வேறு நாடுகளில் இருக்கத்தான் செய்கிறது.. சில புகைப்படங்கள் உதாரணத்திற்கு..


பாகிஸ்தானில்..

நேபாளத்தில்

இந்துநேசியாவில்

எறும்பு மனிதர்கள் புகைப்படங்கள்..!!

தனது மிகச்சிறிய வண்டிகளில் அதிகளவு எடை/கொள்ளளவு கொண்ட  பொருட்களை எவ்வளவு நுணுக்கமாக அடுக்கி எடுத்துச்செல்கிறார்கள் இந்த மனிதர்கள்..! எறும்பு தன் எடையை விட அதிக எடையை சுமக்கும் திறமை கொண்டதாம்!! அந்த வகையில் இவர்களும் எறும்பு மனிதர்கள்தான்..உலகிலேயே அழகிய குதிரையாம!!

            உலகிலேயே அழகிய குதிரையாம!! குதிரையை மட்டும்தான் பார்க்கனும்..சரியா?

ஏய் இங்க எல்லாரும் வாங்கய்யா.. இங்க ஒரு மனிசப்பய தனியா சிக்கிட்டான்!!

வாங்க, செத்து செத்து விளையாடலாம்,,

நாங்களும் விளையாடுவம்ல..

கொஞ்ச்ம நூடுல்ஸ் சாப்பிட்டு பார்க்க சொன்னா.. என்னையே நூடுல்ஸாக்கி சாப்பிட்டிடும் போல இருக்கே!!

ஆத்தாடி... எம்புட்டு பெரிய பள்ளம்..

வாவ்.. கிரேட் போட்டோ ஷாட்..

ஏன் இந்த கொலவெறி..

ஒரு ஓவியம் உயிரானதே,,

மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....

இதென்ன அவ்வளவு பெரிய காமெடியா யாராவது ஆங்கில புலமையுள்ளவர்கள் சொல்லுங்கப்பா,,


இதுதான் சுனாமியா?


வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்,,

Hayyoda -Jawan Song Lyrics

Hayyoda Song Lyrics in Jawan Hayyoda Song Lyrics in Tamil ஆண் : காத்தெல்லாம் காதலாகும்  காலமே நின்னு ஓடும் ஓஓ... பக்கமா நீயும் நானும்  அப்பத...