தேங்காய் ரொட்டியும் தேங்காய் சம்பலும்!

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு! அதுபோலவே இலங்கைக்கும் தனித்துவமான உணவு வகைகள் உண்டு அதில் ஒன்றுதான் இந்த தேங்காய் சம்பல் (Pol Sambola /Coconut Sambol) என்பது! இது தேங்காய் துருவல் மூலம் செய்யப்படும்  side dish உணவு வகையாகும்! இவற்றை அதிகமாக காலை உணவிற்கும் சில வேளை இரவுணவிற்கு மற்றும் பகல் உணவிற்கு பயன்படுத்துவார்கள்.. தேங்காய் சம்பல் அதிகமாக பான்(bread) அல்லது ரொட்டியுடன் சேர்த்தே சாப்பிடப்படும் ஒரு உணவாகும்.. சோறு, இடியப்பம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம். சேர்த்தும் சாப்பிடலாம்! ரொட்டியுடன் தேங்காய் சம்பல் நினைக்கவே வாய் ஊருகிறது!
தேங்காய் சம்பல்.

தேங்காய் ரொட்டி.

தேங்காய் சம்பல் செய்வதற்கு தேங்காய் துருவல்,வெங்காயம்,பச்சமிளகாய் or காய்ந்த மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவையே அடிப்படைத்தேவைகள். தக்காளி,எலுமிச்சம் சாறு(lime) யும் தேவையாயின் சேர்த்துக்கொள்ளல்லாம்.. எலுமிச்சம் சாறு சேர்த்தால் புளிப்பு சுவையுடன் சுவை இரட்டிப்பாகும். எந்தவித அடுப்பின் தேவையில்லாமல் கைகளாலே செய்து விட முடியும்!  எங்கள் வீடு உட்பட இவற்றை செய்ய அம்மிக்கல்லையும் பயன்படுத்துவார்கள். இலங்கையின் அதிகவீடுகளில் காலை உணவாக சோறும் உட்கொள்ளப்படுகிறது, அவ்வாறான நேரங்களில் மீன்,இறைச்சி,முட்டை, காய்கறி என எப்போதும் வாங்கி உண்ண வசதியில்லாத வீடுகளில் சோற்றுக்கு பரிமாறப்படும் கறியாக முதன்மை பெறுவது பருப்பும் அதனுடன் சேர்த்து இந்த தேங்காய் சம்பலும்தான்! ஏழை வீடுகளுக்கேயுரிய உணவு வகை என்றாலும் அதன் சுவையில் குறையில்லை. தேங்காய் சம்பல் என்பது பொதுவாக ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பபடும் ஓர் உணவு!
இடியப்பத்துடன் தேங்காய் பொல் சம்பல்

அடுத்ததாக இந்த ரொட்டி என்பது தெற்காசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உண்ணப்படும் ஓர் உணவு வகையாகும். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மூன்றுவேளை உணவும் ரொட்டிதான்! இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவற்றிலும் மூன்று வேளை உணவாக ரொட்டி/சப்பாத்தியே உணணப்படுகிறது அபூர்வமாய்த்தான் சோறு உண்பார்கள்!  ஆனால் நமக்கு சோற்றை ஒரு கட்டு கட்டினாத்தான் சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும்.ஆனால் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமாக இந்த ரொட்டியை தயார் செய்கின்றனர்.. அதேபோல் இலங்கையில் செய்யப்படும் ரொட்டியும் மாறுபட்டது. இவை அதிகமாக கோதுமை மாவினாலும் அரிசி மாவினாலுமே செய்யப்படுகிறது! இவற்றுக்கும் தேங்காய் துருவல் சேர்ப்பதால் தேங்காய்(பொல் -சிங்களத்தில்) ரொட்டி என்றே அழைக்கப்படுகிறது! இவை வட்டவடிவாக கொஞ்சம் தடிப்பமானதாக இருக்கும் காலை உணவாக ஒரு ரொட்டி சாப்பிட்டாலே போதுமானது. இவை வீடுகளிலேயே செய்யப்படுகிறது கடைகளில் விற்கப்படுவது மிக மிக குறைவு.

வீடுகளில் செய்யப்படும் ரொட்டி


கடையில் விற்கப்படும் சிறிய ரொட்டி

இலங்கையின் கோதுமை மா ரொட்டியே காலை இரவு உணவாக அதிக வீடுகளில் கானக்கிடைக்கும் குறிப்பாக எங்கள் (முஸ்லிம்) பிரதேசத்தில். ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறான உணவுகளை அதிகம் உண்பார்கள். சில இடங்களில் காலை இரவு இரு நேரமும் அதிகமாக பான் மட்டும்தான்! தமிழ்நாட்டு நண்பர்களுக்கு இந்த "பான்" உண்ணும் விடயத்தை சொன்னால் வியப்பாக பார்ப்பார்கள்! அங்கே அப்பிடியொரு உணவுப்பழக்கம் இல்லையாம்! அவர்களுக்கு தோசையும் இட்லியும் எப்படியோ அப்படியே இலங்கையர்களுக்கு "பான்"! கோதுமை மாவும் பானும் இல்லையென்றால் இலங்கையே ஸ்தம்பித்து போய்விடும்! சிங்களவர்கள் ரொட்டி/பான் அதிகம் சாப்பிட மாட்டார்கள். அவர்களில் அதிகமானோர் மூன்றுவேளையும் சோறு சாப்பிடுபவர்களே!
இலங்கை பான்

பான், பருப்பு மற்றும் தேங்காய் சம்பல்.
(அதிகமான இலங்கையர்களின் காலை உணவு)எந்த ஸ்டார் உணவகங்களின் உணவுக்கும் ஈடாகாது இந்த ரொட்டியும் தேங்காய் சம்பலும் சேர்ந்துகொண்டால் கிடைக்கும் தனிச்சுவை! அதை உண்டவர்களுக்கே அது புரியும்!

ஒரு வெள்ளைக்கார பெண்னின் இலங்கை உணவு பற்றிய அனுபவம் அதில் முதல் இரு இடங்களில் நான் சொன்ன ரொட்டியும் சம்பலும்தான்!

பாலைவன மோகங்கள்!


வார்த்தைகள்
சண்டையிட்டுக்கொள்கின்றன
உன்னைப்பற்றி எழுதும்
கவிதைகளில்
இடம்பிடித்துக்கொள்ள.
நகரப்பேரூந்தில்
இடம்பிடிக்கும்
பயணிகள் போல...!

பாலைவனத்தில்
பருவபெயர்ச்சி மழையாய்
புன்னகைகளை
பொழிந்து செல்கிறாய்.
துள்ளிக்குதிக்கிறது மனசு
நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயி போல்...!

சாலையில் நீ நடந்தால்
வேடிக்கை பார்க்கிறது
என் கண்கள்
காட்சி மறையும் வரை.
பேரூந்தின் ஜன்னல் வழி
வேடிக்கை பார்க்கும்
சிறுவன் போல..!

உங்கள் சாலைகள்
எப்படியோ தெரியவில்லை
எங்கள் சாலைகள்
விபத்துகள் நேரலாம்
சற்றுமுன்னும்
ஒரு சிலர்
சற்றெண்டு விழுந்து
எழுந்து செல்கின்றனர்..


உன்னை பருக வேண்டும்
உன்னில் படர வேண்டும்
உன்னில் உறைய வேண்டும்
உன்னில் கரைய வேண்டும்
உன்னில் மிதக்க வேண்டும்
உன்னில் மூழ்க வேண்டும்
உன் முத்தத்தில்
நனைய வேண்டும்
உனக்குள்ளே
தொலைய வேண்டும்
உனக்குள்ளே
இறந்திட வேண்டும்
என் காதல்
மழையே!!!
ஓராண்டாய்
உன்னைப்பார்த்ததில்லை
நான்
ஓர வஞ்சனையெதற்கு
ஓடி மறைவதெதற்கு
கடக்கட்டும்
கார் மேகங்கள்
நனையட்டும்
பாலைவன மோகங்கள்
சிரிக்கட்டும்
மனசின் தாகங்கள்!!


எல்லோருக்கும் ஹஜ்ஜுப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.. ஈத் முபாரக்!!!
கை கால் முறிவுகளை அதிசயமாய் குணப்படுத்தும் நாட்டு வைத்தியர்!


விபத்துகள் மூலமாக மனிதன் எவ்வளவுதான் உடலுக்கு எந்தவித தீங்குகளோ இழப்புகளோ ஏற்படக்கூடாதென்று கவனமாக வாழ்ந்தாலும்! அவன் அறிந்தோ அறியாமலோ விபத்துகள் ஏற்பட்டு உடலுக்கு காயமோ வேறு வகையான தீங்கோ ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. இது சுற்றுப்புறச்சூழல்,செய்யும் தொழில்கள்,மோட்டார் வாகன பயணங்கள், விளையாட்டுக்கள் போன்றவையே இவற்றுக்கான பிரதான காரணங்கள்.

இன்றைய காலத்தை பொறுத்தவரை தினம் தினம் வாகன விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன இவற்றிலே அதிகமாய் பாதிக்கடுவது கை,கால் எலும்பு முறிவு எலும்பு விலகல் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மனிதர்கள் மரங்களிலிருந்து தவறிவிழுதல்,மிருகங்களால் ஏற்படும் தாக்குதல்களாலும் அதிகமதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.. இவ்வாறான எலும்பு முறிவு விடயங்களை ஆங்கில மருத்துவத்தால் அவசரமாக குணப்படுத்திட முடிவதில்லை.! அவர்களிடம் சென்றால் மாதக்கணக்கில் கட்டுப்போட்டு உட்கார வைத்து விடுவார்கள். மற்றும் தனியார் ஆங்கில மருத்துவங்கள் அதிக செலவையும் உண்டுபண்ணக்கூடியவை. கிறாமப்புறங்களில் வாழும் சாதாரண மக்களால் அவற்றை நுகர்வது அவ்வளவு சுலபமானதல்ல! அவர்களுக்கான ஒரே தீர்வு இந்த நாட்டு வைத்திய முறைதான்!
Welding Weda mahathya

"மரதன்கடவள" இலங்கையிலுள்ளவர்களுக்கு இந்த ஊரின் பெயரை சொன்னதுமே ஞாபகத்துக்கு வருவது "மரதன்கடவள யகடயா (இரும்பு மனிதன்)" அதாவது 1950 களில் இந்த ஊரில் வாழ்ந்த ஒருவன் ரயில் தண்டவாள இரும்பைக்கூட வளைக்கும் பலசாலியாம்.. அவன் இலங்கை முழுதும் பிரபலம் அவனே மரதங்கடவளயின் இரும்பு மனிதன் என்ற பெயரால அழைக்கப்படுகிறான்.இதைப்பற்றி பின்னொரு பதிவில் பார்க்கலாம். ஆனால் கடந்த ஒரு பத்து பதினைந்து வருடங்களாக இந்த ஊரின் பெயரைச்சொன்னதும் ஞாபகத்திற்கு வரும் ஒருவர் சகல விதமான எலும்பு முறிவுகளையும் அதிசயமாய் குணப்படுத்தும் வேல்டிங்(welding) வெதமகத்தயா (நாட்டு வைத்தியர்) இந்த மரதன்கடவளதான் எனது பிரதான நகரமும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவரை வேல்டிங் வைத்தியர் என்று சொல்லக்காரணம் உடைந்த உலோகங்களை வேல்டிங் செய்து இனைப்பது போன்று உடைந்த முறிந்த எலும்புகளையும் மிக இலகுவாக இயற்கையில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளைக்கொண்டே குணப்படுத்தி இணைத்து விடுவதுதான. இவர் மரதன்கடவளயிலிருந்து 3 கிமி தொலைவில் உள்ள தம்பளஸ்ஸாகம என்னும் கிராமத்தில் இருக்கிறார்.. இந்த பிராந்திய மக்கள் இவரை தம்பளஸ்ஸாகம வெத மகத்தயா என்றும் அழைப்பர்! இவரின் உண்மை பெயர் எஸ்.எம் முத்துபண்டா, இப்போது 68 வயதை தொட்டுவிட்டார்!

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இவரைத்தேடி நூற்றுக்கணக்கானோர் தினம்தோறும் வந்துகொண்டிருக்கின்றனர். பிரதான வைத்தியசாலை கொண்ட கொழும்பு கண்டி போன்ற நகரங்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகிறார்கள் காரணம் இவரின் அதிசய வைத்திய முறைதான்.. தன்னிடம் வரும் எவரையும் முடியாதென்றோ,குணப்படுத்தாமலோ (அசாதாரனமானவற்றைத்தவிர) தான் அனுப்பியது கிடையாதெங்கிறார் இந்த நாட்டு வைத்தியர்.. ஒரு முறை சிறுவனொருவன் மரத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு முறிந்து விடவே வைத்தியசாலையில் தங்கி 3 மாதம் வைத்தியம் செய்தால்தான் குணப்படுத்த முடியும் என ஆங்கில மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் அந்த சிறுவனை வெறுமனே ஒன்னரை மணி நேரத்தில் எழுந்து நடக்க செய்திருக்கிறார். இன்னொரு முறை யானையால் தாக்கப்பட்டு இரு கால்களும் முற்றிலுமாக நொருங்கிய நிலையில் அழைத்து வரப்பட்ட விவசாயி ஒருவர், மரத்திலிருந்து விழுந்து கால் மோசமாக உடைந்தநிலையில் 5 பிரதான வைத்தியர்களால் குணமாக்க முடியாததை ஓரே நாளில் குணமாக்கியதென்று இவர் ஆபூர்வமாய் குணப்படுத்தியவர்கள் பலர். அப்படியொரு திறமையான நாட்டு வைத்தியர் இவர்.

இவரின் அப்பா,தாத்தா காலத்திலிருந்து தலைமுறையாக இந்த வைத்தியத்தை செய்து வருகிறார்கள். இந்த வைத்தியத்தின் துர்ப்பாக்கிய நிலையே இதுதான்! காரணம் இதை இவர்கள், இவர்களின் வாரிசு தவிர்ந்த ஏனையோருக்கு சொல்லிக்கொடுக்க விரும்புவதில்லை.. இவர் மட்டும்தான் ஆண்பிள்ளை அந்த குடும்பத்தில் மற்ற நான்கு சகோதரிகளுடன்! இவரும் பெண்ணாக பிறந்திருந்தால் இந்த வைத்தியம் அவர் அப்பாவோடு முற்றுப்பெற்றிருக்கும்.. இது வெறுமனே சொல்லிக்கொடுத்தோ படித்தோ கற்றுக்கொள்ளும் வைத்திய முறையும் அல்ல! மாறாக பல வருடங்கள் கூடவேயிருந்து உதவி அனுபவம் மூலமே இவற்றை அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!  இவருக்கு பிறகு இவரது இரண்டு மகன்களும இந்த வைத்திய முறையை பழகி வருவதால் அடுத்த தலைமுறைக்கும் இவை கொண்டு செல்லப்படுவது சந்தோஷமே.

இவர் தவிர இன்னும் பல திறமையான நாட்டு வைத்தியர்கள் இந்த பிரதேசத்தில் இருக்கிறார்கள்.. ஆனாலும் இவர்தான் மிகப்பிரபலம்! இன்றைய காடழிப்பு போன்ற விடயங்களால் இந்த வைத்தியத்திற்கு தேவையான ஆயூர்வேத மூலிகை வகைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களையும் சிலநேரம் மிகதூரம் பயணித்துத்தான் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடிகிறது எனவும் வருத்தத்துடன் கூறுகிறார் இவர்..இவ்வாறான வைத்தியர்களும்,வைத்திய முறைகளும்,மூலிகை வகைகளும் நாம் பேனி பாதுகாகக வேண்டிய எமது பொக்கிஷங்களாகும்.

கவிக்கோவின் கவித்துளிகள் சில!கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதைகளிலிருந்து சில துளிகள்.. நான் படித்ததில் மிக பிடித்தது!

தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா

வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட

அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும


கதவு

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்..


கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும


கதாநாயகன்- பூ பூத்ததை யார் பார்த்தது- வைசாக சந்த்யே!

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.


நம் பருவ வயதிலோ பாடசாலை நாட்களிலோ நடைபெறும் சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை. அதே போன்றுதான் அந்தக்காலங்களில் கேட்டு ரசித்த சில பாடல்களும் நம் மனதை விட்டு அகலாமல் நம்போடு கூடவே பயணிக்கும்! அப்படி என்னோடு பயணிக்கும் சில பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.. ஏனென்று சொல்லமுடியாதளவு இப்பாடல் மீது அவ்வளவு பிரியம் எனக்கு.

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகை போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது.....


பாண்டியராஜன் எஸ்.வி சேகர் ரேகா நடிப்பில் வெளியான கதாநாயகன் என்ற படத்திலேயே இப்பாடல் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாக இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என நம்பிக்கொண்டிருந்தேன் பின்னாளில்தான் தெரியவந்தது இப்பாடலுக்கு இசை சந்திரபோஸ் என்று! அவ்வளவு பெரிய இசையமைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும் ஜேசுதாசின் குரலில் இந்தப்பாடல் என்னை மயக்கவே செய்கிறது.. இணைய அறிமுகம் இல்லாத காலத்தில் வானொலி மட்டுமே பாடல் கேட்க இருக்கும் ஓரே வழி.. அப்போதெல்லாம் இப்பாடலை ஒலிபரப்ப மாட்டார்களா என காத்துக்கிடந்த வேளைகளும் உண்டு.. திடிரெண்டு! இப்பாடல், எங்காவது ஒலிக்க கேட்டால் அப்படியே அங்கேயே நின்று பாடல் முடிந்தபிறகுதான் அவ்விடத்தை விட்டு நகர்வேன்!

பறவைப்போல பறந்த வானில் பறந்து செல்கின்றோம்
பசியைக்கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடிக்கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக்கொள்கிறோம்
மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்


பாடல் கேட்க.. இப்பாடலை இன்னும் அழகுபடுத்துவது வைரமுத்துவின் அழகான வரிகள்.
"மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்" என காதலின் உணர்வை இதைவிட அழகாக சொல்லமுடியாது.. இந்த கதாநாயகன் படத்தைப்பற்றி சொல்லப்போனால் படித்துவிட்டு வேலைதேடி கஷ்டப்படும் இரு இளைஞர்களின் கதை பாண்டியராஜனும் எஸ் வி சேகரும் காமெடியில் கலக்கியிருப்பார்கள்..! துபாயில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி கடல்வழியாக அழைத்து வந்து கேரளாவில் ஏமாற்றி இறக்கிவிடப்படுவார்கள் இருவரும்! அப்போது எஸ்.வி.சேகர் சொல்வார் என்ன "துபாய் பஸ் பெயரெல்லாம் மலையாளத்துலயே இருக்கு".. அதுக்கு பாண்டியராஜன் சொல்லுவார்.. இருக்காதா பின்ன, நம்மூர்லயிருந்து நாலு பேர் வந்தா கேரளாவுலயிருந்து 400 பேரு வந்துடுதாங்க இங்க..எவ்வளவு பெரிய உண்மை! இந்த காமெடி வசணம் இன்றைக்கு உண்மையாகிவிட்டது.. இங்குள்ள அலுவலக பெயர் பலகைகளில் அரபு,ஆங்கிலத்துடன் மலயாள மொழியும் சேர்ந்துவிட்டது அபுதாபி Etisalat நிறுவனத்தில் கானலாம்!

இந்த கதாநாயகன் படம் கூட மலயாளத்த்லிருந்து தமிழுக்கு ரீமேக் ஆனதென்று அண்மையிலே தெரிந்துகொண்டேன்.. மலயாளத்தி நாடோடிக்காற்று என்றபெயரில். மோகன்லால், ஸ்ரீநிவாசன்,சோபனா ஆகியோர் நடித்திருப்பார்கள்.. எந்த மாற்றமுமில்லாத கதை. ஆனால், மலயாளத்தில் துபாய்க்கு அழைத்துச்செல்வதாய் கூறி தமிழ்நாட்டில் விட்டுவிடுகிறார்கள் மோகன்லாலையும் ஸ்ரீனிவாசனையும்! இதிலும்  பூ பூத்ததை பாடல் மெட்டிலேயே வைசாகச சந்த்யே சூப்பர் ஹிட் மலயாள பாடலும் உண்டு அதையும் ஜேசுதாஸே பாடியிருப்பார் அப்பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது.

கொலைவெறி கிறுக்கல்கள்!


எவ்வளவு பெரிய
சுயநலக்காரன் நான்
பார்க்கிறேன் ரசிக்கிறேன்
கதைக்கிறேன் சிரிக்கிறேன்
எனக்குள் மட்டும்!

உனக்கே தெரிவதில்லை
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
உணர்வுகளையும்
திருட்டுத்தனமாக
படம் பிடித்து விடுகிறேன்
விழிகளாலே!

கண்களால் கோர்க்கப்பட்டதை
என் மௌன தேசத்தில்
உலாவரும்
ஊமை உணர்வுகளுக்கு
திரைக்காட்சிகளாக்கி
விடுகிறேன்..!

திருட்டு என்பதும் ஒரு கலை
அதில் கைதேர்ந்தவன் நான்
தடயங்களில்லாமலும்
உனக்கே தெரியாமலும்
என்னவெல்லாமோ திருடியிருக்கிறேன்
உன்னில்!

கனவுகளோடு
வாழ்வதில்லை நான்
நிஜங்களை மட்டுமே ரசிக்கிறேன்..
உன்னையும் ரசிக்கிறேன்
நீயும் நிஜம் என்பதால்!

ரசிப்பவற்றையெல்லம்
சொந்தமாக்கிக்கொள்ள முடிவதில்லை
சொந்தமாக்கி கொள்வதைத்தான்
ரசிக்க முடியும் என்றால்
ரசனைப்பட்டினியால்
என்றோ இறந்திருக்கும்
என் உணர்வுகள்!

உன் உணர்வுகள்
தாக்கப்படாதவரை
தண்டனையுமில்லை
ரசனை தடைச்சட்டங்களுமில்லை
எனக்கெதிராய் பேச!

அங்கே
வருகிறாள் அவள்
நான் கிளம்ப வேண்டும்
நீங்களும் கிளம்புங்கள்..!

மழை நீர் சேகரிக்கும் திட்டம்!

நாங்களும் ஜீன்ஸ் சேர்ட் போடுவம்ல..

இதுவும் மழை நீர் சேகரிக்கும் திட்டம்தான்.. இது தமிழ்நாட்டில் அல்ல!

இரு கிளிகள்..

இயந்திர யுகத்தால் மறக்கப்பட்ட பழைய காலம்..

வேண்டும் என்றும் பசுமை..

ஒரு கனவனின் மறைக்கப்படும் மறுபக்கம்..

விளக்கம் தேவையில்லை..

பாசக்கார பயபுள்ள..

இதுதான் சிறந்த இடம் படிக்கிறதுக்கு..

சட்டை காய்க்கும் மரம்..

நோ கமெண்ட்ஸ்!

மனித முகவடிவில் மரம்!
உங்க ஆபிசுலயும் இப்படியா வேலை போகுது..

:P

நவநாகரீகம்..!

ஆஜீத் சூப்பர் சிங்கரின் நாயகன்..!


விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்ப்பவராக இருந்தால் "ஆஜித்" என்ற பெயரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! அந்த நிகழ்ச்சியில் அவன் பாடும் பாடல்கள் அவ்வளவு பிரபலம்! அவன் பாடினாலே அந்தப்பாடலுக்கு தனியழகு கிடைத்து விடுகிறது.. வெறும் புகழுக்காக சொல்லவில்லை அத்தனை திறமை அவனுக்குள்..

அவனின் குரல் வளத்தைப்போன்ற பாடும் போது முகபாவங்களும்,உணர்ச்சிகளும், உடல் அசைவுகளும், ஸ்டையிலும் அந்தப்பாடலை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது.. வெறுமனே புதிய பாடல்களின்றில்லாமல் பழைய பாடல்களையும் மிக அழகாக அனுபவித்து பாடக்கூடியவன்..இதற்கு உதாரணம் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய "அனுபவம் புதுமை" என்ற பாடலை பாடிய விதம்.. இவன் பாடிய பிறகே இந்தப்பாடல் என்னை அதிகம் கவர்ந்துள்ளது.. இப்படி பல பாடல்கள் இவன் பாடியது பிரமாதம்.. ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது பாடல்வரிகள் மறந்து கொஞ்சம் சொதப்பிவிட்டதின் காரணமாக அச்சுற்றிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்! பின் இப்போது வய்ல் கார்ட் சுற்றில் பாடிய மூன்று பாடலையும் சூப்பராக பாடி வந்திருந்த நடுவர்களின் அமோக ஆதரவை பெற்றுவிட்டான்.. அதிலும் அந்த "ஆரோமலே" பாடலுக்குப்பின் இவன் உயரமே வேறு என்றாகிவிட்டது! நடுவர் விஜய்பிரகாஷ் மற்றும் பலர் சொன்னது போல இவன் ஏன் இறுதிசுற்றுக்கு நேரடியா போகவில்லை என்பது ஆச்சர்யம்தான்!

ஆனாலும் வயில் கார்ட் ரவுண்டில் நடுவர்களினதுன் பொதுமக்களினதும் ஆதரவைப்பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிட்டான்..  இறுதிப்போட்டியில் வெற்றி தோல்வி என்னவானாலும் இப்போதே ஆயிரக்கணக்கானோரின் உள்ளங்களை கொள்ளையடித்துவிட்டான் இந்த லவ்வர் பாய்.. இறுதிப்போட்டியிலும் கலக்க வாழ்த்துக்கள்.. இறுதிப்போட்டிக்கு தெரிவான இன்னுமொரு மிகச்சிறந்த போட்டியாளர் யாழினிக்கும் வாழ்த்துக்கள்.. இவரின் பாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தது!

ஆஜித் பாடிய பாடல்களில் எனக்கு எல்லாமே பிடித்ததுதான் அவற்றில் சில பாடல்கள் இங்கே!

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்.. ..

ஆரோமலே....நீயே நீயே நெஞ்சில் வாழும்..டெடிகேசன் ரவுன்ட்

ஹிட்லரின் கொலைக்களம்!!ஓர் நாள் இரவு
ஓர் பயணம்
ஓராயிரம் மைல்கள்
ஓடியிருக்கலாம்...!
அது ஐரோப்பா என
அடையாளம்
கண்டு கொண்டேன்
நாலாபுறமுமிருந்து வந்த
நாகரீக
வாசனையினால்...!
பல தேசங்கள்
கடந்து
பவனிவரும் போது
மரன ஓலங்கள்
காதில் விழவே
கால் வைத்தேன்
பாரினில்...!
அது ஜேர்மனிய தேசம்
அறிந்து கொண்டேன்
அந்த மரன ஒலங்கள்
யூதர்களின்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்கள்...!
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
அறியத்தந்தது எனக்கு
அவ்வார்த்தையில் வந்த
ஆணவமும்
அகங்காரமும்....!
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிட்லரின் பதில்
இன்னும் ஓர் இரவில்

யானை சாலை மறியல் போராட்டம்!

                        நாங்களும் சாலை மறியல் போராட்டம் பண்ணுவம்ல..எப்பூடி..!!


நீங்க நாயை கூட்டிட்டு வாக்கிங்க் போனா நாங்க பாம்ப கூட்டிட்டு வாக்கிங்க போவம்ல.. எப்பூடி..!!


ஒரு ஆணினதும் பெண்னினதும் குடும்ப வாழ்க்கை வெற்றிக்கு பின்னால் இவ்வகையான காரணங்களும் இருக்கவே செய்கிறது!

ஒரு கவிதை கிறுக்கல்!!

மாலைப் பொழுதுகளில்
மனதெங்கும் உற்சாகம் தருகிறது
உன் ஞாபகம் சுமந்து வரும்
தேநீர் கோப்பை!

உன் கோபங்களும்
அழகாகவே இருக்கிறது
தாயோடு கோபம் கொண்ட
குழந்தை போல!

புயலோடும்
பூகம்பத்தோடும்
வாழப்பழகிவிடலாம் உன்
புன்னகைகளுக்குள் விழாமலிருந்தால்!

நாளை உன்னோடு
பேசும் வார்த்தைகளை
இன்றே சேகரித்து விடுகிறேன்
எதிர்காலத்திற்கு உணவு தேடும் எறும்பாய்!

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics