பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.
நம் பருவ வயதிலோ பாடசாலை நாட்களிலோ நடைபெறும் சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை. அதே போன்றுதான் அந்தக்காலங்களில் கேட்டு ரசித்த சில பாடல்களும் நம் மனதை விட்டு அகலாமல் நம்போடு கூடவே பயணிக்கும்! அப்படி என்னோடு பயணிக்கும் சில பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.. ஏனென்று சொல்லமுடியாதளவு இப்பாடல் மீது அவ்வளவு பிரியம் எனக்கு.
சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகை போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது.....
பாண்டியராஜன் எஸ்.வி சேகர் ரேகா நடிப்பில் வெளியான கதாநாயகன் என்ற படத்திலேயே இப்பாடல் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாக இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என நம்பிக்கொண்டிருந்தேன் பின்னாளில்தான் தெரியவந்தது இப்பாடலுக்கு இசை சந்திரபோஸ் என்று! அவ்வளவு பெரிய இசையமைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும் ஜேசுதாசின் குரலில் இந்தப்பாடல் என்னை மயக்கவே செய்கிறது.. இணைய அறிமுகம் இல்லாத காலத்தில் வானொலி மட்டுமே பாடல் கேட்க இருக்கும் ஓரே வழி.. அப்போதெல்லாம் இப்பாடலை ஒலிபரப்ப மாட்டார்களா என காத்துக்கிடந்த வேளைகளும் உண்டு.. திடிரெண்டு! இப்பாடல், எங்காவது ஒலிக்க கேட்டால் அப்படியே அங்கேயே நின்று பாடல் முடிந்தபிறகுதான் அவ்விடத்தை விட்டு நகர்வேன்!
பறவைப்போல பறந்த வானில் பறந்து செல்கின்றோம்
பசியைக்கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடிக்கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக்கொள்கிறோம்
மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்
பாடல் கேட்க.. இப்பாடலை இன்னும் அழகுபடுத்துவது வைரமுத்துவின் அழகான வரிகள்.
"மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்" என காதலின் உணர்வை இதைவிட அழகாக சொல்லமுடியாது.. இந்த கதாநாயகன் படத்தைப்பற்றி சொல்லப்போனால் படித்துவிட்டு வேலைதேடி கஷ்டப்படும் இரு இளைஞர்களின் கதை பாண்டியராஜனும் எஸ் வி சேகரும் காமெடியில் கலக்கியிருப்பார்கள்..! துபாயில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி கடல்வழியாக அழைத்து வந்து கேரளாவில் ஏமாற்றி இறக்கிவிடப்படுவார்கள் இருவரும்! அப்போது எஸ்.வி.சேகர் சொல்வார் என்ன "துபாய் பஸ் பெயரெல்லாம் மலையாளத்துலயே இருக்கு".. அதுக்கு பாண்டியராஜன் சொல்லுவார்.. இருக்காதா பின்ன, நம்மூர்லயிருந்து நாலு பேர் வந்தா கேரளாவுலயிருந்து 400 பேரு வந்துடுதாங்க இங்க..எவ்வளவு பெரிய உண்மை! இந்த காமெடி வசணம் இன்றைக்கு உண்மையாகிவிட்டது.. இங்குள்ள அலுவலக பெயர் பலகைகளில் அரபு,ஆங்கிலத்துடன் மலயாள மொழியும் சேர்ந்துவிட்டது அபுதாபி Etisalat நிறுவனத்தில் கானலாம்!
இந்த கதாநாயகன் படம் கூட மலயாளத்த்லிருந்து தமிழுக்கு ரீமேக் ஆனதென்று அண்மையிலே தெரிந்துகொண்டேன்.. மலயாளத்தி நாடோடிக்காற்று என்றபெயரில். மோகன்லால், ஸ்ரீநிவாசன்,சோபனா ஆகியோர் நடித்திருப்பார்கள்.. எந்த மாற்றமுமில்லாத கதை. ஆனால், மலயாளத்தில் துபாய்க்கு அழைத்துச்செல்வதாய் கூறி தமிழ்நாட்டில் விட்டுவிடுகிறார்கள் மோகன்லாலையும் ஸ்ரீனிவாசனையும்! இதிலும் பூ பூத்ததை பாடல் மெட்டிலேயே வைசாகச சந்த்யே சூப்பர் ஹிட் மலயாள பாடலும் உண்டு அதையும் ஜேசுதாஸே பாடியிருப்பார் அப்பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது.

4 comments:
எனக்கு இரண்டு மொழிகளும் நன்கு பரிச்சயம் ( மலையாளம் வாசிக்கத் தெரியும் எழுத வராது ) என்பதால் இரண்டு மொழிப் படங்களையும் பார்ப்பதுண்டு ... இந்தப் பாடலையும் பார்த்துள்ளேன். இருந்த போதும் நினைவு மீட்டல் செய்தமைக்கு மிக்க நன்றிகள் .. இன்னும் பல படங்கள் தமிழ் - மலையாளம் இரண்டிலும் உண்டு. .. பொம்முக்குட்டி அம்மாவுக்கு போல ..
மலையாளிகள் தமிழ் படத்தை நன்கு விரும்பி பார்ப்பார்கள், மொழி மாற்றம் செய்யாமலேயே அவர்களுக்கு நன்று புரியும் .. இதே நிலை கருநாடகம், சிறிலங்காவில் கூட இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் .. நல்ல பதிவு சகோ. அருமை .. !!!
mmm...
naan padam paarthullen ..
ninaivoottiyathukku mikka nantri!
இனிமையான பாடல் வரிகள்...
நன்றி... tm1
நானும் சில பாடல்களுக்காய் காத்துக் கிடந்துள்ளேன்..
Post a Comment