தேங்காய் ரொட்டியும் தேங்காய் சம்பலும்!

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு! அதுபோலவே இலங்கைக்கும் தனித்துவமான உணவு வகைகள் உண்டு அதில் ஒன்றுதான் இந்த தேங்காய் சம்பல் (Pol Sambola /Coconut Sambol) என்பது! இது தேங்காய் துருவல் மூலம் செய்யப்படும்  side dish உணவு வகையாகும்! இவற்றை அதிகமாக காலை உணவிற்கும் சில வேளை இரவுணவிற்கு மற்றும் பகல் உணவிற்கு பயன்படுத்துவார்கள்.. தேங்காய் சம்பல் அதிகமாக பான்(bread) அல்லது ரொட்டியுடன் சேர்த்தே சாப்பிடப்படும் ஒரு உணவாகும்.. சோறு, இடியப்பம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம். சேர்த்தும் சாப்பிடலாம்! ரொட்டியுடன் தேங்காய் சம்பல் நினைக்கவே வாய் ஊருகிறது!
தேங்காய் சம்பல்.

தேங்காய் ரொட்டி.

தேங்காய் சம்பல் செய்வதற்கு தேங்காய் துருவல்,வெங்காயம்,பச்சமிளகாய் or காய்ந்த மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவையே அடிப்படைத்தேவைகள். தக்காளி,எலுமிச்சம் சாறு(lime) யும் தேவையாயின் சேர்த்துக்கொள்ளல்லாம்.. எலுமிச்சம் சாறு சேர்த்தால் புளிப்பு சுவையுடன் சுவை இரட்டிப்பாகும். எந்தவித அடுப்பின் தேவையில்லாமல் கைகளாலே செய்து விட முடியும்!  எங்கள் வீடு உட்பட இவற்றை செய்ய அம்மிக்கல்லையும் பயன்படுத்துவார்கள். இலங்கையின் அதிகவீடுகளில் காலை உணவாக சோறும் உட்கொள்ளப்படுகிறது, அவ்வாறான நேரங்களில் மீன்,இறைச்சி,முட்டை, காய்கறி என எப்போதும் வாங்கி உண்ண வசதியில்லாத வீடுகளில் சோற்றுக்கு பரிமாறப்படும் கறியாக முதன்மை பெறுவது பருப்பும் அதனுடன் சேர்த்து இந்த தேங்காய் சம்பலும்தான்! ஏழை வீடுகளுக்கேயுரிய உணவு வகை என்றாலும் அதன் சுவையில் குறையில்லை. தேங்காய் சம்பல் என்பது பொதுவாக ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பபடும் ஓர் உணவு!
இடியப்பத்துடன் தேங்காய் பொல் சம்பல்

அடுத்ததாக இந்த ரொட்டி என்பது தெற்காசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உண்ணப்படும் ஓர் உணவு வகையாகும். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மூன்றுவேளை உணவும் ரொட்டிதான்! இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவற்றிலும் மூன்று வேளை உணவாக ரொட்டி/சப்பாத்தியே உணணப்படுகிறது அபூர்வமாய்த்தான் சோறு உண்பார்கள்!  ஆனால் நமக்கு சோற்றை ஒரு கட்டு கட்டினாத்தான் சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும்.ஆனால் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமாக இந்த ரொட்டியை தயார் செய்கின்றனர்.. அதேபோல் இலங்கையில் செய்யப்படும் ரொட்டியும் மாறுபட்டது. இவை அதிகமாக கோதுமை மாவினாலும் அரிசி மாவினாலுமே செய்யப்படுகிறது! இவற்றுக்கும் தேங்காய் துருவல் சேர்ப்பதால் தேங்காய்(பொல் -சிங்களத்தில்) ரொட்டி என்றே அழைக்கப்படுகிறது! இவை வட்டவடிவாக கொஞ்சம் தடிப்பமானதாக இருக்கும் காலை உணவாக ஒரு ரொட்டி சாப்பிட்டாலே போதுமானது. இவை வீடுகளிலேயே செய்யப்படுகிறது கடைகளில் விற்கப்படுவது மிக மிக குறைவு.

வீடுகளில் செய்யப்படும் ரொட்டி


கடையில் விற்கப்படும் சிறிய ரொட்டி

இலங்கையின் கோதுமை மா ரொட்டியே காலை இரவு உணவாக அதிக வீடுகளில் கானக்கிடைக்கும் குறிப்பாக எங்கள் (முஸ்லிம்) பிரதேசத்தில். ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறான உணவுகளை அதிகம் உண்பார்கள். சில இடங்களில் காலை இரவு இரு நேரமும் அதிகமாக பான் மட்டும்தான்! தமிழ்நாட்டு நண்பர்களுக்கு இந்த "பான்" உண்ணும் விடயத்தை சொன்னால் வியப்பாக பார்ப்பார்கள்! அங்கே அப்பிடியொரு உணவுப்பழக்கம் இல்லையாம்! அவர்களுக்கு தோசையும் இட்லியும் எப்படியோ அப்படியே இலங்கையர்களுக்கு "பான்"! கோதுமை மாவும் பானும் இல்லையென்றால் இலங்கையே ஸ்தம்பித்து போய்விடும்! சிங்களவர்கள் ரொட்டி/பான் அதிகம் சாப்பிட மாட்டார்கள். அவர்களில் அதிகமானோர் மூன்றுவேளையும் சோறு சாப்பிடுபவர்களே!
இலங்கை பான்

பான், பருப்பு மற்றும் தேங்காய் சம்பல்.
(அதிகமான இலங்கையர்களின் காலை உணவு)



எந்த ஸ்டார் உணவகங்களின் உணவுக்கும் ஈடாகாது இந்த ரொட்டியும் தேங்காய் சம்பலும் சேர்ந்துகொண்டால் கிடைக்கும் தனிச்சுவை! அதை உண்டவர்களுக்கே அது புரியும்!

ஒரு வெள்ளைக்கார பெண்னின் இலங்கை உணவு பற்றிய அனுபவம் அதில் முதல் இரு இடங்களில் நான் சொன்ன ரொட்டியும் சம்பலும்தான்!

12 comments:

HajasreeN said...

மச்சி.............. இந்த காலங்காத்தால அடிக்குற மழையில இந்த ரொட்டி பதிவா படிக்கவே பசி தானா வருது .....

ஆத்மா said...

உண்மையிலே மிகவும் சுவையான உணவுதான் நண்பா
இப்போது சுட சுட சாப்பிட்டால் தனி சுவை

ஹாலிவுட்ரசிகன் said...

பதிவைப் படிக்கும்போதே வாய் ஊறுகிறதே?? ஆனா, எனது பேவரைட் ரொட்டியும் கட்டுச்சம்பலும் தான். :)

சில சிங்கள வீடுகளில் சோறும் பரும்பும் சம்பலும் மட்டும் தனியாக சாப்பிடாலும் அருமையாக இருக்கும்..

இப்போ கோதுமை மா எகிறுகின்ற விலையில் சோறு சாப்பிடுவதே லாபமாகத் தெரிகிறது. :)

Unknown said...

Wow... ippave saapidanum poola iruku...

”தளிர் சுரேஷ்” said...

சுவையான உணவுகளை பகிர்ந்து பசியை தூண்டி விட்டீர்கள்! ஒரு தேங்காய் சம்பலை பார்சல் அனுப்பி வையுங்கள்!

மாதேவி said...

இலங்கை மக்கள் ரொட்டிப் பிரியர்கள் தான்.

என்ன ஒற்றுமை இன்று என்வீட்டிலும் ரொட்டிதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

பசிக்க வைச்சிட்டீங்க...

நன்றி...
tm3

Riyas said...

@HajasreeN said...

//காலங்காத்தால அடிக்குற மழையில இந்த ரொட்டி பதிவா படிக்கவே பசி தானா வருது//

வாங்க நண்பரே மழைகாலத்துக்கு ஏற்ற உணவுதான்..!

@சிட்டுக்குருவி

நன்றி நண்பா

@ஹாலிவுட்ரசிகன்

நன்றி நண்பா..

Riyas said...


@சிநேகிதி

நன்றி சிநேகிதி.

@s suresh

நன்றி சுரேஷ்


@மாதேவி

நன்றி மாதேவி

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி சார்

Anonymous said...

நானும் மாசிச்சம்பல்னு நினைச்சேன்...அதிராக்கா ரெசிப்பி பார்த்து போன வாரம் செய்தோம்... Simple n Yummy...

சுதா SJ said...

எனக்கு ஒரு ரொட்டி பார்சல் பாஸ் :))

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...