Diamond Necklace - மலயாள சினிமா!

துபாய் கனவுலகின் சொர்க்கம்! அதை அனுபவிக்கும் பாக்கியம் சிலருக்கு மட்டும்தான். பலருக்கோ அது வெறும் பார்த்து ஏங்கிச்செல்லும் கண்காட்சிதான். சிலருக்கு அதுவே நரகம்! இந்த படத்தில் சொல்வது போல் துபாய் நகரம் என்பது ஒரு மெஜிக் போல எல்லாம் இருப்பதாய் தோன்றும் ஆனாலும் ஒன்னுமில்லை எல்லாம் மாயம்! ஊரில் வேலைக்காய் கஷ்டப்படும் இழைஞர்கள் அநேகரின் கனவு எப்படியாவது ஒரு வெளிநாட்டு வேலை கிடைத்தால் போதும், அதன்பிறகு வாழ்க்கையில் முன்னுக்கு வந்துடலாம் குடும்பத்துக்கு உதவலாம் என்பதுதான் பலரின் லட்சியம்!

ஆனால் இந்த லட்சியம்,குடும்பம்,எதிர்காலம் என்பதெல்லாம் இங்கே வந்து இங்கே கிடைக்கும் தற்காலிக சுகங்கள், நண்பர்கள, களியாட்டங்கள், கேளிக்கைகள், சொகுசான வாகணங்கள், சொகுசான வாழ்க்கை மூலமாக மறக்கடிக்கப்பட்டு உழைத்த காசெல்லாம் வீனாக்கி கடன் தொல்லைகளில் சிக்கி இறுதியில் வெறும் கையோடு நாடு திரும்பும் பலரை பார்த்திருக்கிறோம்! இவ்வாறாக துபாயில் வேலைபார்க்கும் ஒரு ஜூனியர் மலயாளி டாக்டர் தன் வருமானத்திற்கு அதிகமான சொகுசான/கேளிக்கையான வாழ்க்கையில் மூழ்கி அவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வங்கிக்க்டன்,கிரெடிட் கார்ட் என சிக்கி கஷ்டப்பட்டு பலரை ஏமாற்றி பின் திருடும் நிலைக்கே சென்று பின் தன்னையும் தன் நிலையையும் உணர்ந்து திருந்தும் கதைதான் இந்த டயமண்ட் நெக்லஸ்.

அதிகமான மலயாள திரைப்படங்களில் பிரம்மாண்டம் இல்லை, மிகப்பெரிய மாஸ் ஹீரோக்கள் இல்லை, 100 பேரை தனியாளாய் அடித்து துவைக்கும் ஹீரோயிசம் இல்லை,கவர்ச்சி குத்துப்பாட்டுகள் இல்லை ஆனால் அவற்றையும் ரசிக்க முடியும் காரணம் நல்ல (யதார்த்த) கதையும் சுவாரசியான திரைக்கதையும் இயக்கமும்தான். மசாலா சினிமா ரசிகனின் திருப்தியை இவ்வாறான படங்கள் கண்டுகொள்வதில்லை. கண்டு கொள்ளத்தேவையும் இல்லை. இது அவர்களுக்கான படமும் அல்ல! இவ்வாறான படங்களை பார்க்கும் போது தமிழில் இவ்வாறான கதைகளும் திரைப்படமாக வராதா என்ற ஏக்கம் வருவதுடன் தமிழ்சினிமா (அவ்வப்போது ஒன்றிரண்டு விதி விலக்குகளைத்தவிர) மசாலா குப்பைகளை நம் ரசனைக்குள் கொட்டி இது வரை காலமும் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது..

டாக்டராக பஹாத் பாசில் மிக அருமையான யதார்த்த நடிப்பு. இவர் தேர்வு செய்யும் கதைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை பீமேல் கோட்டயத்தில் ஒரு வில்லத்தனமான நடிப்பென்றால் இதில் டாக்டராக/காதலனாக/கனவனாக/நவநாகரீக இழைஞசனாக நடிப்பில் அசத்தியிருப்பார். தமிழ் நர்சாக கௌதமி நாயர் என்னா கண்ணு அது! மலயாள பொண்ணுங்களுக்கு மட்டும் கண்ணு இவ்வளவு பெருசா ஏன்னு தெரியல்ல? கேன்சர் நோயாளியாக சம்விருதா பெரிய டாக்டராக ரோஹினி. இவர்களுடன் டாக்டரின் வெகுளியான மனைவியாக வருபவரும் எல்லா காட்சியிலும் புன்னகைக்க வைக்கிறார் இறுதிகாட்சி தவிர! முதல் முதலாக துபாய் வந்து காருக்குள் ஏறச்சொன்னதும் காரின் டிரைவர் சீட் பக்க கதவைத்திறந்து "இவ்விட இந்தப்பக்கம் இஸ்டீரின் அல்லே" என்று வெட்கப்பட்டு "அய்யே" என அடுத்தப்பக்கம் போய் உட்காரும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!


கதை,திரைக்கதை இக்பால் குட்டிபுரம் இயக்கம் லால்ஜோஸ்.  வேறு ஒருவரின் கதை திரைக்கதைக்கு இயக்கமட்டும் செய்யும் பல இயக்குனர்களை மலயாள சினிமாவில் கானலாம்.. அப்போதுதான் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளும் திரைவடிவம் பெற ஏதுவாகயிருக்கிறது. துபாயிலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் 20,25 ஆண்டுகள் தன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு லேபர் கேம்பில்லே தன் வாழ்க்கையையு,இளமையையும்,கனவையும் தொலைக்கும் மலயாளிகளின் வாழ்க்கை வேதனைகளையும்,கொண்டாட்டங்களையும் காட்ட மறக்கவில்லை சில இடங்களிலாவது. காட்சியமைப்பில் அழ்கிய துபாயின் உயர்ந்த கட்டடங்களையும் சாலைகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவுக்கு பக்கத்திலே அதிக காட்சிகள் எடுத்திருப்பது அழகு.!

இறுதியாக மலயாளி என்றால் சுயநலம் பிடித்தவன், காசுக்காக எதையும் செய்வான, மற்றவர்களை பற்றி சிந்திக்கமாட்டான், தமிழனை கண்டாலே பிடிக்காது போன்ற நம் மனதில் பதிந்திருக்கும் கருத்துக்களை உடைக்கும் வண்ணம், இல்லை! மலயாளிக்குள்ளும் நல்ல மனசும் மனிதாபிமானமும் இருப்பதாய் உணர்த்தி படம் முடிவடைகிறது

படத்தின் பாடலொன்று துபாயின் அழகோடு!

13 comments:

Thava said...

மலையாள படங்களை தொடர்ந்து பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லங்க.ஆனால், இந்த படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வழங்கிவிட்டது உங்க விமர்சனம்.ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...

அருமையா சொல்லியிருக்கீங்க...

ஆத்மா said...

மலையாளம் தெரியாத நான் எப்படிப் பார்க்கிறது பாஸ்......

ஹேமா said...

நல்லா சொல்லியிருக்கிறீங்க ரியாஸ்.நானும் தமிழ்ப்படங்களை விட மலையாளப்படங்களைத் தேடிப் பார்ப்பது அதிகம்.அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கதை மட்டும் ஓடி முடியும் !

Anonymous said...

Intha Padam Malayalam theriyathavankalum easy a understand panra mathiri yana dialogues than.. Tamil dialogues niraya varuthu.. So Padam kandippa nalla irukkum easya puriiyum..good film.. I watched yesterday..

Azhagan said...

Nicely said!, a very good film. You have written what we used to discuss at homw about Malayaalam films. Most of their films are worth watching. Most of their films have a very strong story line, beautiful acting. Made us wish for at least few tamil films of such quality. Let us hope Tamil films too attain such levels.
Mr.சிட்டுக்குருவி , language is not a barrier. see the movies, I assure you you won't find it difficult to follow.

boopathy perumal said...

உங்ககளது விமர்சனம் படித்து விட்டு இப்படத்தை பார்த்தேன். நானும் துபாய்வாசிதான் . இங்கு எப்படி வாழ்க்கைநிலை உள்ளது என்பதை துளியளவும் சினிமாத்தனம் கலக்காமல் இப்பட்டத்தை கொடுத்துள்ளனர். வழக்கமா எல்லா மலையாலப்ப்டங்களிலும் தமிழனை கிண்டல் செய்திருப்பார்கள்.
ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை என்று நினைக்கும்போது அந்த அந்த நல்ல நினைப்பை கெடுத்து விட்டார்கள் ஒரு சிறிய காட்சியின் மூலம்.
தமிழ் நர்சின் அம்மா கட்டும் மருத்தவமனைக்கு வைத்திருக்கும் பேரைப்பா ருங்கள். ''முனியாண்டி மெமோரியல் சாரிட்டப்ள் டிரஸ்ட் '' என்று காட்டுவார்கள். மலையாள திரைப்படங்களில் தமிழனை பண்டி. முனியாண்டி என்று கிண்டல்செய்வது வழக்கம்.
இந்த ஒரு காட்சியை தவிர முழு படத்தையும் முழுமையாக அனுபவித்து பார்தேன்.
மோகன் லால் நடித்த 'வரவேற்பு '' என்ற படம் பாருங்கள். துபாய் ரிட்டன் வாழ்க்கையை அத்தனை அருமையாக கட்டியிருப்பார்கள்
பூபதி
து பாய்

Riyas said...

@Thava Kumaran

நன்றி உங்கள் வருகைக்கு படத்தைப்பாருங்கள் கண்டிப்பா பிடிக்கும்.


@சே. குமார்

நன்றிங்க உங்கள் கருத்திற்கு.

Riyas said...

@சிட்டுக்குருவி

பாஸ் உங்கள் கேள்விக்கு Annbhu அவர்களும் Azhagan அவர்களும் அழகாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லியது போன்று தமிழ்பேசும் நமக்கு மலயாளத்தை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமில்லை அதிகமான வார்த்தைகள் தமிழாகவே இருக்கும்.. அதுவும் இது போன்ற படங்களை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

Riyas said...

@Annbhu

நன்றி அன்பு உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

@Azhagan

நீங்கள் சொல்வது மிகச்சரி சிறந்த கதையும் சிறந்த நடிப்புமே மலயாள சினிமாவின் பலம்.. தமிழுக்கு புதிதாக வரும் இயக்குனர்களாவது நல்ல கதையுள்ள திரைப்படங்களை தருகிறார்களா எனப்பார்ப்போம்!

Riyas said...

@boopathy perumal

அன்பின் பூபதி நான் அபுதாபி வாசி

நீங்கள் சொல்லும் இடத்தை நான் அவ்வளவாக கவனிக்கவில்லை..

மலயாளியின் அடிப்படை குணத்தை மாற்றமுடியாதுதான்! அவர்கள் தமிழனையும் தமிழ்பெயர்களையும் கிண்டல் அடிப்பதை பல படங்களில் நானும் பார்த்திருக்கிறேன்.(திலகன் நடித்த சந்தேஷம் படத்தில் கூட அப்பன்,சாமி என முடிவடையும் பெயர்களை கிண்டலடிப்பார்கள்)

ஆனால் இந்தப்படத்தில் தமிழ் நர்சுக்கு உதவுவதாய் காட்டியிருப்பார்கள்.

நீங்கள் இன்னுமொன்றையும் இப்படத்துல் கவனிருத்திருக்கலாம் தமிழ் நர்சுக்கு ஆங்கிலம் தெரியாதது போல் காட்டியிருப்பார்கள்!

Riyas said...

பூபதி.. மோகன்லாலின் 'வரவேற்பு" பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி,

boopathy perumal said...

அன்பின் ரியாஸ் , தமிழ் பேசும் நர்ஸ் கிராமபபுறத்து பெண்ணாக காட்டியிருப்பார்கள். உண்மையும் அதுதான் நமது கிராமத்திலிருந்து வரும் பெண்களின் நிலை சரமாக அங்கிலம் பேச இயலாது என்ற உண்மை நாம் மறுக்க இயலாது. அதுமட்டுமல்ல முதல் காட்சியில் வரும் க்ளிநர் வேலை செய்வபர் (எறும்பு வாயைவிட சின்னது எது என்ற கேள்வி வரும் காட்சியில் ) தமிழனாக காட்டியிருப்பார்கள். இதுவும் உண்மைதான் துபாய், ஷார்ஜா , அஜ்மான் ஆகிய இடங்களில் கிளிநர் வே லை செய்வது (குறிப்பாக மருத்துவமனைகளில்) தென் மாவட்டகளைச்சேர்ந்த தமிழ் மக்கள்தான். இதற்கு காரணம் ETA-GROUP இன் -MBM என்ற நிறுவனமும் அதன் வழித்தோன்றல் களும் தான்.

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...