Traffic -பரபரப்பான மலயாள சினிமா!

இது கடந்த வருட ஆரம்பத்தில் வெளியான விறுவிறுப்பான மலயாள திரில்லர் படம். அண்மையில்தான் பார்க்க முடிந்தது! பார்த்து முடிந்ததும் அட! வித்தியாசமான படமா இருக்கே என ஆச்சர்யப்பட வைத்தது. ஒரு சாதாரன கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கொஞ்சம் கூட சலிப்படையாமல் இறுதிவரை அதே வேகத்தோடு திரைப்படத்தை நகர்த்திய விதம் அருமை.

நான்கு வெவ்வேறு நிகழ்வுகளை ஒரு கதைக்குள் கொண்டு வந்து ஓரே புள்ளியில் இணையுமாறு செய்திருக்கிறார்கள் எந்தவித குழப்பமுமின்றி.

#சித்தார்த்(ரஹ்மான்) மலயாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் குடும்பத்துக்காகவேண்டி சில நிமிடங்களைக்கூட கழிக்க முடியாமல் புதிய பட ரிலீஸ் வேலைகளை கவணித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரம், அவரின் 14 வயது மகள் இருதய கோளாரினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள்.

#டாக்டர் ஏபேல் திருமணமாகி ஒரு வருட பூர்த்தியில் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அந்த கோபத்தில் தன் கார் மூலம் அவளை இடித்து தள்ளிவிட்டு சென்றுவிடுகிறார்.

#ரய்ஹான்(வினித் ஸ்ரீநிவாசன்) நண்பன் ராஜீவுடன்(ஆசிப் அலி) தன் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கக மோட்டார் சைக்கிளில் செல்லும் வேளை சிவப்பு சிகனலை மீறிவந்த காரொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் அடிப்பட்டு கொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றான்.

#ட்ராபிக் கான்ஸ்டபிள் சுதேவன்(ஸ்ரீநிவாசன்) லஞ்சம் வாங்கியதற்காக தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் வேலையில் சேர்வதற்கான் நாள் அன்று.

இதற்கிடையில் தலையில் அடிபட்ட ரய்ஹானின் மூளை செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டதால் இன்னும் சில மணிநேரமே உயிர்பிழைத்திருப்பார் என கொச்சி வைத்தியசாலை டாக்டர்கள் கூறிவிட்டனர். அதேநேரம் பாலக்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் சித்தாத்தின் மகளுக்கு இருதய மாற்று அருவைசிகிசை செய்தாக வேண்டுமெனவும் அதற்கு மாற்று இருதயம்(உயிருள்ள) அவசரமாக இரண்டு மணிநேரத்துக்குள் வேண்டுமெனவும் வைத்தியர்கள் கூறிவிட்டனர்.

கொச்சியில் கோமா நிலையில் உள்ள ஒருவர் பற்றிய தகவல் கிடைத்ததும் 14 வயது உயிருக்கு போராடும் சிறுமிக்கு இன்னும் சில மணிநேரத்தில் உயிர்விட காத்திருக்கும் ரய்ஹானின் இதயத்தை தர முடியுமா எனக்கேட்கின்றனர்.. கோமாநிலையில் இருந்தாலும் தன் மகனின் இதயத்தை உயிரோடு கொடுக்க மறுத்துவிடுகின்றனர் ரய்ஹானின் பெற்றோர். பின்பு நிலைமையை புரிந்துகொண்டு கண்ணீருடன் அனுமதி வழங்குகின்றனர்.

இன்னும் இரண்டு மனிநேரத்தில் 180 km தூரமுள்ள கொச்சியிலிருந்து பாலகாட்டுக்கு இதயத்தை கொண்டு சென்றாக வேண்டும் அந்த நேரம் விமான சேவையும் இல்லை காலநிலை மோசமானதால் ஹெலிகப்டர் சேவையையும் பெற முடியவில்லை. தரைவழிப்பயணமே ஓரே வழி! மிகவும் சனநெரிசலான பள்ளமும் மேடும் கொண்ட கேரள சாலையில் பாடசாலை விடும் நேரம் உள்ளிட்ட உச்சக்கட்ட ட்ராபிக் நேரம். 180கிமி இரண்டு மணிநேரத்தில் கடந்தாக வேண்டும். அசாத்தியமான இலக்குதான் என்றாலும் முயற்சி செய்தால் எதுவும் சாத்தியப்படலாம் என்ற நம்பிக்கையில் தரைவழிப்பயணத்தை திட்டமிடுகின்றனர்.

போலிஸ் கமிஷ்னர் (அனூப் மேனன்) ஆரம்பத்தில் இது பெரும் ரிஷ்க் பாதையில் செல்லும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகலாம் என்று மறுத்தாலும் பின்பு அவரே முன்னின்று இத்திட்டத்தை ஆரம்பிக்கிறார்.. இந்தப்பயணத்தில் வண்டியோட்ட பலரும் மறுத்தநிலையில், லஞ்சம் வாங்கியதன் மூலம் தனக்கு கிடைத்த கெட்ட பெயரை இல்லாமல் செய்ய ட்ராபிக் கான்ஸ்டபிள் ஸ்ரீனிவாசன் இதை பொறுப்பெடுக்கிறார்.. எத்தனை வேகத்தில் சென்றால் இலக்கை சரியான நேரத்தில் அடையலாம் என சகலதும் அறிவுறுத்தப்பட்டு கொச்சியிலிருந்து பாலகாட்டுக்கான இதயத்தை கொண்டு செல்லும் பயணம் ஆரம்பமாகிறது.. பிரதான நகரங்களில் வண்டி வரும் வேளை போலிஸ் உதவியுடன் ஏனைய வாகணங்கள் நிறுத்தப்பட்டே இவர்களின் வண்டிக்கு வழிவிடப்படுகிறது. இதில் ரய்ஹானின் நண்பன் ஆசிப் அலியும் மனைவியை காரின் மூலம் இடித்துவிட்டு எப்படி தப்புவது என்றிருக்கும் டாக்டர் ஏபேலும் இதில் பயணிக்கின்றனர்..


இதன் பிறகுதான் அசுரவேகமெடுக்கிறது படம்.. 180 km ஐ இரண்டு மணிநேரத்தில் அடைந்தார்களா இல்லையா இடையில் ஏற்படும் தடைகள் என்ன சுவாரஷ்யங்கள் என்ன என்பதுதான் மீதிக்கதை. அவர்களின் அந்தப்பயணத்தில் நாமும் சேர்ந்தே பயணிப்பதை போல் உணர்வையும் ஒரு திரில் அணுபவத்தையும் தந்து செல்கிறது இப்படம். இப்படத்தில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்கள் தொழிநுடப குழுவினர்கள் தனது உழைப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். எழுத்து பொபி சஞ்சய் என்ற சகோதரர்கள். இயக்கம் ராஜேஷ் பிள்ளை.. ரய்ஹானின் பெற்றோராக சாய்குமாரும் பாத்திமா பாபுவும், காதலியாக சந்தியா, டாக்டர் ஏபேலின் மனைவியாக ரம்யா நம்பீசனும் இருக்கின்றனர்.

சென்னையில் இதேபோன்றதொரு உண்மை சம்பவம் நடந்ததாக திரைப்படத்திலேயே கூறுகின்றனர். அதுதான் இத்திரைப்படம் உருவாவதற்கான இன்ஸ்பிரேஷனும் கூட! தமிழ் இயக்குனர்கள் கதை கிடைக்காமல் அரைத்ததையே அரைத்துக்கொண்டிருக்க தமிழ்நாட்டில் நடந்த கதையை வைத்து மலயாளிகள் சிறந்ததொரு படத்தை கொடுத்துவிட்டார்கள். இது தமிழிலும் ஹிந்தியிலும் ரீமேக செய்யப்பட இருக்கிறதாம்!

முழுப்படத்தையும் யூடுப்லயே கானலாம்
http://www.youtube.com/watch?v=bqORNFBJy_A

4 comments:

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

Thava said...

அருமையான விமர்சனம்..அழகா எழுதி இருக்கீங்க..மிக்க நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான விமர்சனம்...

முடிவில் இணைப்பிற்கு நன்றி...
tm2

ஹேமா said...

நான் பார்த்து ரசித்த படம் !

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...