வன்முறையை ரசிக்கும் மனசு!

வன்முறைக்கு வன்முறை என்றைக்கும் தீர்வாகாது என்பது பலரின் வாதம் அது உண்மையும் கூட! ஆனாலும் சில நேரங்களில் வன்முறையை ஆதரிக்கவும் அதை ரசிக்கவும் செய்கிறது நம் மனது.

பலம் குறைந்தவனுக்கு எதிராய பலமுள்ளவனின் வன்முறை, தனியே நிர்க்கதியாய் நிராயுதபானியாய் நிற்பவனுக்கெதிராய் ஆயுதம் தரித்த கூட்டத்தின் வன்முறை, பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை என பல வன்முறைகளை கூறலாம். இவற்றை மனசு கடுமையாக வெறுக்கிறது இதேநேரம் இவ்வன்முறையால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் மீண்டெழுந்து அதே வன்முறையை கையிலெடுத்து பழிவாங்க தொடங்குகிறார்கலெனின் அது எவ்வளவு குரூரமாக இருந்த போதிலும் அவற்றை மனசு ரசிக்கிறது.! இரண்டும் வன்முறைதான் அதை எதிர்கொள்ளும் மனநிலைதான் முரன்பட்டுள்ளது.

ஒரு பெண்னின் விருப்பமில்லமல் அவளை புணர்வதென்பது அவளை கொலை செய்வதற்கு சமானமாகும். உயிருடன் வைத்து அவள் உணர்வுகளை எரிக்கும் நிகழ்வாகும். இவ்வாறான கொடூரத்தை செய்த அந்த மிருகத்தை அவளோ அவள் சம்பந்தபட்டவர்களோ பழிவாங்கும் போது அதாவது கொல்லும் போதும் அவற்றையும் மனசு ரசிக்கிறது. இப்படித்தான் 

I Spit on Your Grave (2010 The Last House on the Left (2009)

என்ற இரு திரைப்படங்களிலும் அநீதி செய்தவர்கள் கொடூரமாக கொல்லப்படும் போது அங்கே எந்தவித வெறுப்போ அவர்களுக்கு ஆதரவான மனநிலையோ தோன்றவில்லை மாறாக அவர்கள் கொல்லப்படவே வேண்டும் என்ற வெறி பார்வையாளனாகிய எனக்கு தோன்றியதுடன் அந்த வன்முறைகளை ரசிக்கவும் செய்தது மனது. இப்படங்களை பார்த்த ஏனையவர்களுக்கும் இதே மனநிலை தோன்றியிருக்கலாம்.


அதேநேரம் எல்லா குற்றங்களுக்கும் பழிவாங்கித்தான் ஆகவேண்டும்,தூக்கில் போடத்தான் வேண்டும்,மரண தண்டனை கொடுக்கத்தான் வேண்டுமென்பதில்லை.! இதைவிட பெரிய தண்டனையொன்றிருக்கிறது அதுதான் "மன்னிப்பு"  அதன்பிறகு அந்த சமூகத்தில் நடமாடும் போது அந்த குற்றயுணர்ச்சியே அவனை கொல்லும்! சிறையில் அடைப்பதால் அந்த குற்றயுணர்ச்சி வந்துவிடப்போவதில்லை..! மாறாக பகையுணர்வே அதிகரிக்கும்.

மேலே நான் குறிப்பிட்ட இரு திரைப்படங்களும் ஓரே கதையமைப்பைக் கொண்டது. Spit on Your Grave யில்  ஐந்து பேர் கொண்ட கும்பலால் 
பெண்னொருத்தி வன்புணரப்பட்டு கொலை செய்ய முயற்சிக்கும் போது 
அவர்களிடமிருந்து தப்பித்துச்சென்று மீள அந்தக்கும்பலில் உள்ள எல்லாரையும் 
எவ்வாறு மிக கொடூரமான முறையில் பழிவாங்குகிறாள் என்பதாகும்.

 The Last House on the Left யில் இளம் பெண்னொருத்தியை மூன்று பேர் 

கொண்ட கும்பல்(ஒரு பெண் உட்பட) மிக குரூரமாக வன்புணர்ந்து பின் அவள் தப்பிக்க முயற்சிக்கும் போது சுப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சிக்கிறார்கள். தோள் பட்டையில் அடிப்பட்ட துப்பாக்கி குண்டோடு குற்றுயிரில் வீடு வந்து சேரும் அதே மழையிரவில், எதேர்ச்சையாக அக்கும்பலும் அவள் வீடென்று அறியாமல் அவள் அப்பா அம்மாவிடம் அன்றிரவு தங்குவதற்கு உதவி கேட்டு அவர்கள் கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்கள். தன் மகளின் இந்த நிலைக்கு காரணம் தாங்கள் உதவி செய்து விருந்தோம்பல் செய்து தங்க வைத்திருப்பவர்கள்தான் என அறிந்த அவள் அப்பா,அம்மா இருவரும் அம்மூவரை கொன்று பழிவாங்குவதே கதை.

இரண்டு திரைப்படமும் வன்முறை நிறைந்தது. அந்த வன்முறையை பிரயோகித்தவர்கள் அதற்குமுன் எந்த ஒரு உயிரை கொல்ல வேண்டுமென்றோ இப்படியொரு வன்முறையை பிரயோகிப்போம் என்றோ ஒரு போதும் நினைத்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்களை வன்முறையாளர்களாக மாற்றிவிட்டது.

இந்த இரண்டு படங்களையும் நோக்கும் பார்வையாளர்களும் வன்முறைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அந்த இடத்தில் அந்தக்கும்பலுக்கு ஆதரவாகவோ அல்லது பழிவாங்க வேண்டாம் என நினைக்கவோ போவதில்லை! மாறாக அவர்களுக்கெதிரான வன்முறையில் நாமும் பங்குகொள்கிறோம் நம் ரசனை மூலமாக..!



3 comments:

ஆத்மா said...

அவசியமான விடயத்துடன் கூடிய பதிவு
இரண்டு படங்களையும் பார்க்கவேண்டும் போலுள்ளது......

வன்முறைக்யைத் தூண்டியவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்பட்டவர் எல்லோர் மனதிலும் பரிதாபத்துக்குறியவராகி விடுகிறார்...
அப்போது கொலை கூட நியாயமானதாகத் தான் தோன்றும்

'பரிவை' சே.குமார் said...

உண்மையை சொல்லும் பகிர்வு.
வன்முறைக்கு வன்முறை தீர்வாகும் போது அதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுவதால் ஆதரிக்கத் தோன்றுகிறது.

Tamil Magazine said...

நல்ல விமர்சனம்
பகிர்ந்தமைக்கு நன்றி.

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...