மொழி புரியாமல் ரசித்த பாடல்கள்!

சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின் மீது நம்மை ஈர்க்க செய்யும். அவ்வாறான சில பாடல்களை இங்கே பார்க்கலாம்!

சோனு நிகாம் ஹிந்தியிலுள்ள அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தமிழில் அவர் சில பாடல்களை பாடியிருந்தாலும் அவை எதுவும் பெரிதாய் எடுபடவில்லை! அவர் பாடிய உசிரே உசிரே என்ற ஒரு கண்ணட பாடல் மொழி புரியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சோக மெலடி.. இதன் ஒரிஜினல் வடிவத்தை பாடியவர் ராஜேஷ்.


பாடகர் கார்த்திக் ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் பல மொழிகளில் பாடி மிகப்பிரபலமடைந்தவர். அவர் பாடிய ஒரு தெலுங்கு பாடல் இதுவும் ஒரு சோக மெலடிதான் கார்த்திக்கின் இனிமையான குரலில் பாடலை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்!
முன்பு கார்த்திக் பாடிய பாடலின் ஒரிஜினல் இது. இதுவும் சோனு நிகாம் பாடிய கண்ணட பாடல் ஒன்று. பாடலை கேட்க கேட்க மனதை கொள்ளை கொள்கிறது.
இறுதியாக ஒரு மலயாளப்பாடல் சட்டக்காரி படத்தில் இடம்பெற்றது. இதனைப்பாடியவர் முதல் பாடலாகியாகிய உசிரே உசிரே யின் ஒரிஜினல் வடிவத்தை பாடிய ராஜேஷ். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் தமிழிலும் ஒரு சில (ராஜா,என்னவளே) பாடல்களை பாடியிருக்கிறார் அதன் பிறகு கானவில்லை!

3 comments:

ஜேகே said...

நல்ல தெரிவுகள் .. ராஜேஷ் மேகமாய் வந்து போகிறேன் என்ற துள்ளாத மனமும் துள்ளும் பாடலும் பாடியவர். கொஞ்சம் எஸ்பிபி சாயல் இருக்கும் .. நன்றி பகிர்ந்தமைக்கு.

”தளிர் சுரேஷ்” said...

இசைக்கு மொழி தேவையில்லை! என்பதை உணர்த்தும் பதிவு! பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

கார்த்திக்கின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல பாடல் தெரிவுகள்

அப்படியே இந்த கவிதையையும் வாசித்து விடுங்க
"நல்லவனில்லை"

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...