மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்! ரஹ்மான் இன்றும் அன்றும்!


ரஹ்மான் இன்று....!

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே...

குளத்தாங்கரையிலே குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே
முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நா உன்னை அணைக்க


இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும் உடலும் இறுக்க
ஒத்தப் போர்வையில இருவரும் இறுக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே


எல்லா இசையுமே மனதை வருடுவதில்லை எல்லா பாடல்களுமே நம் மனதுக்குள் நுழைந்து விடுவதில்லை அது ரஹ்மானாக இருந்தாலும் சரி ராஜாவாக இருந்தாலும் சரி! ஆனால் சில பாடல்கள் கேட்டவுடன் மனதை கவ்விப்பிடித்துக்கொன்று இறங்க மறுக்கிறது. தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்க மனம் விரும்புகிறது. பாடல் முடிந்ததும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதா என ஏக்கம் தருகிறது. இவ்வகையான பாடல்தான் கடல் திரைப்பட பாடலான மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்.

இங்கே ரஹ்மானை மட்டுமல்லாது வைரமுத்துவையும் அவருக்கு நிகராக பாராட்ட வேண்டியிருக்கிறது. இம்முறை நாட்டுப்புற சாயலில் பாடல் வரிகள் இதமாக காதுகளை தொடுகிறது. இவ்வாறான வரிகளை எங்கே பிடிக்கிறார் என்றே தெரியவில்லை."மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்" என்ன ஒரு ஆரம்பம்.



 ரஹ்மான் அன்று....!

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க..
உசுர கடந்து மனசும் கொதிக்க..

 தாஜ்மஹால் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் இசைப்புயல் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.. ஆனாலும் துரதிஷ்டம் அந்தப்படத்தைப்போல இந்தப்பாடலும் பிரபல்யமடையவில்லை என்பது என் எண்ணம். இந்தப்பாடலை நன்கு அவதானித்து கேட்டால். பாடல் ஆரம்பித்தது முதல் இறுதிவரை பல்வேறு இசை ஏற்றத்தாழ்வுகளை அவதானிக்கலாம். இந்த இடத்தில் இந்த இசை வருகிறது என்று விளக்கமாகச்சொல்ல எனக்கு இசை பற்றிய அறிவில்லை என்றாலும் இந்த பாடலில் ரஹமானின் இசை கோர்ப்புகளையும் நுணுக்கங்களையும் கேட்டு வியந்திருக்கிறேன்.. பாடல் மெட்டுக்கேற்ப வைரமுத்துவின் வரிகளும் இசையோடு போட்டி போடும்.. நாயகன் நாயகியை பார்க்க கூரையில் ஏறி வரும் போது நாயகி இப்படி பாடுகிறாள்

வூட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ

 MG ஸ்ரீகுமார் மற்றும் சித்ரா மிக அழகாக பாடியிருப்பார்கள் பாடலின் இறுதியில் மேற்கித்திய இசையோடு வரும் ஸ்ரீனிவாசின் ஹம்மிங்கும் பாடலை மெருகேற்றுகிறது.. இந்தப்பாடலும் என்னைக்கவர்ந்த பாடல்களில்
ஒன்று

..


1 comment:

தனிமரம் said...

நலமா ரியாஸ் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பாடல் அருமை ஆனால் இதை படத்தில் எப்படி காட்சிப்படுத்துவார்களோ என்ற தயக்கம் உண்டு சில நல்ல பாடல்கள் சொத்தப்பல் காட்சிகளுடன் வந்துவிடுகின்றது.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2