உலகில் இதுவரை உருவான எந்தவொரு போராட்ட,கிளர்ச்சி,தீவிரவாத குழுவாயினும் அவர்களின் உருவாக்கத்துக்கு பின்னால் ஒரு கதை,பின்புலம்,வலுவான காரணம், கொஞ்சமாவது நியாயம் நிச்சயம் இருக்கவே செய்யும். அவர்கள் தீவிரவாதிகள், போராளிகள் என்ற எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சரியே! இவர்களைப்பற்றி கதைக்கும் போதோ, இவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தல் காட்சிப்படுத்தல் போன்ற வேலைகளை செய்யும் போது அவர்களின் பக்கமிருக்கும் கொஞ்ச நியாயத்தையும் முன்வைப்பதே நாகரீக அலகு! அவர்கள் எவ்வளவுதான் அயோக்கியர்களாக இருந்தாலும்!
இதுபோலவே விஷ்வரூபம் திரைப்படத்தில் அல்கெய்தா-தலிபான்-ஆப்கான்யுத்தம்-பொதுமக்கள்-அமெரிக்கா ஆக்கிரமிப்பு-சவூதி அரசியல் என்ற பெரிய வட்டத்தை மிகச்சிரிதாக சுருக்கிய கமல்! முழுக்க முழுக்க அமெரிக்கா சார்பாகவும், ஆப்கானியர்களை போர்வெறி பிடித்தவர்களாகவும், ஏனோ தலிபான்கள் பொழுது போக்கிற்காக தீவிரவாதம் செய்வதைப்போல் காட்சிபடுத்தியிருந்ததைக்கண்டு பல இஸ்லாமியர்கள் தங்களின் வெறுப்பை வெளிக்காட்டினார்கள்..! இதை சரிவர புரிந்துகொள்ளாத மாற்றுமத சகோதரர்களில் சிலர், நடப்பதைத்தானே காட்டுகிறார்! ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்! அப்படியென்றால் இவர்கள் அல்கெய்தா தாலிபான்களை ஆதரிக்கிறார்களா என கேள்விகள் தொடுத்தார்கள்.. அல்கெய்தாவின் உலகம் தழுவிய தீவிரவாதம்,தாலிபான்களின் அடக்குமுறை, பெண்கள் மீதான அவர்கள் கட்டுப்பாடுகள் போன்றவை விமர்சிக்கப்படவேண்டியவைதான். அதற்காக கண்னை மூடிக்கொண்டு அவர்கள் மட்டும்தான் கொடூரமானவர்கள் என தீர்ப்பெழுதிட முடியாது. அவர்கள் பக்க நியாயங்களும் விமர்சிக்கப்படவேண்டும்! கொலைக்குற்றவாளிக்கு கூட அவன்பக்க நியாயத்தை சொல்வதற்கு உரிமை இருக்கிறது என நினைக்கிறேன்.
இப்படியான நேரத்திலேயே வீரப்பனின் கதையை தழுவியதாய் வனயுத்தம் என்ற திரைப்படம் வெளியாகிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசுக்கு சார்பாகவும் வீரப்பன் கொலைகாரன், கொடுங்கோலன் போலவும். அவர் பக்கமுள்ள நியாயங்களோ அவர் செய்த கொலைகளுக்கான காரணங்களோ விளக்கப்படவில்லையென்றும், மலைவாழ் பெண்கள் மீதான வன்புணர்வு மற்றும் அம்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜக தாக்குதல்களுக்கு காரணமான தமிழ்நாட்டு/கர்நாடகா போலிசாரை உத்தமர்களாக காட்டியிருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது உண்மைத்தமிழன் அவர்களின் விமர்சனம் அதிலிருந்து சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன். இதிலிருந்து சிலரின் இரட்டை முகமும் இஸ்லாமியர்களின் விஷ்வரூப எதிர்ப்பின் சில நியாயங்களும் புரியலாம்! புரிந்துகொல்ளும் மனநிலையில் இருப்பவர்களுக்கு. சிவப்பு நிறத்தில் உள்ளவை உண்மைத்தமிழன் எழுத்துக்கள்!
வாழ்க்கைக் கதையைச் சொல்ல வந்தவர்கள், எதனால் வீரப்பன் வேட்டையை விரும்பினான்.. எதனால் அரசு அதிகாரிகளை அவமதித்தான்.. வெறுத்தான் என்பதையெல்லாம் துளிகூட சொல்லாமல், அவர் வசதிக்காக வீரப்பனை கொடுங்கோலன் என்றும், அவனை அழிக்க வந்த போலீஸாரை ஏதோ யோக்கிய புருஷர்களாகவும் காட்டியிருக்கும் இப்படத்தை என்னால் எந்தக் கோணத்திலும் அணுக முடியவில்லை..!
அதேதானே நாங்களும் சொன்னோம் தாலிபான்களையும் அல்கெய்தாவினரையும் அவர்கள் பக்க நியாயங்களை காட்டாமல் அயோக்கியர்களாக காட்டி அமெரிக்காவை யோக்கிய புருஷர்களாக காட்டியிருக்கும் அப்படத்தையும் எங்களால் எந்த கோணத்திலும் அணுக முடியாது!
நான் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் நடந்த கதையை சொல்லும்போது 90 சதவிகிதமாவது உண்மையிருக்க வேண்டாமா..? வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை பிடித்து மாதேஸ்வரன் மலைப்பகுதியில் ஒர்க்ஷாப் என்னும் கொட்டகையில் அடைத்து வைத்து.. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் போலவும், சிங்களப் படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்ததையும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இரு மாநில கூட்டு போலீஸ் படைகள் செய்திருப்பதாக ரெங்கநாத்மிஸ்ரா கமிஷன், சதாசிவம் கமிஷன் இரண்டுமே சொல்லியிருந்தும், இதனை படத்தில் குறிப்பிடவே இல்லை..! காட்டவும் இல்லை..!
நாங்களும் தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை ஆனால் நடந்த ஒன்றை நடக்கின்ற ஒன்றை சொல்லும் போது கொஞ்சமாவது நேர்மை வேண்டாமா? பின்லேடன் என்ற தனிமனிதனையும் அவன் சகாக்களையும் பிடிப்பதற்காக ஒரு தேசத்தையே சவக்காடாகவும் யுத்த பூமியாகவும் மாற்றிய அமெரிக்க ரானுவத்தின் அட்டூழியங்களை கொஞ்சமாவது காட்ட வேண்டாமா
இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு அவர்கள் மீது தடா வழக்கிலும் கைது செய்து சிறையிலும் அடைத்தார்கள் நமது மாண்புமிகு அரசியல், அதிகார வர்க்கம்.. சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தடா கைதிகளாக்கப்பட்டு பின்பு இவர்களில் அதிகம்பேர் எட்டாண்டுகள் கழித்தே விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்..!
அவர்களாவது எட்டாண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டனர்.. ஆனால் இன்னும் யுத்தக்கைதிகளாக குவாந்த நாமோ சிறையில் இருட்டறைகளில் அடைபட்டுக்கிடக்கும் ஆப்கான் மக்களின் நிலை என்ன இதற்கு அமெரிக்க அரசிடம் உள்ள பதில்தான் என்ன?
ஒரு சினிமாவை சினிமாவாக பார்க்க இதுவொன்றும் சாதா சினிமா இல்லை.. ஸ்பெஷல்.. இந்தியாவில் யாருமே செய்ய முடியாத ஒரு ஆவணப் படத்தை தான் உருவாக்கியிருப்பதாக இயக்குநர் ரமேஷ் மீடியாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது..!
சபாஷ்! சினிமாவ சினிமாவத்தான் பார்க்கனும்னு பலர் பேர் சொன்னாக.. இதையும் சினிமாவா பார்த்துட்டு போகவேண்டியதுதானே! ஏன் முடியாது? காரணம் இது சாதா சினிமா அல்ல! இதே கருமத்தத்தான் நாங்களும் சொன்னோம் அப்போவெல்லாம் எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதேனோ.. அதுவும் சாதாரன சினிமா அல்ல ஒரு தேசத்து மக்களின் போராட்டம் சம்பந்தமானது. அங்கு நடந்ததைதானே சொல்கிறோம் எனும் கதை வேறு அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது!
அப்பாவி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய இரு மாநில கூட்டு அதிரடிப் படையினருடன் கூடவே இப்போது இந்த இயக்குநர் ரமேஷும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்
இதை இப்படியும் சொல்லலாம்!!
ஆப்கான் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய அமெரிக்க நேட்டோ கூட்டு அதிரடிப்படையினருடன் கூடவே இப்போது இயக்குனர் கமலஹாசனும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்!
39 comments:
இதைதான் தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி என்பதோ ??????
செய்யது
துபாய்
தாலிபான்களையும் அல்கெய்தாவினரையும் அவர்கள் பக்க நியாயங்களை காட்டாமல் //
It is so sad that you stoop this low to defend al-Qaeda just because you follow the same religion as of those terrorists...
A terrorist is a terrorist irrespective of the race,religion or creed...
I wrote this just for people like you...
http://reverienreality.blogspot.com/2013/01/blog-post_28.html
//A terrorist is a terrorist irrespective of the race,religion or creed...//
its 100% true , but same time try 2 understand the double standard of so called neutralist who supported the vishwaroopam and biased over the revolt against the film.
//because you follow the same religion as of those terrorists...//
if its in this way taken, then y cant i take it this way that its filmed on a religion which i not believe, so let them suffer.
Is this the right attitude.....
ரியாஸ்!! நன்றி.
சூப்பர்....
கேள்விகள் நறுக்.....
இங்க வந்து அது அப்படி அல்ல, இப்படி அல்லன்னு கமெண்ட்ல சொல்லிட்டு, வீட்ல மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பார்கள்... நான் மனசாட்சி இருக்கும் நேர்மையாளர்களை மட்டும் சொன்னேன்....
தாலிபன்களிடம் சில குறைகள் இருக்கின்றன.. கட்டாயம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்...
அதற்காக நான் அவர்களை வெறுக்க மாட்டேன்.... இரண்டு புத்தர் சிலை, இரண்டு கட்டிடங்களை இடித்தவன் உலக தீவிரவாதி என்றால்... வெபன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன் இருக்குன்னு பொய் சொல்லி பெட்ரோல் கொள்ளை அடிக்க வந்த திருடன், பாக்தாத் நகர் மற்றும் ஈராக்கை துவம்சம் செய்தவனை என்னவென்பது... வெட்கக் கேடு...
ஐ சப்போர்ட் தாலிபன்... இதில் நான் பெருமிதம் கொள்கிறேன்...
தாலிபன்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்...
இவர்களின் ஏதாவது அல்லது இவர்களின் தலைமுறையின் போராட்டத்தை இந்த உலகம் இதே பாணியில் சொல்லும்... உலகம் ரவுண்டுப்பா... உங்கள் டேர்ன் வந்தே தீரும்...
இந்தா பாருங்க.. படத்தில் இரு மாதத்துக்குள் வந்திடுச்சு...அவ்வ்வ்வ்வ்வ்வ்
நேட்டோ அமெரிக்கா செய்தது என்ன தலிபான்கள் செய்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்... இதில் கமலை குறை சொல்ல என்ன இருக்கிறது.. அவர் ஏற்கனவே சொன்ன ஒரு பேட்டியில் ஒரு படைப்பாளி என்பவன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி என்றார்... அவருக்குத் தெரிந்த செய்திகளின் அடிப்படையில் வெளிவந்துள்ள படம்தான் விசுவரூபம்.. ஆனால் நீங்கள் வாதிடலாம் அவருக்கு மட்டுமல்ல உலகிற்கே செய்திகள் சொல்வது AP PTI மற்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கட்டுரைகள்தான்.. அவைதான் கமலுக்கு மூலதனமாக கதை கருக்கள்.. நீங்கள் கமலை குறை சொல்வதைக் காட்டிலும் மேற்படி செய்திகள் சொல்லும் நிறுவனத்தைதான் விமர்சிக்க வேண்டும்,,, இப்படி சிந்திக்காதே என்பதும் தாலிபானிச கொள்கைதான்
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு. சரியான அணுகுமுறை....
அருமையான பதிவு... நன்றி
///நீங்கள் வாதிடலாம் அவருக்கு மட்டுமல்ல உலகிற்கே செய்திகள் சொல்வது AP PTI மற்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கட்டுரைகள்தான்.. அவைதான் கமலுக்கு மூலதனமாக கதை கருக்கள்..////
///நேட்டோ அமெரிக்கா செய்தது என்ன தலிபான்கள் செய்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்...///
கமல் அவர்களுக்கு மட்டும் தெரியாதது ஏன் நண்பா?
சாமான்ய முஸ்லீமின் எண்ணங்களை,சந்தேகங்களை,உணர்வுகளை அற்புதமாக,ஆணித்தரமாக கேள்வியாக கேட்டு இருப்பது பாராட்டுதலுக்குரியது...நியாயம் என்ற உண்மையை கேட்டாக்கா!!!நீயும் அவனா!!? என்று கேட்பது எந்த வகையில் நியாயம் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்...Hameeddvk
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மனதை சுடும் கேள்விகள்!
மன சாட்சியுள்ளவர்கள் பதில் கூறட்டும்!
ஆர்வாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் நச் பதிவு..
வாழ்த்துக்கள் சகோ...
realy nice post bro!
keep it up!
சபாஷ், சகோ.ரியாஸ்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒவ்வொரு வரியிலும் இரட்டை முகத்தை சாட்டையால் விளாசு விளாசு என்று சொல்வாள் கொண்டு விளாசி உள்ளீர்கள்.
வரியா வரியாக எத்தனை முறை படித்தாலும், போலித்தன்மை மீது தாங்கள் அதகளம் ஆடியிருப்பது அப்பட்டமாக படிப்பவருக்கு புரியும்.
ஆனாலும், புரியாதது போலவே நடிக்கும் அவர்களின் போலி நடுநிலை மனது கண்டு தான் வருத்தம் ஏற்படுத்துகிறது.
சகோ.ரியாஸ். மனசாட்சி என்று ஒன்று இருந்தால்... அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ளட்டும்.
ஆர்.எஸ்.எஸ்.க்கும், வீரப்பனுக்கும், விடுதலைப்புலிக்கும், மாவோயிஸ்டு- நக்சலைட்டுக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இருக்கும்போது... தாலிபானுக்கும் அல்கொய்தாவுக்கும் ஆதரவு தெரிவிப்பதில் ஒன்னும் தப்பில்லையே..!
ஐ ஆல்சோ சப்போர்ட் பிரேவ் பிரதர் சிராஜ்..!
ஒருவேளை இவர்களுக்கு வரலாறு தெரியுமா..?
அல்லது,
தெரியாதது போலவே நடிக்கிறார்களா..?
எதுக்கும் ஒருமுறை சுருக்கமா சொல்லி வைப்போம்..!
ரஷ்யாவுக்கு எதிராக & ரஷ்ய ஆதரவு ஆப்கானிய அரசுக்கு எதிராக, அமேரிக்கா நவீன கொலைவெறி ஆயுதம் தந்து ட்ரைனிங்கும் தந்து (இந்திய ரா உளவுத்துறைதான் காஷிமிரிக்கும் தமிழச்சிக்கும் பிறந்த ஒரு முஸ்லிம் மூலம் அல்கொய்தாவுக்கு ட்ரைனிங் தந்ததாக அப்பட்டமாக இம்மாதம் உலகப்படம்(?) எடுத்து பொய் புளுகியவன் நாக்கு அழுகட்டுமாக...) உருவாக்கிய ஆப்கானிய ஆயுதப்போராளிக்குழுதான் தாலிபான் & அல்கொய்தா. பின்னாளில், அமெரிக்காவின் சொல்லு பேச்சு கேட்காமல், தனியாக தன் இஷ்டப்படி ஆட்சி செய்யும் போது... அவர்களின் பெயர் தீவிரவாதிகள். அவர்களின் செயல் பயங்கரவாதம்..!
இனி,
எவன் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.
அமெரிக்காவா, தாலிபானா....
அல்லது....
அமெரிக்க தாக்குதலா, அல்கொய்தா தாக்குதலா...
என்று எவனாவது என்னிடம் கேட்டால்,
நான் தயங்காமல் சொல்வேன்...
ஆமாண்டா... தாலிபான் தான் அமெரிக்காவை விட நல்லவன்.
அமெரிக்காதான் அல்கொய்தாவை விட அக்கிரமக்காரன்..!
அருமையான பதிவு... நன்றி
Dear my friend,
No one protests against the release of VanaYutham. Just he was reviewing the film and conveys his criticism of the movie. You could have done the same by reviewing Visharoopam and blasted it in your review without protesting against release of it.
Hope you and your friends understands the difference and the true meaning of freedom of speech
Thanks
Sakthi
@ரெவெரி
எவ்வளவுதான் விளக்கம் கொடுத்து எழுதினாலும், அவர்கள் தீவிரவாதிகள் அவர்களை பற்றி படம் எடுத்தால் உங்களுக்கு ஏன் வலிக்கு என்பது போலவே இருக்கு உங்கள் கேள்விகள்? நாங்களும் அவர்களை புனிதர்கள் என்று சொல்லவேயில்லையே..
உங்கள் பார்வையில் தாலிபான் கள் அயோக்கியர்கள் என்றால் எங்கள் பார்வையில் அமெரிக்க ரானுவமும் அரசும் அயோக்கியர்கள்தான்!!
@Anonymous
இங்கே நான் விவாதிப்பது விஷ்வரூபத்தில் கமல் சொல்ல வரும் விடயங்களை மட்டும்தான்..
அப்படத்தை தடை பண்ணனுமா வேண்டாமா என்பது பற்றி அல்ல!!
மற்றயது வனயுத்தம் படத்தில் நியாயம் தேடுபவர்கள் அந்த நியாயத்தை கொஞ்சமாவது விஷ்வரூபத்துக்கும் காட்டியிருக்கலாம் என்ற ஆதங்கம்தான்..
அட, இந்த அனானிமஸ் Sakthi சகோதானே, காஷ்மீர் போராளிகளின் நியாயத்தை 'ரோஜா'படத்தில் காட்டாததுக்கு, மணிரத்தனத்துக்கு எதிரா... blasting in review பண்ணியது..?
நீங்க எல்லாம்...(அட்லீஸ்ட், இதுமாதிரி அனானிமஸ் போலவாவாது) அப்போவே குரல் கொடுத்து இருந்திருந்தால்... இப்போ இந்த பதிவுக்கு வேலையே இருந்திருக்காது.
அப்புறம் நீங்க பதிவுக்கு சம்பந்தம் இல்லாம சொல்லுகிற தடை கோரலுக்கும் வேலை இருந்திருக்காது.
உங்களுக்கு இன்னொரு சேதி தெரியுமா..? இந்த பட ரிலீசுக்கு எதிரா வீரப்பன் மனைவி வழக்கு தொடந்து protest பண்ணி இருந்தார்..!
சிட்டிசன்,
//உங்களுக்கு இன்னொரு சேதி தெரியுமா..? இந்த பட ரிலீசுக்கு எதிரா வீரப்பன் மனைவி வழக்கு தொடந்து protest பண்ணி இருந்தார்..!//
இப்படியா உளறிமாட்டிக்கிறது?
வீரப்பன் மனைவிக்கு உரிமை இருக்கு? தடைக்கேட்கலாம்?
அப்புறம் தலிபான்களை பற்றி பேசக்கூடாதுனு தடைக்கேட்க அப்படி ஏதேனும் உரிமை இருக்கா?
விஷ்வரூபம் படத்தில் உண்மைகளை மறைத்தே எடுத்துள்ளார்கள்,ஆனால் தடை என சொல்ல தேவையில்லை, படம் பார்த்துவிட்டு குப்பைனு தூக்கிப்போடப்போறாங்க, உண்மையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் இப்பொழுது பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பார்த்திருப்பார்கள் என்பதை புரிந்துக்கொள்ள பெரிசா அறிவெல்லாம் தேவையில்லை, எனவே புரியும் என நினைக்கிறேன்.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் , தலிபான்கள் பற்றியோ, அமெரிக்க அரசியல் பற்றியோ லோகநாயகர் உண்மையை சொல்லவில்லை என்று தான் என்ப்பதிவில் எழுதியிருக்கிறேன்.
நான் சொல்லவந்தது ,தடை என எப்பொழுதும் கேட்க வேண்டாம், மக்களே தீர்மானிப்பார்கள் என்பதே.
தடை,எதிர்ப்பு என்பதெல்லாம் விளம்பரங்களாகத்தான் இத்தனைக்காலமாக அமைந்துள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
அருமையான பதிவு... நன்றி
தங்களது விமர்சனத்திற்கு நன்றிகள் நண்பரே..!
வனயுத்தம், வீரப்பனின் உண்மைக் கதை.. அவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எங்கெங்கு நடந்ததோ, அதே இடத்திலேயே போய் ஷூட்டிங் செய்துள்ளோம்.. பல ஆண்டுகள் இது பற்றி படித்து, ரிசர்ச் செய்துதான் இதனை உருவாக்கியிருக்கிறோம் என்று இதன் இயக்குநர் ரமேஷ் சொன்னதால்தான் வீரப்பனின் உண்மைக் கதையோடு இதனை ஒப்படி வேண்டியிருக்கிறது..!
விஸ்வரூபம் ஆப்கானிஸ்தான், தலிபான்கள், முல்லா ஓமர், அமெரிக்கா சம்பந்தப்பட்ட உண்மைக் கதை என்று கமல்ஹாசன் சொல்லியிருந்தால் அப்போது வேறு மாதிரியாகத்தான் நான் விமர்சனம் எழுதியிருப்பேன்..
பெயர்களை மட்டும் உண்மையாக வைத்துக் கொண்டு கற்பனைக் கதையாக எடுத்திருப்பதாக சொல்பவரிடம் போய் உண்மைக் கதைகளை எடுத்துக் கூறுவதால் என்ன பயன்..? யாருக்குப் புண்ணியம்..?
Truetamilanji,
I like ur reply.
But none of u, who supported the film, didn't realise the facts abt muslims, thats pity.
அப்போ ஆப்கானிஸ்தான் தாலிபான்களும், அப்பாவி வனப்பகுதி தமிழர்களும் ஒன்று என்கிறீர்கள்!
என்னக் கொடுமை சரவணன்!
அஸ்ஸலாம் அலைக்கும் ....சகோ ரியாஸ்
நல்ல ஆக்கம் ....வாழ்த்துக்கள்
@உண்மைத்தமிழன்.
வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சார்!
உண்மைக்கதை என கமல் வெளிப்படையாக சொல்லவில்லையென்றாலும்,பார்ப்பவர்களில் அதிகளவானோர் அங்கு நடந்ததைதானே காட்டியிருக்கிறார் என்கிறார்கள் அப்போது நிறைய பேர் மனதில் அது உண்மைக்கதையாக பதிந்து விடுகிறதே! சினிமா எவ்வளவு சக்திமிக்க ஊடகம் என்பதும் அது நம் மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதும் நாம் அறிந்ததுதானே!
@நல்லதந்தி,
வனப்பகுதி தமிழர்களோடு தாலிபான் களை ஒப்பிட முடியவில்லையென்றாலும், இவர்கள் பெண்கள் குழந்தைகள் அனுபவித்த துண்பங்களை விட அதிகமாக அப்பெண்களும் குழந்தைகளும் அனுபவித்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே!! அதை உங்களால் மறுக்க முடியாதே!!
//உண்மைக்கதை என கமல் வெளிப்படையாக சொல்லவில்லையென்றாலும்//
@ரியாஸ்!
விஸ்வரூபம் படத்தின் ஆரம்பத்தில் “இக்கதை அனைத்தும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது” என்றே டைட்டில் போடப்பட்டதாகவும், இஸ்லாமியர்களின் எதிர்ப்பினால் செய்த மாற்றங்களில் ஒன்றாக, அந்த டைட்டிலை “இக்கதை முழுதும் கற்பனையே” என்று மாற்றப்பட்டதாகவும் அறிகிறேன்.
நல்ல இடுகை, ரியாஸ்!
அமெரிக்காவின் அநியாயங்களையும், இரட்டை வேடத்தையும், உலகளவிய அத்துமீறல்களையும் மறுப்பதற்கில்லை. கமல் ஹாசன் சுயநலத்திற்காக அமெரிக்க படையினரை நல்லவர்களாக சித்தரித்திப்பது கண்டிக்கப் படவேண்டியதே. எல்லாம் அங்கே காலூன்றி சம்பாதிப்பதற்காகத்தான்!
முஹம்மத் ஆஷிக், ஹுஸைனம்மா,
அடிப்படை மனித உரிமைகளையும் (திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்க கூடிய) பெண் உரிமைகளையும் மதிக்காத தலிபான் அமைப்புக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஹுஸைனம்மா ஆப்கானிஸ்தானில் பிறந்திருந்தால் அவருக்கு இப்போது கிடைத்திருக்கிற கல்வி அறிவும் இணையத்தில் ப்ளாக் எழுதும் சுதந்திரமும் இருந்திருக்குமா?
இவர்களின் போராட்டத்தை பாலஸ்தீனப் போராட்டைத்தோடோ காஷ்மீரப் போராட்டத்தோடோ ஒப்பிட முடியுமா?
சகோ.வாட்சன் யுவன்,
//அமெரிக்காவின் அநியாயங்களையும், இரட்டை வேடத்தையும், உலகளவிய அத்துமீறல்களையும் மறுப்பதற்கில்லை. கமல் ஹாசன் சுயநலத்திற்காக அமெரிக்க படையினரை நல்லவர்களாக சித்தரித்திப்பது கண்டிக்கப் படவேண்டியதே. எல்லாம் அங்கே காலூன்றி சம்பாதிப்பதற்காகத்தான்!//
மெய்ப்பொருள் காணுவோரை நான் காண்பது மிகவும் அரிது. அதனினும் அரிது... அரிதினும் அரிதான இப்பின்னூட்டம்..! நன்றிகள் பன்மடங்கு..!
அப்புறம் என்னிடம் நீங்கள் கவனிக்க தவறிய ஒரு முக்கிய வாக்கியம்...
அமெரிக்காவுடன்தான் நான் தாலிபானை ஒப்பிட்டு, இரண்டில் தாலிபானை ஆதரித்துள்ளேன்.
அவர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்களின் கல்வி பற்றி எல்லாம் நாம் என்ன பேச முடியும்..?
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட தாலிபான் குழுக்கள் ஆப்கானில் தனித்தனியே இயங்கி வரும் சூழலில்... பொதுவாக தாலிபான் குறித்து கூறப்படும் அமெரிக்க நேட்டோ ஊடக தகவல்களை எல்லாம் நான் நம்புவதற்கில்லை..!
//அடிப்படை மனித உரிமைகளையும் (திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்க கூடிய) பெண் உரிமைகளையும் மதிக்காத தலிபான் அமைப்புக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? //
நான் தலிபானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தலிபான் அமைப்பு தோன்றக் காரணங்கள் என்ன என்பதையும் படத்தில் சொல்லியிருக்கலாம் என்று இந்தப் பதிவில் சொல்லப்பட்ட கருத்தைத்தான் ஆதரிக்கிறேன்.
இதைப் பாருங்கள்:
Malalai Joya is Afghanistan’s most outspoken activist and has been called “the bravest and most famous woman in Afghanistan.” Joya, now 32, was the youngest ever woman elected to the Afghan Parliament in 2005 and is an outspoken critic of the Karzai government and US/NATO occupation. According to Joya, “the truth about Afghanistan has been hidden behind a smoke screen of words and images carefully crafted by the United States and its NATO allies and repeated without question by the Western media.”
உண்மையிலேயே துணிவும் அறிவுமுள்ள பெண் மலலாய்! இவரது பேச்சுக்களை கனடாவுக்கு வந்திருந்தபோது நேரில் கேட்டிருக்கிறேன். அமெரிக்காவையும் அவர்களின் கைப்பொம்மை கர்ஸாயையும் பற்றி மட்டுமல்ல தலிபான்களைப் பற்றியும் பயமின்றி கருத்துக் கூறுபவர். உதாரணத்துக்கு அவர் பேச்சிலிருந்து (2005இல்): "The people of Afghanistan have recently escaped the Taliban cage but still they are trapped in the cage of those who are called warlords". இவர் பெயர் இன்னொரு மலலாவையும் நினைவு படுத்துகிறது: Malala Yousafzaiயை!
Post a Comment