பாதையில்லாமல் ஓடுகிறேன்
ஊமைக்காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக...!
இவ்வளவுதான் இந்த பாடலின் வரிகள். ஆனால் இசையையும் எஸ்.பி.பியின் குரலையும் (ஹம்மிங்க்,ஆலாபனைகள்) வைத்து மீதியை நிரப்பி ஒரு முழுமையான அட்டகாசமான அழகான பாடலாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த பியார்லால்.
இந்தப்பாடல் என்னைக்கவர்ந்த பாடல்களில் ஒன்று. எஸ்.பி.பி தனது குரலால் முழுப்பாடலையும் மெருகேற்றும் விதம் அழகு அதற்கேற்ப அழகாய் பின்னப்பட்டிருக்கிறது பின்னனி இசை. அவரின் குரலில்தான் எத்தனை நளினங்கள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.வேறு எங்கும் கவனத்தை திருப்பாமல் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் உங்களையும் கவரலாம். நீங்களும் காற்று வெளிகளில் பறந்து திரியலாம் சில நிமிடங்களுக்கு.
5 comments:
அருமையான கருத்தாழம் மிக்க
உணர்வு பூர்வமான
எனக்கும் அதிகம் பிடித்த கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 1
என்று கேட்டாலும் அலுக்காத பாடல்... நன்றி... வாழ்த்துக்கள்... tm2
எஸ் .பி.பாலசுப்ரமணியம் பாடல்கள் என்றால் விடிய விடியக் கேட்க்கலாம் அத்தனை இதமான குரலோசை அவர்களது !!இனியதொரு சிறப்பான பாடலைத்தான் தேர்வு செய்துள்ளீர்கள்
சகோ .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
மிகவும் ரசிக்கக்கூடிய பாடலும் கூட ரியாஸ்!
Post a Comment