இப்போதெல்லாம் தமிழ்சினிமாவில் மிக அரிதாய்த்தான் சுவாரஷ்யமான வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கான முடிகிறது! இப்பொழுதெல்லாம் அதீதமாய் காதலை போற்றும் படங்களையோ, பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு 100 ரவுடிகளை தனியாளாய் போட்டுத்தாக்கும் ஹீரோயிச சண்டை படங்களையோ கானும் போது ச்சும்மா காமெடி பண்ணாம போங்க பாஸ் என்றே சொல்லத்தோன்றுகிறது அவ்வளவுக்கு அவ்வகையான சினிமாக்களை திரும்ப திரும்ப பார்த்து அலுத்துபோய்விட்டது.
அண்மையில் வெளியான 555 என்ற படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவும் ஒரு சாதாரண காதல் + சண்டை படம்தான்! ஆனாலும் அதை சொன்ன விதத்தில்தான் இயக்குனர் சசி ஜெயித்திருக்க்கிறார். ஆனால் இப்படத்தைப்பற்றி நிறையபேர் அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இதே கதையை ஒரு பிரபல இயக்குனர் இயக்கியிருந்தால் இதைவிட நன்றாக பேசப்பட்டிருக்குமோ என்னவோ.! என்னைப்பொருத்தவரையில் இந்தப்படம் எனக்குப்பிடித்திருந்தது ஆரம்பம் முதல் இறுதிவரை நல்ல சுவாரஷ்யமும் த்ரிலும் இருந்தது ஆங்காங்கே சில அபத்தங்களும் நம்ப முடியாத காட்சிகளும் இருந்தாலும்!. மற்றொரு விடயம் இப்படத்தின் பெயர்தான் மகா சொதப்பல். ஒரு நல்ல பதிவை எழுதிவிட்டு சம்பந்தமில்லாத தலைப்பை வைத்து அதிக ஹிட்ஸ் வாங்க முடியாமல் போன பதிவைப்போன்றதே இப்படத்தின் நிலைமையும். படத்தின் பெயரே சுண்டி இழுப்பதாய் இருக்க வேண்டும். இது என்னடா 555 என்று மூன்று இலக்கத்த போட்டிருக்கான் ஏதாவது மொக்கப்படமா இருக்கப்போவுது என்றே நினைப்பே நிறைய பேருக்கும் வந்திருக்கும். என்னைக்கேட்டால் நாயகியின் பெயரான "லியானா" வையை படத்தின் பெயராக வைத்திருக்கலாம்.
ஒரு கார் விபத்தில் பலத்த அடிகளுடன் உயிர் தப்புகிறார் பரத். பின் சுயநினைவு திரும்பியவுடன் விபத்தின் போது தான் காதலியும் இருந்ததாகவும் அவளுக்கு என்னவானது அவள் எங்கே என்று விசாரிக்கிறார். பின்பு டாக்டர் உட்பட அவரின் அண்ணன் சந்தானம் அங்கே எந்தப்பெண்ணும் இருக்கவில்லை நீ எந்தப்பெண்ணையும் காதலிக்கவுமில்லை என்று சொல்லிவிடுகின்றனர்! தன் காதலியை சந்தித்த இடங்கள்,காதலித்த இடங்கள் என எல்லாவற்றையும் காட்டிய பின்பும், தலையில் அடிபட்டதனால் மூளையில் ஏற்படும் ஓர் விளைவே இதுவென்றும் இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொள்வதாகும் என கூறிவிடுகின்றனர். நாயகனும் பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் குழம்பித்தான் போய்விடுகிறோம்!. ஆனாலும் அவன் காதலியின் நினைவுகள் அவனையை சுற்றி வர தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறான் இறுதியில் அவன் தேடல் என்னவானது அவனுக்கு காதலி இருந்தாளா இல்லையா என்பதே மீதிக்கதை. படத்தின் பெரிய சுவாரஷ்யமே இந்த சஸ்பென்ஸ்தான்!
பரத் நல்ல நடிகர்தான் ஆனாலும் அண்மைக்கால அவரின் சறுக்கலும் ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரமும் படம் பார்க்கும் முன் யோசிக்கவே வைத்தது. அதெல்லாவெற்றையும் விட இப்போது தமிழ்சினிமாவை தாக்கியுள்ள சிக்ஸ் பேக் நோய் பரத்தையும் ஆட்கொண்டுள்ளதால் ரொம்பவே பயமாயிருந்தது. ஒரு காதல் கதைக்கு எதற்கு சிக்ஸ் பேக்கு எய்ட் பேக்கெல்லாம். இருந்தாலும் சண்டைக்காட்சிகளைவிட காதல் காட்சிகளே அவருக்கு மிகப்பொருத்தமாகயிருந்தது. ஒவ்வொரு காதல் காட்சிகளையும் மிக அழகாக செதுக்கியிருக்கிறார் சசி.மொபைலை வீசி அடிக்கும் காட்சி, கேபிள் கனெக்ஷனைக்கொண்டு ஏதோ பவர் இருப்பதாய் நாயகியை நம்ப வைக்கும் காட்சி என நிறைய சுவாரசியமான காட்சிகள். இவையெல்லாவற்றையும் விட இன்னுமொரு விடயம் அதுதான் படத்தின் நாயகி பிருத்திக்கா மிக சாதாரணமாய் க்யூட்டாக இருக்கிறார் பல இடங்களில் அவரது ரியாக்ஸன்களும் நடிப்பும் அருமை. மொபையிலில் ஸ்பீக்கர் இல்லை என சொல்லுமிடத்திலும், காருக்குள் வைத்து பார்த்துவிட்டானே என தலையை குனியும் இடத்திலும் அவரின் வெட்கம் கலந்த நடிப்பு சூப்பர்.
படத்தில் இன்னொரு நாயகியாக எரிக்காவும் கொஞ்ச நேரம் வந்து போகிறார் இவர் சாயலில் நடிகை இலியானாவை ஞாபகப்படுத்துகிறார். படத்தில் சந்தானம் சில காட்சிகளில் வந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இந்தப்பாத்திரத்திற்கு அவரைப்போட்டு வீணடித்து சாகடிப்பதற்கு பதிலாய் வேறொரு சாதாரண நடிகரை நடிக்க வெச்சிருக்கலாம். சந்தானம் என்ற பெயர் மாக்கட்டிங்க வேல்வுக்கு உதவும் என சசி நினைத்திருப்பார் போல! சில சொதப்பல்களை தவிர்த்திருந்தால் மிகச்சிறப்பான படமாக வந்திருக்க வேண்டிய படம் ஆனாலும் இயக்குனர் சசிக்கு வாழ்த்துக்கள்!
6 comments:
வாங்க ரியாஸ்.
நல்ல விமரிசனம்
//ஒரு நல்ல பதிவை எழுதிவிட்டு சம்பந்தமில்லாத தலைப்பை வைத்து அதிக ஹிட்ஸ் வாங்க முடியாமல் போன பதிவைப்போன்றதே இப்படத்தின் நிலைமையும்.//
ஹி..ஹி..பதிவர்களுக்கு புரியற மாதிரி சிறந்த உதாரணம்.விமர்சனமும் நல்லாருக்கு.. :)
நல்ல விமர்சனம் ரியாஸ் படம் ஏனோ எனக்கு பெரிய ஈர்ப்பைத்தரவில்லை பிடித்ததே வில்லனாக வரும் ஆசீர்வித்தியார்த்தியின் நடிப்பு !
நன்றி சென்னை பித்தன் ஐயா
நன்றி சேலம் தேவா
தனிமரம் நேசன் அண்ணா.. வில்லனாக வருபவர் ஆசிஷ்வித்யார்த்தில் அல்ல Sudesh Berry என்ற நடிகர்.
நன்றி வருகைக்கு.
முதலில் நல்ல பதிவிட்டமைக்கு நன்றிகள். இப்படத்தின் ட்ரைலர், மற்றும் பெயரைப் பார்த்திட்டு மொக்கைப் படம் என விட்டுட்டேன். அந்த கதாநாயகியின் முகம் ஈர்த்தாலும் பரத்தின் தோற்றம் விரட்டி ச்சீ மிரட்டிவிட்டது. இந்த ஆறடுக்கு வயிறை பரத்தின் மனைவியாகவுள்ள நிஜக் காதலியின் வேண்டுகோளாய் இருக்கும் போல, கதை கேட்டப்போ நல்லாருக்கும் போல தோன்றுது. பார்த்திடணம் நிச்சயமாக.
Post a Comment