வணிக சினிமாவின் சமரசங்களுக்கு உட்படாமல் தனது விருப்பம் போல் திரைப்படங்கள் உருவாக்கும் ராம் என்ற படைப்பாளியை பாராட்ட துணிந்தாலும், அவரின் படைப்புகள் அந்த பாராட்டுக்களுக்கு உரித்தானவைதானா என்ற கேள்வி தங்கமீன்கள் பார்த்து முடிந்ததும் மனதில் தோன்றியது. இவரின் சினிமாக்களை யதார்த்த சமகால சினிமா என்ற வரையறைக்குள் சேர்க்க முடியுமா? லூசுத்தனமான கொள்கை வாதியாக இருப்பதுதான் யதார்த்தமா? கற்றது தமிழிலும் இதே பிரச்சினை! தங்கமீங்கள் பார்த்தபின்பும் உங்களுக்கு என்னதான் பாஸ் பிரச்சினை என்ற கேட்க தோன்றுகிறது. உலக மயமாக்கலை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவற்றிலிருந்து ஒதுங்கியும் இருக்கவும் முடியாமல் தவிப்பதே இவரின் பிரச்சினை!
பெற்றவர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் பாசத்துக்குரியவர்கள்தான் அதில் தப்பில்லை. எவ்வளவு வேனும்னாலும் அன்பு காட்டலாம் அவர்களுக்காக உழைக்கலாம், ஆனால் அவற்றுக்கெல்லாம் ஒரு வரையறை கிடையாதா? பாடசாலை பீஸ் கட்டவே காசில்லாதவனுக்கு எதற்கு 25000 ரூபா பெறுமதியான ஹை கிளாஸ் நாய். குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுக்கத்தான் முடியுமா இல்லை கட்டாயமாக வாங்கி கொடுக்கத்தான் வேனுமா? புரிகிற விதத்தில் எடுத்துச்சொல்வது பெற்றோர்களின் வேலையல்லவா அவ்வாறு சொன்னால் குழந்தைகளுக்கு புரியாமலா போய்விடும்.. விமான நிலையத்தில் வைத்து தங்கையிடம் நாய் வாங்க காசு கேட்டு வாதிடுவது முட்டாள்தனமில்லையா? தங்கை சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லையே.விளம்பரம் போடும் போது அதன் பெறுமதியை போட்றானா, இது பணக்காரர்களுக்கு மட்டுமான விளம்பரம் என போட்றானா என்ற வாதமெல்லாம் எடுபடவேயில்லை ராம்.
குழந்தைகளுக்குத்தான் அவை புரிவதில்லை பெற்றவர்களுக்குமா அவர்களுக்கு எது வாங்கிகொடுக்கனும் எதை தம்மால் நுகர முடியும் என புரிவதில்லை! தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல பிள்ளைகளுக்கு அக்கஷ்டம் தெரியக்கூடாது என நினைப்பதெல்லாம் இன்றைய காலத்துக்கு சரிப்பட்டு வராது. குடும்ப கஷ்டமும் வறுமையும் அவர்களுக்கும் புரிய வேண்டும் அவர்களையும் அதற்கு பக்குவப்படுத்த வேண்டும்.. அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சிறுவயது முதலே கஷ்டம், துனபம், வறுமை என்பதெல்லாம் என்னவென்று தெரியாமல் வளர்த்துவிட்டு பிற்காலத்தில் அவர்கள் அதற்கு முகம் கொடுக்க நேரிடும் போது வாழ்க்கையே வெறுத்துப்போய்விடாதா?
பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு வளர்க்க வேண்டும் பெற்றோரின் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க கூடாதென்பதெல்லாம் பேசுவதற்கு கேட்பதற்கும் நல்லாயிருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு அவை ஒத்து வருவதில்லை. தானாக முடிவெடுக்கும், தான் எதுவாக ஆகவேண்டும் என்ற நிலைக்கு பிள்ளைகள் வந்தபிறகு அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் குழந்தைகள் என்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலிலேயே வளர்க்கப்படவேண்டியவர்கள். Bashu என்ற ஈரான் படத்தில் வறுமையான குடும்பமொன்றில் தாயுடன் ஒரு 10 வயது சிறுவனும் 5 வயது சிறுமியும் வயலில் வேலை செய்வது போலவும் சந்தைக்கு பொருட்கள் சுமந்து செல்வது போலவும் காட்டிருப்பார்கள் அதுதானே யதார்த்தம்.
கடைசியில் இங்க சுத்தி அங்க சுத்தி தனியார் பாடசாலையில் எதற்கெடுத்தாலும் பீசு புடுங்குகிறார்கள், அரசாங்க பாடசாலையில் சேர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வரும்போது இதுக்குத்தானா இவ்வளவு அலட்டல் இதை நேரத்தோடயே செய்திருக்கலாம்ல என்றே கேட்க தூண்டுகிறது..ராம் நடிப்பில் ஏதோ ஒரு செய்ற்கைத்தனம். ராமின் மனைவியாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார்,, செல்லம்மாவின் தோழியாக வரும் அந்தக்குட்டிபெண்ணின் நடிப்பும் வசன உச்சரிப்பும் க்யூட். செல்லம்மாவின் நடிப்பைப்பற்றி சொல்ல தெரியவில்லை. அது மிகை நடிப்பா, இல்லை அந்த பாத்திர தண்மை அதுதானா? ஆனாலும் சில இடங்களில் அப்பாவும் மகளும் எரிச்சல்படுத்துகிறார்கள். படிப்பு விஷயத்தில் மந்தம் என தெரியும் செல்லம்மா ஏனைய விடயங்களில் தெளிவாகத்தானே இருக்கா.. படிப்பில் மந்தபுத்தி உள்ள சிறுவனைப்பற்றிய பேசிய Tare Zameen Per வும் தன் குடும்பத்திற்காய் கஷ்டப்படும் குடும்ப தலைவன் பற்றி பேசிய ஈரான் படமான The Song of sparrows ஏற்படுத்திய தாக்கத்தில் சிறிதளவேனும் தங்கமீன் கள் ஏற்படுத்தவில்லை.
10 comments:
அது ஒரு கற்பனையே.அதற்கு யதார்த்த வாழ்க்கை உடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.
சினிமாவில் வரும் பாடல் காட்சிகள் போலவா நிஜ வாழ்க்கையில் நடக்கிறது.
சினிமாவைப் பார்த்துவிட்டு தியேட்டருடன் விட்டுவிட்டு வந்து விட வேண்டும்.
அதைக்கொண்டு வந்து நமது நடைமுறை வாழ்க்கை உடன் ஒப்பிட்டு பார்க்க இயலாது.
ஹோட்டலில் குடும்பத்துடன் சாப்பிட சென்றால் நமது மனைவி செய்து தருவதைவிட சிறப்பாக,ருசியாகவும் இருக்கும்.
ஆனால் அதே போல வீட்டில் தினமும் ஹோட்டலில் செய்து தருவது போல செய்ய இயலுமா?அதைத்தான் சாப்பிட இயலுமா?
அது போல 2.30. மணி நேரம் பொழுதுபோனதா?அதுதான் நமக்கு அங்கே தேவை.அதில் போய் லாஜிக் பார்த்துக்கொண்டு
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
மற்ற படங்களுக்கு தங்க மீன்கள் பரவாயில்லையில்ல...
நல்ல பதிவு...
எனக்கும் இதே தான் ரியாஸ் தோன்றியது.
தங்க மீன்கள் மிகை படுத்தப்பட்ட படைப்பு, அதில் ஜீவன் இல்லை, செயற்கைதனமே அதிகம்..
வணக்கம்
விமர்சனப் பதிவு அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நியாயமான விமர்சனம் ரியாஸ். கற்றது தமிழில் எடுத்துக்கொண்ட நல்ல விஷயத்தையே புரட்சிவாதம் பேசி, கிறுக்குத்தனமாக்கி, சொல்ல வந்ததை முழுதாகச் சொல்லாமல் கெடுத்திருப்பார். ஆனாலும் வழக்கமான சினிமாக்களுக்கு மத்தியில் வித்தியாசமான முயற்சி என்று பாராட்டினோம்.
அதே தவறையே தொடர்ந்து செய்தால் என்ன செய்வது?
@devadass snr
தேவதாஸ் சார்.. எந்த லாஜிக்கும் பார்க்க கூடாது வெறும் பொழுது போனா சரி என்பதெல்லாம் வெகுஜன மசாலா சினிமாக்களுக்கு ஒத்து வரலாம் ஆனால் இப்படம் அந்த வகையை சார்ந்தது இல்லை..
@சே. குமார்
//மற்ற படங்களுக்கு தங்க மீன்கள் பரவாயில்லையில்ல//
நிச்சயமாக நல்ல படைப்புகளைத்தானே விமர்சிக்க முடியும்.
@ ராஜ்
//அதில் ஜீவன் இல்லை, செயற்கைதனமே அதிகம்//
வாங்க ராஜ் நீங்க சொல்வது மிகச்சரி..
@ 2008rupan
நன்றி ரூபன்
@ செங்கோவி
வாங்க செங்கோவி உங்க வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி..
//அதே தவறையே தொடர்ந்து செய்தால் என்ன செய்வது?//
அதுதானே..விமர்சிக்கத்தான் வேண்டும்.
இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லையென்றாலும், இதன் விமர்சனங்களைப் பார்த்தபோது எனக்கும் இதுவே தோன்றியது. தன் தகுதிக்கு மீறி செலவு செய்தால்தான் நல்ல தந்தையா??
பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்கள் நல்ல பெற்றோர் என்பதற்கான வரைவிலக்கணத்தை இப்படித் தவறாகத்தான் கொடுக்கின்றன. வருத்தமானது.
//எந்த லாஜிக்கும் பார்க்க கூடாது வெறும் பொழுது போனா சரி என்பதெல்லாம் வெகுஜன மசாலா சினிமாக்களுக்கு ஒத்து வரலாம் ஆனால் இப்படம் அந்த வகையை சார்ந்தது இல்லை..//
உண்மை.
Post a Comment