கண்களின் பார்வை அம்புகள் போலே!


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

நினைக்க தெரிந்த மனமே என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா பாடிய ஓர் மனதை மயக்கும் பாடல் இது. வேலைப்பளு மற்றும் மனது சோர்வடையும் வேளைகளில் சில பாடல்கள் மனதை சாந்தப்படுத்தும். அவ்வகையான பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்?
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்?
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

இளையராஜாவின் அருமையான மெட்டுக்கு அழகான வார்த்தைகளை சேர்த்திருக்கிறார் கவிஞர் வாலி (என நினைக்கிறேன்) பாடல் தொடங்கும் முன் வரும் ஆரம்ப இசை மிக மிக அழகு.

மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா ஜோடி சேரும் போது அப்பாடல் அநேக நேரங்களில் ஹிட்டாகிவிடுவதும் பாடல் மனதை கொள்ளை கொள்வதும் வழமை. இப்பாடலும் கேட்கும் நேரமெல்லாம் ஏதோ ஒரு பரவசம் தருகிறது.



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பாடல் அறிமுகம்...
வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

என்றென்றும் நானும் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடலிது .
அருமையான பாடல் பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

Unknown said...

சமீபத்தில் கேட்ட மிகவும் அருமையான பாடல் நீங்கள் கூறியது போல் அந்த பாடலின் முன்பு வரும் அந்த இசை நம்மை வேறு ஒரு உலகிற்கு கூட்டி சென்று விடும்

Vennilavu Saaral Nee Song Lyrics In Tamil

  வெண்ணிலவு சாரல்  நீ பாடல் வரிகள்   வெண்ணிலவு சாரல்  நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ கொட்டும் பனி  மாயம் நீ ...