மிகப்பிடித்த தமிழ் பாடல்கள் 2013

 2013 யில் வெளிவந்த பாடல்களில் என் தனிப்பட்ட ரசனையில் கவர்ந்த பாடல்களே இது. எந்த தரவரிசை அடிப்படையிலும் இடம்பெறவில்லை மேலும் குத்து,கானா பாடல்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

#ஆனந்த யாழை மீட்டுகிறாள்- தங்கமீன்கள்

படம் அவ்வளவுதூரம் பிடிக்காமல் போனாலும் யுவனின் இசையில் இந்தப்பாடலையும், பாடல் காட்சிகளையும் ரசிக்கலாம். மகளுக்கும் அப்பாவுக்குமான உறவைச்சொல்லும் பாடல் நா.முத்துக்குமாரின் அழகான வரிகளில். ஸ்ரீராம் பார்த்தசாரதி குரலை நீண்டநாட்களுக்குப்பின் பயன்படுத்தியிருக்கிறார் யுவன். (பாடல்கள் எந்த தரவரிசை அடிப்படையிலும் இடம்பெறவில்லை மேலும் குத்து,கானா பாடல்களும் இந்த பத்தினும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

#அழகோ அழகு - சமர்

 யுவனின் இசையில் நரேஷ் பாடிய ஓர் இனிமையான பாடல் பல இளசுகளின் பொதுவாக பெண்பிள்ளைகளின் மனம்கவர்ந்த பாடல். த்ரிஷா, சுனைனாவுக்காக விஷாலை மன்னித்து திரையிலும் பார்க்கலாம். படம் வெளிவர முன்பே முழு வீடியோ பாடலையும் பட பிரமோஷனுக்காக வெளியிட்டிருந்தார்கள். சமர் திரைப்பட பாடல்கள் 2012 யின் இறுதியில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


#இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன.. மரியான். 

 ரஹ்மானின் இசையில் வெளிவந்த மரியான் படத்தில் பாடல்கள் ஓரளவுக்கு கேட்கும் ரகம் என்றாலும். அவற்றில் இப்பாடல் கவர்ந்தது. சில பாடல்கள் கேட்கும் போது பிடிக்காது ஆனால் படத்தில் பார்க்கும் போது பிடித்துவிடுவதுண்டு. மரியான் பாடல்களும் அப்படியே, பார்வதிக்காகவேண்டியே பார்க்கலாம் அத்தனை அழகான முகபாவனையும் நடிப்பும் அந்த பெண்ணிடம். ரஹ்மான் குரலில் நெஞ்சே எழு மற்றும் சோனாபரியா பாடல்களும் படம்பார்த்தபின் பிடிக்க தொடங்கிவிட்டது.

#பார்க்காத பார்க்காத - வருத்தப்படாத வாலிபர் சங்கம் 

 டி.இமானின் இசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் மொக்கை காமெடி படத்தில் சில பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. அவற்றில் ஊதா கலரு ரிப்பன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம். ஆனாலும், எனக்கு அதையும் தாண்டி இந்த மெலடி பாடல் மிகக்கவர்ந்தது. விஜய் ஜேசுதாசும் சூபபர் சிங்கர் பூஜாவும் பாடியிருக்கிறார்கள். பூஜாவின் குரல் வித்தியாசமாய் புதிதாய் அழகாய் ஒலிக்கிறது. புதுமுகம் ஸ்ரீதிவ்யாவுக்காக வேண்டியாவது திரையிலும் பார்க்கலாம்.

#யார் இந்த சாலையோரம் - தலைவா 

 ஜீ.வி.பிரகாஷின் இசையில் அவரே மனைவி சைந்தவியோடு சேர்ந்து பாடிய மிக இனிமையான மெலடிப்பாடல். சைந்தவியின் மெல்லிய குரல் எனக்கு மிக பிடிக்கும் அதுவும் ஜீவியின் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை. அதனோடு ஜிவியின் குரலும் இனிமையாகவே இருக்கிறது. முன்பு போல் அல்லாமல் ஜீவியின் பாடல்கள் அவ்வளவு சிறப்பாய் இல்லை


கடல் நான் தான் அலை ஓய்வதேயில்லை... 

வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளியின் இன்னுமொரு வேர்சன். இது Suzanne D'Mello & சுதா ரகுநாதன் குரலில்தான்,அவர் குரலில்தான் என்னவொரு ஈர்ப்பு. ஹரிசை தவிர வேறு இசையமைப்பாளர்கள் ஏன் இவர் குரலை அதிகம் பயன்படுத்துவதில்லை! ஹரிசின் இசையில் இடம்பெறும் ஒருவித ஏக்கத்தோடு பாடும் பெண்குரல் பாடல்கள் ஹிட்டாகிக்கொண்டே வருவது வழமை. இவ்வாரான பாடல்களுக்கு பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதன் குரல்கள் மிகப்பொருத்தம். பாடலை எழுதியர் மறைந்த வாலிப கவிஞர் வாலி என்னவொரு அருமையான வரிகள்.

#இரண்டாம் உலகம் பாடல்கள்

 வின்னைத்தாண்டி அன்பே வந்தாய்..

முன்பு கூறியது போல் இதுவும் ஹரிசின் வழமையான மெட்டுக்களில் ஒன்றுதான் ஆனாலும் ரசிக்கலாம் விஜய் பிரகாசின் குரலில். வரிகள் வைரமுத்து.

மன்னவனே என் மன்னவனே... 

சக்திஸ்ரீ கோபாலன், கோபால் ராவ் பாடிய பாடல் சக்திஸ்ரீயின் குரலில் என்னவொரு இனிமை வாவ். கேட்டுக்கொண்டேயிருக்கலாம். மேலும் இப்படத்தில் இடம்பிடித்த பனங்கல்லா விஷமுல்லா-தனுஷ் பாடல் மற்றும் கனிமொழியே-கார்த்திக் பாடிய பாடக் என் காதல் தீ -எஸ்.பி.பி பாடிய பாடல் எல்லாம் கேட்கும் ரகம்தான்.

#கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே..ரம்மி 

 இமானின் இசையில், வரவிருக்கும் ரம்மி என்ற படத்தில் இடம்பெற்ற ஓர் அழகான மெலடி.. பிரசன்னாவும் வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள். அண்மையகாலத்தில் அறிமுகமான பாடகிகளில் வந்தனாவின் குரல் மிகப்பிடித்தது. இப்பாடலை கேட்கும் போது இவரின் இன்னொரு பாடலான "ஒரு பாதி கதவு நீயடி" பாடல் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அழகான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யுகபாரதி.

#என்னடி எனனடி ஓவியமே.. ஜன்னல் ஓரம்.

வித்யாசாகர் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் இசையமைத்த ஜன்னல் ஓரம் படப்பாட்ல்கள் ஓரளவு கேட்கும் ரகம். அதிலும் இந்தப்பாடல் நன்றாகயிருக்கிறது. திப்புவின் குரலை மிக நீண்டநாட்களுக்குப்பின் கேட்க முடிகிறது. மலைப்பிரதேச இயற்கை காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்கள் இப்பாடலுக்க்காக. மனிஷாவுக்காக இப்பாடலை பார்க்கலாம் விமலை பொறுத்துக்கொண்டால்

#அம்மாடி அம்மாடி- தேசிங்குராஜா

கொஞ்சும் குரலழகி ஷ்ரேயா பாடிய பாடல். மொக்கைப்படங்களில் சில முத்தான பாடல்கள் இடம்பெறுவது வழமை. அது போல இந்த தேசிங்குராஜாவிலும் ஒரு நல்ல பாடல் அதுவும் ஷ்ரேயா குரலில். சாதாரண பாடலும் இவரால் பாடப்படும் போது பிடிக்கவே செய்கிறது. விமலின் ரொமான்ஸ் கன்றாவியெல்லாம் ஷ்ரேயா,பிந்து மாதவிக்காக மன்னித்து பாடலை பார்க்கலாம் கேட்கலாம்.

Extra.. யாருக்கும் சொல்லாமல்-ஆல் இன் ஆல் அழகுராஜா

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் ரசிக்கத் தக்கவை... நன்றி...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைக்கும் பாடல்கள்...
வாழ்த்துக்கள்.

Unknown said...

தங்க மீன்கள் மரியான் என்னை கவர்ந்தவை

ஜீவன் சுப்பு said...

எ.பு. & இ.உ தவிர மற்ற எல்லப்பாடல்களுமே எனக்கும் பிடித்திருந்தது .

திப்பு & ஸ்ரீராம் - இருவருக்கும் அட்டகாசமான Come Back . அப்டியே ஹரீஷ் ராகவேந்தருக்கும் யாரும் வாய்ப்புக்கொடுத்தால் பரவாயில்லை .

பூஜா - ஆச்சர்யம் தான் ...


// த்ரிஷா, சுனைனாவுக்காக விஷாலை மன்னித்து திரையிலும் பார்க்கலாம்.//

ஹா ஹா ... Same Blood . Care free character ன்னு Hair free ஆ விட்டு Symbolic a சொல்லீருக்காங்க :)

ஜீவன் சுப்பு said...

//பார்வதிக்காகவேண்டியே பார்க்கலாம் அத்தனை அழகான முகபாவனையும் நடிப்பும் அந்த பெண்ணிடம்.//

200 % Correct ...

ஜீவன் சுப்பு said...

தவிர இன்னும் சில நல்ல பாடல்களும் உண்டே .....

பண்ணையாரும் -பத்மினியும் - எல்லாப் பாடல்களும் .

நய்யாண்டி - ஏ லேல்லே

வணக்கம் சென்னை - ஒசக்கா ...

NSS - காத்திருந்தால் ...

நேரம் - காதல் என்னுள்ளே ...

Riyas said...


@திண்டுக்கல் தனபாலன்

நன்றி சார்

@சே. குமார்

நன்றி குமார்

@சக்கர கட்டி

நன்றி சக்கர கட்டி

Riyas said...

@ஜீவன் சுப்பு

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..

திப்பு, ஸ்ரீராம் போல ஹரிஸ் ராகவேந்திராவையும் எனக்குப்பிடிக்கும்.. நல்ல பாடகர் மயக்க என்னவில் கடைசியாக பாடியதாக நினைவு.

Riyas said...

தவிர இன்னும் சில நல்ல பாடல்களும் உண்டே .....

//பண்ணையாரும் -பத்மினியும் - எல்லாப் பாடல்களும்//

இப்போதுதான் கேட்க தொடங்கியிருக்கிறேன்.

//நய்யாண்டி - ஏ லேல்லே//

இது என்னை பெரிதாக கவரவில்லை.

//வணக்கம் சென்னை - ஒசக்கா ...//

ஓரளவு கவர்ந்தது ப்ரியா ஆனந்துக்காக :-)

NSS - காத்திருந்தால் ...

சின்மயி பாடியதுதானே? எப்படியோ தவறவிட்டுட்டேன்.


//நேரம் - காதல் என்னுள்ளே// ஓரளவு பிடிக்கும்

தனிமரம் said...

இன்னும் சில பாடல்கள் கேட்கவில்லை சகோ விரைவில் கேட்பேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7028.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...