சூப்பர் சிங்கர் ஜூனியரும் அசாத்திய திறமைகளும்!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்னைக்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. பல அரசியல்கள், பக்கச்சார்புகள் இன்னும் சில ஏமாற்றுவேலைகள் இருந்தாலும் மொக்கை போடும் சினிமா நிகழ்ச்சிகளை பார்ப்பதைவிட இது நல்லதொரு பொழுது போக்கு நிகழ்ச்சி இசையை ரசிப்பவர்களுக்கு. இந்நிகழ்ச்சி மூலம் பல திரையிசைப்பாடகர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!

இதில் வயது அடிப்படையில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் என்றும் மற்றயவர்களுக்கு சூப்பர் சிங்கர் என்றும் இருவேறு போட்டிகள் ஆண்டுகொருமுறை நடப்பதுண்டு. இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நடந்துகொண்டிருக்கிறது. தேர்வுகள் எல்லாம் முடிந்து சிறந்த 25 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இம்முறை  ஜூனியரில், கடந்த முறையைக்காட்டிலும் பல திறமையான இளம் போட்டியாளர்கள் பங்குகொள்கிறார்கள். சொல்லப்போனால் எல்லோருமே மிகத்திறமையானவர்கள். ஒவ்வொரு போட்டித்தொடரிலும் சில அசாத்தியமான திறமையுள்ள போட்டியாளர்கள் வருவார்கள் நம்மை மகிழ்விப்பாளர்கள். இம்முறையும் அது நடந்துகொண்டிருக்கிறது முன்னெப்போதும் இல்லாத வகையில் கொஞ்சம் கூடுதலாகவே!

அந்த வகையில் செந்தில்நாதன் எனும் மூளை வளர்ச்சி குறைந்த, கண்தெரியாத பையனின் பாடல்கள்தான் எல்லா இசை ரசிகர்கள் நெஞ்சத்தையும் நெகிழச்செய்து கொண்டிருக்கிறது அண்மைய நாட்களில்! பிறந்ததுமே தாய் தந்தையரினால் கைவிடப்பட்ட இச்சிறுவனை ஒரு கண்தெரியாதவர்தான் எடுத்து வளர்த்திருக்கிறார். எந்த வேலையை செய்ய வேண்டுமானாலும் இன்னொருவரின் உதவியை எதிர்பார்க்கும் இவன் பாடல்கள் என்று வரும்போது மட்டும் தூள்கிளப்பிவிடுகிறான். பலவருடம் சங்கீதம் பயின்ற குழந்தைகளே பல தவறுகளுடன் பாடும் போது வெறும் கேள்விஞானம் மட்டுமே கொண்டுள்ள இச்சிறுவனால் பிழையின்றி ஏற்ற இறக்கங்களுடன் அழகான உச்சரிப்புகளுடன் எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சர்யம்தான்! அதிலும் பெண்குரல் மாற்றிவேறு பாடுகிறான். என்ன ஒரு அற்புதமான குரல் வளம்! எப்போதும் அனுதாபங்களையும், கண்ணீரையும் முன்னிறுத்தி  பிரபலம் தேடிக்கொள்ளும் விஜய் டீவீ  இந்தச்சிறுவன் விடயத்திலும் அதுதான் நோக்கம் என்றாலும் மனவளர்ச்சியில்லாதவன் என்று நிராகரித்துவிடாமல் போட்டியில் சேர்த்துக்கொண்டு அந்தச்சிறுவனின் எதிர்காலத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளலாம். செந்தில்நாதன் தொடர்ந்து போட்டியில் பங்கெடுக்கும் மனநிலையில் இல்லையென்பதால் அவ்வப்போது வந்து ஒரு சில பாடல்களை பாடிச்செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதுவும் ஒரு சிறந்த யோசனைதான்.

செந்தில்நாதன் பாடிய சில பாடல்கள்..



  இந்நிகழ்ச்சியின் இன்னுமொரு திறமையான போட்டியாளர் பெங்களூரிலிருந்து வந்து பங்குபெற்றும் தமிழில் எதுவுமே பேசத்தெரியாத தமிழில் பாட மட்டும் தெரிந்த ஸ்பூர்த்தி. ஒவ்வொரு பாடலையும் அதற்கேயுரிய சிறப்புகளுடன் இசை நுனுக்கங்களுடனும் அழகான தமிழ் உச்சரிப்புடனும் பாடி அசத்துகிறது இந்த குட்டிப்பொண்ணு. பலவருடம் சங்கீதம் பயின்று பிரபல பாடகர்களுக்கு மட்டுமே வரும் சில ஏற்ற இறக்கங்கள் நெழிவு சுளிவுகள் இந்தப்பொண்ணுக்கு இப்போதே அனாயசமாக வருகிறது. அதற்கு சில உதாரணங்கள் இங்கே.


2 comments:

தனிமரம் said...

இதுவரை இப்படியான நிகழ்ச்சி பார்ப்பது இல்லை ஏனோ ஆர்வமும் இல்லை சகோ! பகிர்வு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வியந்தேன் கண்ணீருடன்...

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...