Dasara Movie Review in Tamil

 தசரா திரை விமர்சனம். 

ஸ்ரீகாந்த் ஓடேலாவின் இயக்கத்தில் நாணி, கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் செட்டி, சமுத்திரக்கனி மற்றும் இன்னும் பலர், நடிப்பில் வெளிவந்திருக்கும் தெலுங்கு தமிழ் டப்பிங் திரைப்படமே இந்த தசரா.

இதன் கதை என்னவென்று பார்த்தால் ஆந்திராவின் விரலப்பள்ளி எனும் ஊரில் இருக்கும் சிலுக்குபார் எனும் பாரை சுற்றி நடக்கும் அரசியலும் என்று கதை ஆரம்பித்து பின் முக்கோண காதல் கதையாக உருவெடுத்து பின் பழிவாங்கும் கதையாக முடிகிறது. அதாவது கதாநாயகனுக்கு இரு நண்பர்கள். ஒரு ஆன் மற்றும், பெண். கதாநாயகனுக்கு பெண் நண்பி மீது காதல், அந்த பெண் நண்பிக்கு கதாநாயகனின் நண்பன் மீது காதல். கதை இப்படி போய், இதில் ஏற்படக்கூடிய ஒரு சின்ன இழப்பு, அதன் வெளிப்பாடாக ஏற்படக்கூடிய பழிவாங்கல் இதுதான் கதை!

நாணி, கீர்த்தி, தீக்ஷித் மூவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி படம் முழுக்க வந்தாலும் அளவான வசனங்களே பேச கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரச்சினையே ஒழுங்கற்ற திரைக்கதைதான். அரத பழசான கதைகளுகே கச்சிதமாக திரைக்கதை அமைத்தால்  பார்ப்பவர் மனதை கவர்ந்து விடும். ஆனால் இப்படம் எப்படா முடியும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. மனதில் ஓடடவே இல்லை. 

சந்தோஷ் நாராயணின் இசையில் குறையில்லை! பாடல்கள் கேட்க்கும் படியாகவே இருக்கிறது. அதிலும், மயினரு வேட்டி கட்டி பாடல் தீயின் குறளுக்காகவே பல முறை கேட்கலாம். பின்னணி இசையும் நல்லாயிருக்கு. இந்தப்படத்துக்கு இதுக்கு மேலே எழுத முடியாது விரும்பினவங்க பார்க்கலாம் உங்கள் விதி உங்கள் கைகளில்.

Dasara trailer

 

No comments:

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...