ஜோஜு ஜார்ஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுக இயக்குநர் ரோகித் எம்ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரட்ட (Iratta) மலையாள திரைப்படம் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மன அழுத்தம் நிறைந்த துறையான காவல்துறையின் மனச்சிக்கல்களையும் அவர்களது வாழ்க்கையின் யாரும் அறிந்திடாத இன்னொரு பக்கத்தையும் பேசியுள்ளது இத்திரைப்படம்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற கருத்திட்கேட்ப இன்றைய காலகட்டத்தில் குற்றம் செய்பவர்களின் குடும்ப பின்னணியை எடுத்துநோக்கினால் அவர்களின் குழைந்தைப்பருவ வளர்ப்பும் அவர்கள் வளரும் சூழலும், சிறுவர்களாக இருக்கும் போது அவர்களின் நடவடிக்கையும் பெரிதும் தாக்கம் செலுத்துவதாக அமைந்துள்ளதை நம் சமுருகத்திலேயே பெரிதும் அவதானிக்கலாம். இயக்குனரும் இக்கருத்தை முன்னிறுத்தியே காடசிகளை நகர்த்தியிருக்கிறார் மேலும் குழந்தை வளர்ப்பு அவசியத்தின் பின்னணியில் இப்படத்தை அணுகியிருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டப்படவேண்டியது.
கேரளாவின் வாகாமன் காவல் நிலையத்தில் திடீரெண்டு ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க்கிறது. உள்ளே சென்று பார்த்தால் அந்த நிலையத்தின் ஏஎஸ்ஐ வினோத் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்குறார். இதை விசாரிக்க வினோத்தின் சகோதரரும் டிஎஸ்பியுமான பிரமோத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்படுகிறார். வினோத்துக்கு என்ன நடந்தது இது கொலையா?தற்கொலையா? விநோதத்தின் பின்னணி என்ன, அவரின் எதிரிகள் யார்? இதில் யாரெல்லாம் தொடர்பு பட்டுள்ளார்கள், விநோதத்தின் கடந்தகாலம் எப்படி பட்டது? என்பதை, கண்டறிவதே இப்படத்தின் மிகுதி கதை.
வினோத் பிரமோத் எனற இரட்டை கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் கவனத்தை தன பக்கம் ஈர்த்துக்கொள்கிறார. குரூரம், கோபம், அதிகாரம் திமிர் கொண்ட வினோத்த்தாகவும். பொறுமை, நிதானம், புத்திக்கூர்மை கொண்ட பிரமோத்தாகவும் இருவேறு உணைர்ச்சிகளை காட்டக்கூடிய பாத்திரத்தில் தனது நுட்பமான நடிப்பாற்றல் மூலம் ஒவ்வொரு காடசியிலும் அசத்தி இருக்கிறார் ஜோர்ஜ். ஜோசப், நாயட்டு படங்களில் இவரின் நடிப்பை ரசித்தவர்கள் இப்படத்திலும் நிச்சயம் ரசிக்கலாம்.
இந்தப் படத்தில் அஞ்சலி, சுனில் சூர்யா, சாபுமோன் அப்துசமத், அபிராம் ராதாகிருஷ்ணன், ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜீத்து அஷ்ரப் என பலர் நடித்திருந்தாலும் ஜோஜு ஜார்ஜ் தன இரைட்டை வேடத்தில் படம் முழுக்க வன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார் அதிலும் இறுதி நேர காட்சி கிளைமேக்ஸ் காட்சிகளில் உருக்கமான தன நடிப்பின் மூலம் ரசிகர்களை உருக வெக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஜயின் காட்சி பதிவுகள் ரசிக்கலாம். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் பாடல்களும் இந்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படத்துக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது. வழமையான மலையாள திரைப்பட ரசிகர்கள், சஸ்பென்ஸ் க்ரைம் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் நிச்சயம் ஏமாற்றாது இப்படம்"
No comments:
Post a Comment