நண்பகல் நேரத்து மயக்கம் திரை விமர்சனம்.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்மூட்டியின் நடிப்பில் மலையாளம் தமிழ் இரு மொழிகளும் கலந்து வெளியாகியிருக்கும் திரைப்படமே, நண்பகல் நேரத்து மயக்கம். அங்கமாலி டைரிஸ், ஈ ம யு, ஜல்லிக்கட்டு, சுருளி வரிசையில் மற்றுமொரு வித்தியாசமான கதைககளத்தோடு களமிறங்கியிருக்கிறார் லிஜோ. நம் சமூகத்தில் வாழும் வித்தியாசமான மனிதர்களும் அவர்களின் குணாதியங்களை பிரதிபலிப்பதே இவரின் திரைக்கதை அப்படியொரு வித்தியாசமான மனிதனின் கதைதான் இந்த நண்பகல் நேரத்து மயக்கம்.
கேரளாவிலிருந்து வேளாங்கன்னிட்கு தன மனைவி மற்றும் உறவினர் நண்பர்களுடன் சிறிய ரக பஸ் வண்டியொன்றில் ஆன்மிக சுற்றுப்பயணம் வருகிறார் மம்மூட்டி, பயணத்தை முடித்துவிட்டு திரும்பி செல்லும் நண்பகல் வேளை யொன்றில் தமிழ்நாடு பொள்ளாச்சி பகுதியூடாக பஸ் வந்துகொண்டிருக்கும் போது உறக்கத்திலிருந்து திடீரெண்டு கண் விழித்த மம்மூட்டி பஸ்சை நிறுத்த சொல்லி அங்கிருக்கும் சிறு பாதை வழியாக நடக்க தொடங்குகிறார் ஏதோ அவசர தேவைக்காக செல்கிறார் என நினைத்து வந்தவர்களோ பஸ்சை நிறுத்தி காத்திருக்கிறார்கள்.பொடிநடையாக வந்தவர் ஒரு கிராமத்தை வந்தடைகிறார், வந்தவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து உடைமாற்றிவிட்டு ஏதோ நீண்டநாள் பழகியவர் போல் நடந்து கொள்கிறார் வீட்டுக்காரர்களும் ஊர்காரர்களும் என்ன நடக்கின்றது என விளங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!
பின் அக்கிராமத்திலிருக்கும் கோயில், மதுக்கடை என அலைந்துவிட்டு இருட்டும் நேரத்தில் வீடு திரும்புகிறார். அந்த நேரம் பார்த்து, பஸ்சிலுருந்தவர்களும் நீண்ட நேரமாகியும் போனவரை காணவில்லையென அவ்வழியாக தேடி வந்து கிராமத்தை வந்தடைகிறார்கள். இவரையும் கண்டுகொள்கிறார்கள். இவரைக்கண்டதும் ஊருக்கு கிளம்புமாறு அழைக்கிறார்கள் மம்மூட்டியோ நீங்கள் யார் ஏன் என்னை அழைக்கிறீர்கள் நான் இந்த கிராமத்துக்காரன் எனச்சொல்கிறார் இதைக்கேட்டதும் வந்தவர்களுக்கும் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் பேரதிர்ச்சி இதன் பின் என்ன நடக்கிறது இதன் மர்மம் என்ன என்பதே மீதிக்கதை
மம்மூட்டி தான் யார் என்பதை மறந்து தனக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு ஊரைசேர்ந்த மனிதராக ஏன் நடந்துகொள்கிறார்? என்ற கேள்விக்கு நாம் ஏதேதோ கற்பணை பண்ண, இயக்குனரோ வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து பேண்டசியாக முடித்திருக்கிறார் இக்கதையை! ஆனமீக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு சாதாரண மலையாள குடும்பஸ்தராகவும், கிராமத்தில் வாழும் ஒரு எளிய தமிழராகவும் இருவேறு கதாபாத்திரங்களில் மம்மூட்டி மிகச்சிறப்பாகவே நடித்திருக்கிறார். பேசுவதற்கு அதிக வசனங்கள் இல்லையென்றாலும் தன உடல்மொழியாலும் நடிப்பாலும் காட்சிகளை நகர்த்துவதற்கு உதவி இருக்கிறார். அதிலும் ஊரை விட்டு போகமாட்டேன் என வீதியில் படுத்து அடம்பிடிக்கும் காட்சி உருக்கம்.
மம்மூட்டி தவிர்த்து ரம்யாபாண்டியன், பூ ராம், ஜி எம் குமார் போன்றோரும் சிறப்பவாகவே நடித்திருந்தார்கள். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கனகச்சிதம்! கதாபாத்திரங்களோடு கேமராக்களை நகர விடாமல் ஓரிடத்தில் நிருத்தி வைக்கப்பட்டு கதாபாத்திரங்களை உலவ விட்டு படம் பிடித்திருக்கிறார்கள். பாடல்களோ பின்னணி இசையோ பயன்படுத்தாமல் படம் முழுவதும் பழைய தமிழ் சினிமா பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்தி இருப்பது புதுமை! இருந்தாலும் சில இடங்களில் பேசும் வசனங்களையும் புரிய விடாமல் பண்ணிவிடுகிறது.
மெதுவான உலக மலையாள சினிமாக்கள் பார்த்து பழகியவர்கள் லிஜோவின் முந்தய படங்களை பார்த்து ரசித்தவர்கள் இந்த நண்பகல் நேரத்து மயக்கத்தையும் நிச்சயம் பார்த்து மகிழலாம்.
No comments:
Post a Comment