Pathu Thala Movie Review in Tamil


 பத்து தல திரை விமர்சனம் 

சிம்பு நடிப்பில் சிலம்பரசனின் மாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படமே பத்து தல.கன்னட திரைப்படமான மப்தி திரைப்படத்தின் ரீமேக்கான இது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஓர் இரவு வேளையில் கடத்தப்படுவதிலிருந்து தொடங்குகிறது கதை. . இந்த கடத்தலுடன் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? அவர்களின் பின்னணி என்ன? முதலமைச்சரை என் கடத்த வேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை மாஸ் மசாலாக்கள், அடிதடிகள், ஆடல் பாடல்கள் கலந்து சொல்லியிருக்கும் படமே பத்து தல.


நாகர்கோயிலில் மணற் கொள்ளை தாதாவாக AGR எனும் கதாபாத்திரத்தில்  சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு இன்னுமொரு கேங்ஸ்ட்டர் கதை சிம்புவிற்கு. கேங்ஸ்டர் கெடடப்பிற்கு அம்சமாக பொருந்துகிறார் மாஸாக நடித்து படம் முழுக்க  அதகளம் பண்ணியிருக்கிகிறாரர். முதலமைச்சரின் கடைத்தலை கண்டறிய வரும் undercover cop ஆக சக்திவேல் கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் இவருக்கு இது புதுசு.சிம்புதான் குற்றவாளி என நம்பினாலும் அவரின் கேங்ஸ்டர் பலத்துக்கு முன்னாள் ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கும் இடங்களில் நல்லாவே நடித்திருக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ மேனன் பிரியா பவனி ஷங்கர் போன்றோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நன்றாகவே செய்துள்ளனர். 


ஒளிப்பதிவு பாருக் ஜே பாஷா சிறப்பாகவே செய்திருக்கிறார் இசை ரஹ்மான் பாடல்கள் முன்னரே வெளியாகி ஓரளவு வெற்றி பெற்றுந்தது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். பாடல்களை பொறுத்த வரை நம்ம சத்தம் அக்கரையில் பாடலில் சிம்புவின் நடனம் அபாரம். நினைவிருக்கா பாடல் ரஹ்மானின் மெலடி ஸ்பெஷல். ராவடி குத்து பாடல் சாயிசாவின் நடனத்துக்காகவேண்டியே பார்க்கலாம்! அப்பப்பா என்னவொரு டான்சு.

என்னதான் இருக்கிறவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ராபின் ஹூட் வகையறா கதை என்றாலும், மணற் கொள்ளை என்பது சூழலுக்க்கு எவ்வளவு கேடானது என்பதை நாம் அறிவோம். அந்த கேடான விடயத்தை செய்தா  மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. 

முதல் பாகம் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் இரண்டாம் பாகம் சூடுபிடித்து நகர்கிறது. என்னதான் மசாலா படத்துக்கு லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் சில காட்சிகள் கொஞ்சம் ஓவராத்தான் போகுதோ இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை, முக்கியமாக சண்டை காட்சிகளில்! மொத்தத்தில் பத்து தல ஒரு முறை பார்க்கலாம். சிம்பு ராசிகள் எதனை தடைவை வேண்டுமானாலும் பார்க்கலாம். 


Pathu thala review
 

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2