Sollamale Sollamale Song Lyrics in Tamil

 Sollamale Sollamale Song Lyrics in Virupaksha


சொல்லாமலே சொல்லாமலே பாடல் வரிகள்

சொல்லாமலே சொல்லாமலே
உன் கண்கள் என் மீது கல் வீசுதே 
சொல்லாமலே சொல்லாமலே 
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே 
சல சலக்கும் நீரும் நீயே 
பட படக்கும் தீயும் நீயே
எதிரில் வரும் என்னை 
ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய் 
குறும்பு விழியிலே குடைசாய்த்து நீ போகின்றாய் 

சொல்லாமலே சொல்லாமலே 
உன் கண்கள் என் மீது கல் வீசுதே 
சொல்லாமலே சொல்லாமலே 
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே

எங்கயோ பார்த்தது போலே 
என் மனம் சொல்லுது உன்னை 
காலமும் காதலும் குழப்பன்தானோ 
பாவமாய் பாவனை காட்டும் 
திமிர் உன் தாவணி தோட்டம் 
நம்புதே நம்புதே நெஞ்சம் ஏனோ 
உன்மத்தமாய் நான் நான் 
நிற்பது உண்மைதானோ 

சொல்லாமலே சொல்லாமலே 
உன் கண்கள் என் மீது கல் வீசுதே 
சொல்லாமலே சொல்லாமலே 
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே

பார்த்ததும் புயலாய் தோன்றும் 
தென்றல் நீ தேவதை அம்சம் 
என்னிலே என்னிலே மாயம் செய்தாய் 
வார்த்தைகள் ஆயிரம் உண்டு 
ஆயினும் மௌனம் கொண்டு 
மனதை நீ மூடினாய் ஏனோ இன்று 
ஓர் வார்த்தையில் 
உன் வாழ்க்கையில் 
ஓரிடம் தாயேன் 

சல சலக்கும் நீரும் நீயே 
பட படக்கும் தீயும் நீயே
எதிரில் வரும் என்னை 
ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய் 
குறும்பு விழியிலே குடைசாய்த்து நீ போகின்றாய் 

உன் கண்கள் என் மீது கல் வீசுதே


Song credits:
Song title- Sollamale Sollamale 
Movie -Virupaksha (Tamil)
Music - B. Ajaneesh Loknath
Singers:Dharan kumar and Reshma Shyam
Lyrics :Palani Bharathi
Starring :Sai Dharam Tej, Samyuktha
Director: Karthik Dandu
Music label : Sony Music South

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2