Vaathi Tamil Movie Review

வாத்தி திரைப்பட விமர்சனம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து அன்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படமே வாத்தி, இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் சமுத்திரக்கனி முக்கிய வில்லனாகவும் மற்றும் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். 

 கல்வியும் கல்வி சார்ந்த அரசியல் பிரச்சினைகளும் அதன் சாதக பாதகங்களை பேசுவதே படத்தின் மையக்கரு.. கல்வி தனியார் மயமாதல், கிராமிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் அக்கல்வியுனூடாக அம்மக்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதை அழ்காக சொல்லிச்செல்கிறது இப்படம்.. 

 தனுஷ் வழமை போலவே பாலா ஆசிரியராக மிகச்சிறப்பாகவே நடித்திருக்கிறார். பல காட்சிகளில் அசால்ட்டாக இருக்கிறார்.. சம்யுக்தா அழகாக இருக்கிறார் தனுஷுடனான காத ல் காட்சிகளில் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். 

 ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அதிலும் வா வாத்தி பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். இயக்குநர் வெங்கி அட்லூரி கொஞசம் தெலுஙுகு வாடையுடன் ஏற்கனவே பார்த்து பழகிய கதை என்றாலும் புது மசாலாக்கள் தூவி ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார். வார்த்தி ஒரு முறை பார்க்கலம். 

Vaathi Trailer 

No comments:

Sugar Baby Song Lyrics Thug Life

 Sugar Baby Song Lyrics In Tamil   பெண் : என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்குது இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு பெண்...