Chinnanjiru Nilave song lyrics in PS2

 சின்னஞ்சிறு நிலவே மறுமுறை பாடல் வரிகள். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து. இசை A.R ரஹ்மான். பாடியவர்கள் ஹரிச்சரன் மற்றும் கதீஜா ரஹ்மான். பாடல் வரிகளை எழுதியவர் இளங்கோ கிருஷ்ணன்.  பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம் 

சின்னஞ்சிறு நிலவே பாடல் வரிகள்

Khatija Rahman version

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு

ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஏனடி நீங்கினையோ

Chinnanjiru Nilave Haricharan Version


சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே

யாங்குனைத் தேடுவலும் அன்னமே
ஏதினி செய்குவனோ
ஓங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி

துள்ளும் நயனமெங்கே வெள்ளம்போல்
சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே

மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே
சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெய்யிலாய் என்னையே
தீண்டிடும் பார்வையெங்கே

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி

கொல்லை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீந்தினியோ
எற்றடி கொற்றமுற்றே பிரிவை
சாபமாய் தந்தனையோ

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே

Ponniyin selvan part 2 song lyrics



Song credits:

Song title- Chinnanjiru Nilave Song Lyrics
Movie -Ponniyin Selvan Part - 2
Music - A.R.Rahman
Singers:Haricharan,Katija Rahman
Lyrics :Ilango Krishnan
Starring :Karthi, Trisha
Directed by Mani Ratna


Chinnanjiru Nilave lyris video
 

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...