Enna Petha Ammave Lyrics in Tamil

 

என்ன பெத்த அம்மாவே பாடல் வரிகள் 

படம் - ருத்ரன் 
பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்
இசை  : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள்  : மதுர கவி


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே


பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கிடக்கியே


தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே


உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கிடக்கியே


கருவில் தாங்கி
கனவில் ஏங்கி
கதறி ஈன்ற
தியாக உருவமே


சில நொடி பிடிச்சி
பிஞ்சு மனம் பொதச்சி
உன் நிழலில் நடிக்க
மறு ஜென்மம் தோன்றுமா


ஊராரு மெச்ச உன்ன
நான் அழ வைக்க தான
ஏழேழு கடலும்
தாண்டி வந்தேன்


மூச்சோடு மல்லுகட்டி
என்ன பெத்தவளே
முந்தான கூண்டில் வச்சி
பாதுகாத்தவளே


தானக துடிச்ச நெஞ்சு
என்ன நினச்சுதோ
கைமாறு என்ன செஞ்சு
பாவம் தீர்க்கவே


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே


தகப்பன் தோள்கள்
தாங்கிட இல்லைேய
தாயின் மடியும்
தூங்க இல்லையம்மா


தன்னந்தனி மரமா
நிக்க வச்ச நீயே
தாய் இழந்த மகனா
பாட வச்சிட்டியே


தாயே உன் கதகதப்பில்
பனிக்குட வெது வெதுப்பில்
நான் வாழ பிறவி வாய்க்குமா


ஊர் கூடி தேர் இழுத்தும்
தெய்வம் காணவில்ல
முக்கோடி சில இருந்தும்
தாய மிஞ்சவில்லை


பேராடி சொத்து சேர்த்தும்
இன்பம் சேரவில்லை
தாயே நீ இல்லாமத்தான்
மோட்சம் இல்லை


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன

ஏங்க வச்ச அம்மாவே


என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே


பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கிடக்கியே


தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே


உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கிடக்கியே


Enna Petha Ammave Lyrics video
 
Song credits:
Song title -Enna Petha Ammave
Movie -  Rudhran
Music - G. V. Prakash Kumar
Singers:G. V. Prakash Kumar 
Lyrics: Madhurakavi
Starring :Ragava lawrance
Director :Kathiresan
Music Label- Five Star Creations 

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2