Enna vilai azhage lyrics in Tamil

 காதலர் தினம் திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன விலை அழகே பாடல் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற,காதலியை போற்றும் பாடலாகும். காதலர் தினம் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் எ.ஆர். ரஹ்மான். பாடலை பாடியவர் உன்னி மேனன்.பாடலுக்கான வரிகளை எழுதியவர் வாலி. படத்தை இயக்கியவர் இயக்குனர் கதிர்

Enna vilai azhage lyrics
image source youtube,com

என்ன விலை அழகே

என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்


 என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


படைத்தான் இறைவன்
உனையே மலைத்தான் உடனே
அவனே அழகைப் படைக்கும்
திறமை முழுக்க உன்னுடன்
சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி


விரைவினில் வந்து
கலந்திடு விரல்பட மெல்லக்
கனிந்திடு உடல் மட்டும் இங்கு
கிடக்குது உடன் வந்து நீயும்
உயிர் கொடு


பல்லவன் சிற்பிகள்
அன்று பண்ணிய சிற்பத்தில்
ஒன்று பெண்ணென வந்தது
இன்று சிலையே (2)
உந்தன் அழகுக்கில்லை ஈடு


என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


உயிரே உனையே
நினைத்து விழிநீர் மழையில்
நனைந்து இமையில் இருக்கும்
இரவு உறக்கம் கண் விட்டுப்
போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம்
நஞ்சாச்சு தினம் தினம் உனை
நினைக்கிறேன் துரும்பென
உடல் இளைக்கிறேன்


உயிர் கொண்டு
வரும் பதுமையே உனைவிட
இல்லை புதுமையே உன் புகழ்
வையமும் சொல்ல சிற்றன
வாசலில் உள்ள சித்திரம்
வெட்குது மெல்ல உயிரே


உன் புகழ்
வையமும் சொல்ல
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச் நானும்
சேரும் நாள்தான்


என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


Song credits:
Song title -Enna Vilai Azhage
Movie -  Kadhalar Dhinam
Music -  A.R. Rahman
Singers: Unni Menon
Lyrics:  Vaali
Starring :Kunal,sonali
Director :Kathir


No comments:

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...