Kalyaana Melam Song Lyrics in Tamil

கல்யாண மேளம் பாடல் வரிகள்

படம் : தெய்வ மச்சான் 
பாடியவர்  : ஆனந்த் அரவிந்தக்ஷன்
இசை : காட்வின் ஜே கோடன்
பாடல் வரிகள்   : கபிலன்
Image source https://www.youtube.com/watch?v=KNS7jE3PPm0
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே


ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே


குழு : கையில் மருதாணி
காதில் திருகாணி
ஆண் : பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ…


மச்சானின் வீட்டுக்குள்
தங்கச்சி வாழ சீர் வாங்கவே….
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம்


அழகாய் சீர் செட்டு
கூர புடவயா காஞ்சிப்பாட்டு
கழுத்தில் நகை நட்டு
அட பலபல வரிசை தட்டு


தாலிக்கொடி வாங்கிட போறோம்
தங்கச்சி தான் வாழ்ந்திடவே….


கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
குழு : கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே


குழு : மஞ்ச பூசிவச்சி
குங்கும பொட்டு வச்சி
பந்த காலு நடுவோம்
மாமன் சீரிருக்க
ஊரே சேர்ந்திருக்க
ஆலம் சுத்தி வருவோம்
மாட்டு கொம்பு ரெண்டு
ஆட்டும் மணியோச
பாட்டு பாடி மச்சிவோம்


தெம்மாங்கு கச்சேரி
அம்மானின் காதில்
நான் கேட்கிறேன்
மின்சாரம் எங்கேயும்
கண்ணாடி கோலம்
நான் பார்க்கிறேன்


பல நாள் ஆசை தான்
அது பலித்தது தாயே தாயே
ஓர் பூ மீது
சிறு பனித்துளி நீயே நீயே


சந்தானத்தில் நீந்திடும் தங்கை
சந்தோஷத்தை நான் அறிந்தேன்


கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே


ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே


கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே..


குழு : கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஆண் : ஓஓஓ…

 Kalyaana Melam Song Lyrics in English

Song credits:
Song title -Kalyaana Melam
Movie - Deiva Machanm
Music - Godwin J Kodan
Singers:Anand Aravindakshan
Lyrics:  Kabilan
Starring : Vimal
Director :
Music Label: Tips Tamil


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2