Onnoda Nadantha song lyrics in Tamil

 வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற ஒன்னோட நடந்தா பாடல் வரிகள் பாடலுக்கான இசை   இளையராஜா,பாடல் வரிகள் சுகா, பாடியவர்கள் தனுஷ் மற்றும் அனன்யா பாத். நடிகர்கள் சூரி மற்றும்  பவானி ஸ்ரீ


ஒன்னோட நடந்தா பாடல் வரிகள் 

தனுஷ் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
அனன்யா : நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!

தனுஷ் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!

அனன்யா : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!

தனுஷ் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!

அனன்யா : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே


தனுஷ் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!

அனன்யா : காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது

தனுஷ் : முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

தனுஷ் : நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

அனன்யா : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
தனுஷ் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

அனன்யா : ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ

அனன்யா : ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே

தனுஷ் : நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது

தனுஷ் : நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்

அனன்யா : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

தனுஷ் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
அனன்யா : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே


தனுஷ் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே



Onnoda nadantha lyrics video
 
Song credits: 

Song title- Onnoda nadantha  
Movie -Viduthalai Part 1 
Music - Ilaiyaraaja 
Singers:Dhanush, Ananya Bhat 
Lyrics : suka 
Starring : Soori,Bhavani Sri 
Director : Vetri Maaran
Music label:Sony music south

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2