Ponmalai pozhudhu lyrics in Tamil

 பொன்மாலை பொழுது பாடல் வரிகள் 

படம் -நிழல்கள் 
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசை  : இளையராஜா
பாடல் வரிகள்  : வைரமுத்து 


ஹே ஹோ ஹும் ல ல லா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்


இது ஒரு பொன் மாலை பொழுது
ஹ்ம் ஹே ஏ ஓ.. ஹ்ம்ம்  ம்ம் ம்ம் ம்ம்


ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்


வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ


இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது


வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்


ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன்


இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஏ ஹேய் ஹோ ஹூம்... ல ல லா
ஹ்ம் ஹே ஏ ஓ.. ஹ்ம்ம்  ம்ம் ம்ம் ம்ம்

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2