Idhayathai Edho Ondru Lyrics in Tamil

 இதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் 

Idhayathai Edho Ondru Lyrics in Yennai Arindhaal 

Idhayathai Edho Ondru Lyrics


இதயத்தை ஏதோ

ஒன்று இழுக்குது கொஞ்சம்

இன்று இதுவரை இதுபோலே

நானும் இல்லையே


கடலலை போலே

வந்து கரைகளை அள்ளும்

ஒன்று முழுகிட மனதும்

பின் வாங்கவில்லையே


இருப்பது ஒரு மனது

இதுவரை அது எனது என்னைவிட்டு

மெதுவாய் அது போக கண்டேனே


பெண் : இது ஒரு கனவு நிலை

கலைத்திட விரும்ப வில்லை

கனவுக்குள் கனவாய் என்னை

நானே கண்டேனே


எனக்கென்ன வேண்டும்

என்று ஒரு வாா்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று

என சொல்லும் நாளும் என்று  (2)


மலா்களை அள்ளி

வந்து மகிழ்வுடன் கையில்

தந்து மனதினை பகிா்ந்திடவே

ஆசை கொள்கின்றேன்


தடுப்பது என்ன

என்று தவிக்குது நெஞ்சம்

இன்று நதியினில் இலை

என நான் தோய்ந்து செல்கின்றேன்


அரும்புகள் பூவாகும்

அழகிய மாற்றம் ஆயிரம்

ஆண்டாக பழகிய தோற்றம்


ஒரு வெள்ளி கொலுசு

போல இந்த மனசு சினுங்கும்

கீழ அணியாத வைரம் போல

புது நாணம் மினுங்கும் மேல  (2)


இதயத்தை ஏதோ

ஒன்று இழுக்குது கொஞ்சம்

இன்று இதுவரை இதுபோலே

நானும் இல்லையே


கடலலை போலே

வந்து கரைகளை அள்ளும்

ஒன்று முழுகிட மனதும்

பின் வாங்கவில்லையே


இருப்பது ஒரு மனது

இதுவரை அது எனது என்னைவிட்டு

மெதுவாய் அது போக கண்டேனே


இது ஒரு கனவு நிலை

கலைத்திட விரும்ப வில்லை

கனவுக்குள் கனவாய் என்னை

நானே கண்டேனே


ஒரு வெள்ளி கொலுசு

போல இந்த மனசு சினுங்கும்

கீழ அணியாத வைரம் போல

புது நாணம் மினுங்கும் மேல

Unakenna venum sollu male version

Song credits

Song title - Idhayathai Edho Ondru
Movie - Yennai Arindhaal  
Music: Harris Jayaraj
Singer :Chinmayi
Lyrics:Thamarai
Starring: Ajith Kumar,Anushka
Director: Gautham Vasudev Menon
Music Label- SonyMusicSouthVEVO

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2