Kundarathile Kumarakukku Kondattam Song Lyrics in Tamil

 Kundarathile Kumarakukku Kondattam Song Lyrics in Dheivam


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடல் வரிகள்

படம் : தெய்வம் 

பாடியவர் : பெங்களூர் ரமணியம்மாள்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

பாடல் வரிகள் : கண்ணதாசன் 


குன்றத்திலே

குமரனுக்கு கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா

பெண்களெல்லாம்

வண்டாட்டம் கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு

கொண்டாட்டம் அங்கே

குவிந்ததம்மா பெண்களெல்லாம்

வண்டாட்டம் கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு

கொண்டாட்டம்


தெய்வயானை

திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெய்வயானை திருமணமாம்

திருப்பரங்குன்றம் தெரு முழுதும்

பக்தர்களின் ஆனந்தமன்றம்

தெரு முழுதும் பக்தர்களின்

ஆனந்தமன்றம்


தங்கம் வைரம்

பவழம் முத்து தவழும்

தெய்வானை தங்கம்

வைரம் பவழம் முத்து

தவழும் தெய்வானை

தாங்கி கொண்டாள் வாங்கி

கொண்டாள் முருகப் பெம்மனை

தாங்கி கொண்டாள் வாங்கி

கொண்டாள் முருகப் பெம்மனை

முருகப் பெம்மனை


குன்றத்திலே

குமரனுக்கு கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா

பெண்களெல்லாம்

வண்டாட்டம் கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு

கொண்டாட்டம்


உருகிச் சொல்லுங்கள்

முருகனின் பேரை நெருங்கிச்

செல்லுங்கள் குமரனின் ஊரை

உருகிச் சொல்லுங்கள்

முருகனின் பேரை நெருங்கிச்

செல்லுங்கள் குமரனின் ஊரை


குழு : வேல் முருகா வெற்றி

வேல் முருகா வேல் முருகா

வெற்றி வேல் முருகா


சந்தனம் பூசுங்கள்

குங்குமம் சூடுங்கள் சந்தனம்

பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்

ஹர ஹர பாடுங்கள் வருவதை

பாருங்கள் ஹர ஹர பாடுங்கள்

வருவதை பாருங்கள்


கந்தனுக்கு வேல்

வேல் முருகனுக்கு வேல்

வேல் கந்தனுக்கு வேல்

வேல் முருகனுக்கு வேல்

வேல்


குழு : கந்தனுக்கு வேல்

வேல் முருகனுக்கு வேல்

வேல் கந்தனுக்கு வேல்

வேல் முருகனுக்கு வேல்

வேல்


குழு : { வேல் முருகா

வெற்றி வேல் முருகா

பெண் : அரோகரா } (3)


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2