New York Nagaram Lyrics in Tamil

 New York Nagaram Song Lyrics in Sillunu Oru Kadhal

நியூயார்க் நகரம்

உறங்கும் நேரம் தனிமை

அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும்

கரையில் நடந்தது


நான்கு கண்ணாடி

சுவர்களுக்குள்ளே நானும்

மெழுகுவர்த்தியும் தனிமை

தனிமையோ கொடுமை

கொடுமையோ


நியூயார்க் நகரம்

உறங்கும் நேரம் தனிமை

அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும்

கரையில் நடந்தது


நான்கு கண்ணாடி

சுவர்களுக்குள்ளே நானும்

மெழுகுவர்த்தியும் தனிமை

தனிமையோ தனிமை

தனிமையோ கொடுமை

கொடுமையோ


பேச்செல்லாம்

தாலாட்டுப் போல என்னை

உறங்க வைக்க நீ இல்லை

தினமும் ஒரு முத்தம் தந்து

காலை காபி கொடுக்க நீ இல்லை


விழியில் விழும்

தூசி தன்னை எடுக்க நீ

இங்கு இல்லை மனதில்

எழும் குழப்பம் தன்னை

தீர்க்க நீ இங்கே இல்லை


நான் இங்கே

நீயும் அங்கே இந்த

தனிமையில் நிமிஷங்கள்

வருஷம் ஆனதேனோ


வான் இங்கே

நீலம் அங்கே இந்த

உவமைக்கு இருவரும்

விளக்கமானதேனோ ஓ ஓ


நியூயார்க் நகரம்

உறங்கும் நேரம் தனிமை

அடர்ந்தது பனியும் படர்ந்தது



நாட்குறிப்பில் நூறு

தடவை உந்தன் பெயரை

எழுதும் என் பேனா எழுதியதும்

எறும்பு மொய்க்க பெயரும்

ஆனதென்ன தேனா


சில்லென்று பூமி

இருந்தும் இந்த தருணத்தில்

குளிர்காலம் கோடை

ஆனதேனோ


வா அன்பே நீயும்

வந்தால் செந்தணல் கூட

பனிகட்டி போல மாறுமே

யே யே யே யே


நியூயார்க் நகரம்

உறங்கும் நேரம் தனிமை

அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும்

கரையில் நடந்தது


நான்கு கண்ணாடி

சுவர்களுக்குள்ளே நானும்

மெழுகுவர்த்தியும் தனிமை

தனிமையோ தனிமை

தனிமையோ கொடுமை

கொடுமையோ


New York Nagaram Lyrics

Song credits
Song title - New York Nagaram
Movie - Sillunu Oru Kadhal
Singer :A.R. Rahman
Lyrics: Vaali
Starring:Surya

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2