Sempattu Poove Song Lyrics in Tamil
படம் : புருஷ லட்சணம்
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
பாடல் வரிகள் : காளிதாசன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே….
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே….
ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் பாடும் கீதம் சொல்லிலா
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே….
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே….
ஆண் : காஞ்சி பட்டுடுத்தி
நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ
கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்
புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே….
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே….
பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே
புதுவித போதை துள்ளியதே…ஏ…..
காதல் பள்ளியிலே படித்திட
ஆசை சொல்லியதே….ஏ…..
பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்
என் விழியில் உன் முகம்தான்
வென்றது வா வா வா
பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்
ஸ்ரீரங்கனாதருக்கே…ஹோய்
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்
என்னுயிர் ராமனுக்கே…ஹோய்
பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா
இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் கீதம் காதல் சொல்லிலா
ஆண் : ஆ…..ஆ……ஆ…செம்பட்டுப்பூவே
வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே….
Kakkai siraginile nandhalala lyrics
படம் : புருஷ லட்சணம்
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
பாடல் வரிகள் : காளிதாசன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நீ வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆண் : ஆ…..பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்
தேனூறும் முத்தம் தெளிச்சு…..ஆ……ஆங்….
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நீ வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்
தோகை விரித்துக் கொண்டு
ஏங்கி தவிப்பது இன்று யாராலே
பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்
தாளம் அடிக்கும் வண்ணம்
ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே
ஆண் : அழகான மங்கை
ஒரு அதிகாலை கங்கை
அடி உனக்கே என் இன்பம் மொத்தமே
பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்
ஆண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நான் வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
பெண் : ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையே
மூக்கு சிவப்பதென்ன வீணாக
ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி
நீந்தி பிடிக்க வந்தேன் நானாக
பெண் : உயிரோடு தஞ்சம்
என் உடல் போடும் மஞ்சும்
நீ தினந்தோறும் முத்து குளிக்க
ஆண் : தாராளம் தாராளம்
தாகம் மனதினில் ஏராளம்
ஆண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நான் வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
பெண் : பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்
தேனூறும் முத்தம் தெளிச்சு…..
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண் : நீ வந்ததாலா….
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா
ஆண் : ம்ம்ம்ஹூம்…ஹூம்..ஹூம்
No comments:
Post a Comment