Senthazham Poovil Song Lyrics in Tamil

 Senthazham Poovil Song Lyrics in Mullum Malarum


image source https://www.youtube.com/watch?v=Rp6Sy8R6q9Y

ம்ம்ம் ம்ம்ம்ம்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்


{ செந்தாழம் பூவில்

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா } (2)


பூ வாசம் மேடை

போடுதம்மா பெண்போல

ஜாடை பேசுதம்மா

{ அம்மம்மா ஆனந்தம் } (2)


வளைந்து நெளிந்து

போகும்பாதை மங்கை மோக

கூந்தலோ மயங்கி மயங்கி

செல்லும் வெள்ளம் பருவ

நாண ஊடலோ


ஆலங்கொடி மேலே

கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது காடுகள்

மலைகள் தேவன் கலைகள்


{ செந்தாழம் பூவில் } (2)

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா


அழகு மிகுந்த

ராஜகுமாரி மேகமாக

போகிறாள் ஜரிகை

நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்


பள்ளம் சிலா்

உள்ளம் என ஏன்

படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி

இறைவன் ஆட்சி


{ செந்தாழம் பூவில் } (2)

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா


இளைய பருவம்

மலையில் வந்தால் ஏகம்

சொர்க்க சிந்தனை இதழை

வருடும் பனியின் காற்று

கம்பன் செய்த வர்ண்தனை


ஓடை தரும்

வாடை காற்று வான்

உலகை காட்டுது உள்ளே

வரும் வெள்ளம் ஒன்று

எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன்

அற்புத காட்சி


{ செந்தாழம் பூவில்

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா } (2)


பூ வாசம் மேடை

போடுதம்மா பெண்போல

ஜாடை பேசுதம்மா

{ அம்மம்மா ஆனந்தம் } (2)

Mullum Malarum Adi penne song lyrics 

Song credits

Song title -Senthazham Poovil
Movie -  Mullum Malarum
Music:   Ilaiyaraaja
Singers :K.J. Yesudas
Lyrics : Kannadasan
Starring:Sarathbabu,Shobana
Director:Mahendran

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2