Aval Varuvala Movie Songs Lyrics

 
Aval Varuvala Movie Songs Lyrics

Oh Vanthathu Penna Song Lyrics in Aval Varuvala
ஓ வந்தது பெண்ணா பாடல் வரிகள்


பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்
பாடல் வரிகள்: பழநிபாரதி 


ஆண் : ஓ வந்தது
பெண்ணா வானவில்
தானா பூமியிலே பூ
பறிக்கும் தேவதை தானா
காதலிலே என் மனதை
பறித்தது நீதானா

ஆண் : உன் பேரே
காதல் தானா
தில்லானா போட
வந்த மானா உன்
பேரே காதல் தானா
தில்லானா போட
வந்த மானா

ஆண் : ஓ வந்தது
பெண்ணா வானவில்
தானா ……..

ஆண் : வாலிபத்தை
கிள்ளுதடி உந்தன்
அழகு வாசனைகள்
பூசுதடி வண்ண கனவு

ஆண் : கண்ணுக்குள்ளே
மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது
எந்தன் மனது

ஆண் : சொல்லாமல்
நூறு கதை சொல்லும்
உறவு சூடாக ஆனதடி
காதல் இரவு

ஆண் : என்னோடு
தான் நான் இல்லையே
எல்லாமே நீ தானே

ஆண் : உன் பேரே
காதல் தானா
தில்லானா போட
வந்த மானா

ஆண் : ஓ வந்தது
பெண்ணா வானவில்
தானா ……..

ஆண் : என் ஆசை
உனக்குள்ளே இருக்காதா
விட்டுவிட்டு இருதயம்
துடிக்காதா

ஆண் : உன் கூந்தல்
மெல்ல என்னை
மூடாதா உன் காற்றை
என் மூச்சு தேடாதா

ஆண் : என் தூக்கம்
உந்தன் கண்ணில்
கிடைக்காதா என்
சிரிப்பு உன் இதழில்
பூக்காதா

ஆண் : என் நெஞ்சிலே
தோன்றும் இசை உன்
நெஞ்சில் கேட்காதா

ஆண் : உன் பேரே
காதல் தானா
தில்லானா போட
வந்த மானா

ஆண் : ஓ வந்தது
பெண்ணா வானவில்
தானா பூமியிலே பூ
பறிக்கும் தேவதை தானா
காதலிலே என் மனதை
பறித்தது நீதானா

ஆண் : உன் பேரே
காதல் தானா
தில்லானா போட
வந்த மானா உன்
பேரே காதல் தானா
தில்லானா போட
வந்த மானா


Kaadhal Enna Kannamoochi Song Lyrics in Aval Varuvala
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா பாடல் வரிகள்


பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்
பாடல் வரிகள்: பழநிபாரதி 

ஆண் : { காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா } (2)

ஆண் : கண்ணுக்குள்
பாரம்மா நீயின்றி
யாரம்மா கோவங்கள்
இன்னும் இங்கு ஏனம்மா

ஆண் : காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா ஓ ஓ

ஆண் : கூந்தல் வருடும்
காற்று அது நானா இருந்தேன்
தெரியாதா கொலுசு கொஞ்சும்
பாட்டு அதன் பல்லவி ஆனேன்
புரியாதா

ஆண் : சின்ன சின்ன
மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும்
மொழிதான் வெண்ணிலவு
சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும்
அதுதான்

ஆண் : பனிப்பூவில்
வாசமாய் கலந்தேனே
நானம்மா

ஆண் : காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா ஓ

ஆண் : நிலவை உரசும்
மேகம் அந்த நிலவை
நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும்
பருகாதா

ஆண் : நீ முடிந்த
பூவில் ஒரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு
நினைத்தேன் நீ நடந்த
மண்ணெடுத்து சிலநாள்
சந்தனத்தின் வாசம் அதில்
நுகர்ந்தேன் நிழல் தீண்டும்
போதிலும் மனதோடு வேர்க்கிறேன்

ஆண் : { காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா } (2)

ஆண் : கண்ணுக்குள்
பாரம்மா நீயின்றி
யாரம்மா கோவங்கள்
இன்னும் இங்கு ஏனம்மா

ஆண் : காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம்ம்

Selaiyila Veedu Kattava Song Lyrics in Aval Varuvala
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பாடல் வரிகள்


பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்
பாடல் வரிகள்: பழநிபாரதி 

ஆண் : சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க

பெண் : ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க

ஆண் : மூக்குத்தியின்
மின்னல் ஒரு தீபம்
ஏற்றிவைத்துப் போக

பெண் : சொக்குகின்ற
வெட்கம் வந்து வண்ணக்
கோலமொன்று போட

ஆண் : என்னை நான்
உன்னிடம் அள்ளி கொடுக்க

ஆண் : சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க

பெண் : ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க

ஆண் : தாவணி நழுவினால்
இதயமும் நழுவுதே

பெண் : அசந்ததும் உன்
விழி அழகினைத் திருடுதே

ஆண் : ஓவியத்தைத் திரை
மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா

பெண் : காற்று மழைச் சாரலிலே
நனையவிட்டால் நியாயமா

ஆண் : ரசிக்க வந்த
ரசிகனின் விழிகளை
மூடாதே

பெண் : விழியை மூடும்
போதிலும் விரல்களாலே
தேடாதே

ஆண் : சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க

பெண் : ஹோ ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க

பெண் : மன்மதன் சந்நிதி
முதன்முறை பார்க்கிறேன்

ஆண் : அதனால் தானடி
பனியிலும் வேர்க்கிறேன்

பெண் : முத்தங்களின்
ஓசைகளே பூஜைமணி
ஆனதே

ஆண் : செவ்விதழின்
ஈரங்களே தீர்த்தம் என்று
தோணுதே

பெண் : காலநேரம் என்பது
காதலில் இல்லையா

ஆண் : காமதேவன்
கோயிலில் கடிகாரங்கள்
தேவையா

ஆண் : சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க

பெண் : ஹோ ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க

ஆண் : மூக்குத்தியின்
மின்னல் ஒரு தீபம்
ஏற்றிவைத்துப் போக

பெண் : ஹா ஆ ஆசொக்குகின்ற
வெட்கம் வந்து வண்ணக்
கோலமொன்று போட

ஆண் : என்னை நான்
உன்னிடம் அள்ளி கொடுக்க

ஆண் : சேலையில வீடு
கட்டவா சேர்ந்து வசிக்க

பெண் : ஜன்னல் வெச்ச
ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க


No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...