Kadhal Kaditham Song Lyrics in Jodi
காதல் கடிதம் தீட்டவே பாடல் வரிகள்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பாடகி : எஸ். ஜானகி
பாடகா் : உன்னி மேனன்
பாடல் வரிகள்: வைரமுத்து
பெண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம் வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள் இரவு பகல்
எப்பொழுதும் அஞ்சல்
உன்னைச் சோ்ந்திடும்
ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம் வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள் இரவு பகல்
எப்பொழுதும் அஞ்சல்
உன்னைச் சோ்ந்திடும்
பெண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம் வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும்
பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில்
ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
ஆண் : பொன்னே உன்
கடிதத்தைப் பூவாலே
திறக்கின்றேன் விரல்
பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ
பெண் : அன்பே உந்தன்
அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண் : ஹோ வானின் நீலம்
கொண்டு வா பேனா
மையோ தீா்ந்திடும்
ஆண் : ம்ம்ம்… கண்ணே உன்
கால் கொலுசில் மணியாக
மாட்டேனா மஞ்சத்தில்
உறங்கும்போது சினுங்க மாட்டேனா
பெண் : ஆ… காலோடு
கொலுசல்ல கண்ணோடு
உயிரானாய் உயிரே நான்
உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
ஆண் : தப்பு செய்யப்
பாா்த்தால் ஒப்புக்
கொள்வாயா மேலாடை
நீங்கும் போது வெட்கம்
என்ன முந்தானையா
ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
ஆண் : ஓ….வானின்
நீலம் கொண்டு வா
பேனா மையோ
தீா்ந்திடும் சந்திரனும்
சூாியனும் அஞ்சல்காரா்கள்
ஆண் & பெண் : இரவு பகல்
எப்பொழுதும் அஞ்சல்
உன்னைச் சோ்ந்திடும்
ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண் : ஓ….வானின்
நீலம் கொண்டு வா
பேனா மையோ
தீா்ந்திடும்
ஆண் : ஹோ
Oru Poiyavadhu Song Lyrics in Jodi
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பாடகா் : ஹாிஹரன்
பாடல் வரிகள்: வைரமுத்து
ஆண் : { ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)
ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம் அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்….
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்
ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண் : இரவினைத் திரட்டி
ஓ… ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ…..
ஆண் : விண்மீன் விண்மீன்
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ….
ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ காதல்
கண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
சொல்லில் அந்த சொல்லில்
{ உயிா் வாழ்வேன் } (3)
Velli Malarae Song Lyrics in Jodi
வெள்ளி மலரே பாடல் வரிகள்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
பாடல் வரிகள்: வைரமுத்து
பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ
ஆண் : { இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2)
பெண் : ஓ….ஓ….ஓ…
ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே
ஆண் : மின்னொளியில்
மலா்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன
காதல் பூக்கள் நெஞ்சுடைந்த
பூவே நில்
பெண் : ஏ வெட்கங்கெட்ட
தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும்
பேதமில்லை ஆடைகொள்ளப்
பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்
ஆண் : வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்
பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே
பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
பெண் : வனங்களில் பூந்தளிா்
தேடும்போதும் நதிகளில்
நீா்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
ஆண் : தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும் நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
பெண் : மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான் இரவிலும்
அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு
உயிா் நான்
ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே
பெண் : நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ
ஆண் : இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே
No comments:
Post a Comment